Ad Code

12th tamil unit-1

 

12th Tamil Unit-1

12th Tamil இயல்-1 Book back Question And Answer Guide


******************************************

இளந்தமிழே
-சிற்பி பாலசுப்பிரமணியம்

பாடநூல் வினாக்கள்

1. மீண்டுமந்தப் பழமைதலம் புதுக்கு தற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,

)பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது 

உ) பொதிகையில் தோன்றியது
 ங)வள்ளல்களைத் தந்தது

அ) க மட்டும் சரி
ஆ) க, உ இரண்டும் சரி 
இ) உ மட்டும் சரி
ஈ) க, ங. இரண்டும் சரி
******************************************

குறுவினா

1.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

        செந்நிறத்து வானம் போல சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி. 
******************************************

சிறுவினா 

1) "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்
 செந்திறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்"
         -தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக?

        *கதிரவன் தன் கதிர்களைச் சறுக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை .
       *ஆனால் கவிஞர் செம்மை மிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் தன் தலை சாய்க்கிறான்
என்கிறார். 
     *கதிரவனின் கதிரொளி பட்டுவானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட  விளக்குகிறார்.
******************************************

நெடுவினா

1.தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக?

     இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார் .
*செம்மை மிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது.

 *உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய் காணப்படுகிறது.

*இக்காட்சி எல்லாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே என் துணை வேண்டும்.

*பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே!
* தமிழே! நீ பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய் .பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்.

*உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ் குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல் வா குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா! என்று சிற்பி தமிழின் சீரிளமையைத் திறம் வியந்து பாடுகிறார்.
******************************************
இலக்கணக் குறிப்பு

செம்பரிதி, செந்தமிழ், செந்நிறம் : பண்புத்தொகை

முத்து முத்தாய் : அடுக்குத்தொடர்

சிவந்து : வினையெச்சம்

வியர்வை வெள்ளம் : உருவகம்
******************************************
இயல்-1

தன்னேர் இலா தமிழ் (தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்)


பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்" இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்?

அ) அடி மோனை, அடி எதுகை 
ஆ) சீர் மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை, சீர் மோனை
ஈ) சீர் எதுகை, அடியோனை

******************************************
சிறுவினா

1."ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக :-

இடம். :
         இப்பாடலின் அடி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். 
*இதன் ஆசிரியர் தண்டி அவர்
பொருள் : 
            மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே பொதிகையில் பிறந்த சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் இருளைப்போக்கும் தமிழே உனக்கு நிகர் இல்லை என்கிறார்.
   *கடலால் சூழப்பட்ட இந்நிலவுலகின் இருளைப் போக்கும் கதிரவனைப் போல அகஇருளைப் போக்கும் தமிழ்மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை என்பதாகும்.

******************************************

2.பொருள் வேற்றுமை அணியைச் சான்று தந்து விளக்குக:-

*அணி இலக்கணம்:-

          செய்யுளில் கவிஞர் இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறியப்பின் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும் இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.

சான்று:-

        ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று
 ஏனையது தன்னேர் இலாத தமிழ்.
அணிப்பொருத்தம்:-
        கதிரவனும், தமிழ்மொழியும் மலையில் தோன்றுகின்றன என ஒப்புமையைக்கூறி, அவற்றுள் தமிழ்மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இவ்வுலகில் இல்லை என்று வேறுபடுத்திக் காட்டியதால் இப்பாடல் பொருள் வேற்றுமையணி ஆகும். கதிரவன் புற இருளை அகற்றும் தமிழ்மொழி அக இருளை அகற்றும்.
விளக்கம்:-
            கதிரவன் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றும் கதிரவன் உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றும் தமிழ் குளிர்ச்சிப் பொருந்திய பொதிய மலையில் தோன்றிய தமிழ் மொழி மக்களின் அறியாமை என்னும் அக இருளை அகற்றும் அத்தமிழ்மொழிக்கு நிகராக வேறெந்த மொழியும் இல்லை.

******************************************

இலக்கணக் குறிப்பு

வெங்கதிர் : பண்புத்தொகை

உயர்ந்தோர் : வினையாலணையும் பெயர்

இலாத : இடைக்குறை

******************************************

இயல் - 1 
தமிழ் மொழியின் நடை அழகியல் 
உரைநடை உலகம்

-தி.சு. நடராசன்


1.இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் போகின்ற இலக்கண நூல் அ) யாப்பருங்கலக்காரிகை 
இ) தொல்காப்பியம்
ஆ) தண்டியலங்காரம்
 ஈ) நன்னூல்
******************************************
2. கருத்து 1 : இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2
இ) இரண்டு கருத்தும் சரி
ஈ) கருத்து ! சரி 2 தவறு
******************************************
3.பொருத்துக
அ)தமிழ் அடிகியல் - பரலி சு.நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ - தி, சு. நடராசன்
இ) கிடை. - சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ) உய்யும் வழி-கி. ராஜநாராயணன்
அ) 4, 3, 2, 1 
ஆ) 1,4, 2, 3 
இ) 2, 4,1, 3
ஈ) 2, 3, 4, 1
******************************************

குறுவினா

1.நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக
 * நடைபெற்றியலும் (கிளவியாக்கம், 26) என்றும் நடை நவின்றொழுகும் (செய் 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறார். *கவிதையின் இயங்காற்றல்தான் நடை என்கிறது தொல்காப்பியம்.
*மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக, இலக்கியத்துக்காகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.
******************************************
2. படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யாளைக் கலிமான் பேசு" - இச் சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக :-

ஓசை நயமிக்கச் சொற்கள்
          படாஅம் ஈத்த, 
கெடா நல்லிசை, சூடி யானை, 
நல்லிசை.
இலக்கணக் குறிப்புகள்
படாஅம், கெடாஅ, கடாஅ : செய்யுளிசையளபெடைகள்
ஈத்த : பெயரெச்சம்
நல்லிசை :பண்புத்தொகை

******************************************
3.விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க:-
       பூத்துக் குலுங்கும் பூக்களின் மணத்திலும் பறவைகளின் ஒலிகளிலும் விடியலின் வெளிச்சமாக உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின் வனப்பை எடுத்துரைக்கும்.

******************************************

Post a Comment

2 Comments

Ad Code