Ad Code

12th tamil unit-6 Book back question and answer

                 12th Tamil Unit-6

12th Tamil இயல்-6 Book back Question And Answer Guide

இலக்கணத் தேர்ச்சி கொள்

1.ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத்தம் உரையில் குறிப்பிட்ட
அ) சிவஞான முனிவர்
ஆ) மயிலை நாதர் 
ஈ) இளம்பூரணர்
இ) ஆறுமுக நாவலர் 
விடை : ஆ) மயிலை நாதர்

2.கூற்று 1 : காப்பியம் என்னும் சொல் காப்பு + இயம் எனப் பிரிந்து 
மா காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச் சிதையாமல் காப் என்றெல்லாம் பொருள் தருகிறது
கூற்று 2 : ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று நீலகேசி.
 அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 2 சரி, கூற்று 1 தவறு 
 ஈ) இரண்டும் தவறு
 இ)இரண்டும் சரி : 
விடை;அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

3.சரியானவற்றைப் பொருத்தித் தேர்க
1. 2
அ) காதை 1.கந்தபுராணம்
ஆ) சருக்கம் 2.சீவக சிந்தாமணி
இ) இலம்பகம் 3)சூளாமணி - 
ஈ) படலம் 4 .silapathikaram
அ) 4, 3, 2, 1
இ) 3, 4, 2, 1
ஆ) 3, 4, 1, 2
ஈ) 4, 3, 1, 2
விடை : அ) 4, 3, 2, 1

4.தவறான இணையைத் தேர்க
பாவகை இலக்கியம்
அ) விருத்தப்பா 1.நாலடியார்
ஆ) ஆசிரியப்பா 2.அகநானூறு
இ) கலிவெண்பா 3)தூது- 
ஈ) குறள் வெண்பா 4 .
திருக்குறள்

விடை : அ) விருத்தப்பா-நாலடியார்

குறுவினா

1.காப்பியம் எத்தனை வகைப்படும் அவை யாவை ?
*காப்பியம் இரண்டு வகைப்படும்
அவை:
*பெருங்காப்பியம்
 *சிறுகாப்பியம்

2.காப்பியத்தை குறிக்கும் பிற பெயர்கள் யாவை?

*காப்பியத்தைக் குறிக்கும் பிற பெயர்கள்

         தமிழில் காப்பியம் என்னும் இலக்கிய வகை பாட்டுடைச் செய்யுள்,
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், சரிதம், புராணம். கதை, மாக்கதை, கதை, காவியம், மாக்கவி, மாபெரும் காப்பியம் முதல் பல்வேறு பெயர்களில்
வழங்கப்பட்டு வருகிறது.

3.காப்பியச் சிற்றுறுப்புகள் சிலவற்றை எழுதுக?

              காதை, சருக்கம், இலம்பகம், படலம் முதலானவை காப்பியச் சிற்றுறுப்புகள் ஆகும்.

4.பாவிகம் விளக்குக?

பாவிகம்

காப்பியத்தின் பண்பாகப் 'பாவிகம்' என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது. காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக்
கருத்தினையே பாவிகம் என்பது பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப்" என்பது கம்பராமாயணத்தின் பாவிகம்.

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
 உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்.
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் .
என்பது சிலப்பதிகாரத்தின் பாவிகம்,

நம்மை அளப்போம்

1 ஆர்ப்பரிக்கும் கடல் அதன் அடித்தளம் மௌனம் ; மகா மௌனம் - அடிகள் புலப்படுத்துவது
அ) இரைச்சல்
ஆ) குறைகுடம் கூத்தாடும்
இ) நிறைகுடம் நீர்த்தழும்பல் இல்
ஈ) புற அசைவுகள் அகத்திணை அசைக்க இயலாது 
விடை: ஈ) புற அசைவுகள் அகத்திணை அசைக்க இயலாது

2.ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல் தொடர்களில் வெளிப்படும் செய்திகள்
1.மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்
2. ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினால்
 ஆ) 1 தவறு 2 சரி
) 1 சரி 2 தவறு
இ) 1 தவறு 2 தவறு
ஈ) 1 சரி 2 சரி
விடை : ஈ) 1 சரி 2 சரி 

3. பொருத்துக
பாவகை இலக்கியம்
அ) ஆமந்திரிகை 1.பட்டத்து யானை
ஆ) அரசு உவா 2) மூங்கில்
இ) கழஞ்சு 3இடக்கை வாத்தியம்
ஈ) கழை
4 .எடை அளவு

 அ) 3, 1, 4, 2
 இ) 1, 2, 3, 4
ஆ) 4, 2, 1, 3
 ஈ) 4, 3, 2, 1
விடை : அ) 3, 1, 4, 2

4. வேறுபட்டதைக் குறிப்பிடுக ?
அ) அண்மைக் காட்சித் துணிப்பு
ஆ) சேய்மைக் காட்சித் துணிப்பு 
இ)நடுக் காட்சித் துணிப்பு 
ஈ) காட்சி மறைவு
விடை : ஈ) காட்சி மறைவு

குறுவினா 

1.எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?

         சிரிப்பு, அழுகை, சிறுமை, வியப்பு, அச்சம், பெருமை, சினம், மகிழ்ச்சி என் மெய்ப்பாடு எண் வகைப்படும்.

2.பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும்?
சான்று?தருக

*பின்னணி இசை, திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவி
கலையாகும்.
 *பின்னணி இசை சேர்ப்பு, சில வேளைகளில் மவுனமும் திரையில்
உணர்வுகளை வெளிக்கொணர உதவுகின்றன.
 எடுத்துக்காட்டாக
                   கதைநாயகி சன்னல் வழியாகத் தலையை நீட்டி வெளியே தெரியும் ஒரு காட்சியை வெறித்துப் பார்க்கிறேன் எனில், தெரு காட்டப்படுவதில்லை. அவர் தெருவைப் பார்ப்பது மட்டுமே காட்டப்படுகிறது. அக்காட்சியில் ஒரு மகிழுந்து புறப்பட்டுச் செல்லும் ஒலி இணைக்கப்படுகிறது. இதில் அவளைப் பார்க்க வந்தார் அவள் விருப்பத்திற்கு மாறாக அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார் என்ற கதை அப்பெண்ணின் முகபாவனை மூலமே சொல்லப்படுகிறது.

3.ஒருமுக எழினி, பொருமுக எழினி - குறிப்பு எழுதுக?
   ஒருமுக எழினி
                  ஒருமுக எழினி என்பது மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு முகத்திரை ஆகும்
பொருமுக எழினி
               பொருமுக எழினி என்பது மேடையின் இருபுறத்தில் இருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத் திரையாகும்.

4. மூச்சு நின்றுவிட்டால்

"பேச்சும்

அடங்கும்" - கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக?

      'தூங்கையிலே வாங்குகிற மூச்சு சுழிமாறிப் போனாலும் போச்சு'

     “எரியறத புடுங்கினா கொதிக்கிறதும் அடங்கும்'.

சிறுவினா

1.நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக?
* திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளில் இருந்து மாறுபடாத நன்னிலத்தை ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். 
*பொதிகை மலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களே
ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தார்.

*நூல்களில் கூறப்பட்ட முறையாலே அரங்கம் அமைத்தனர் தம் கைப்பெருவிரலில் இருபத்து நான்கு. அளவினைக் கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினார்.

*அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டு அதில் ஏழுகோல் அகலம் எட்டுக்கோல் நீளமும் ஒருகோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கை அமைத்தனர் .

*அரங்கில் உள்ள தூணிற்கு மேல் வைத்த உத்திரப் பலகைக்கும் தளத்தில் இருக்கும் பலகைக்கும் இடையே, இடைவெளி நான்குகோல் அளவாக இருந்தது.

*அரங்கின் உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஏற்ற அளவுகளுடன் இரு வாயில்கள் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. 

*அரங்கின் மேல்நிலை மாடத்தில் ஐம்பூதங்களைச் சித்தரித்தும், தூண்களின் நிழலானது. அவையிலும் நாடக அரங்கிலும் விழாதபடி அழகான நிலைவிளக்குகளையும் நிறுத்தினர்.

* ஒருமுகத்திரை, பொருமுகத்திரை. கந்துவரல் திரை ஆகிய மூன்றையும் சிறப்புடன் அமைத்தனர்.

*ஓவிய வேலைப்பாடுமிக்க மேல்விதானத்தையும் அமைத்து. சிறந்த முத்துமாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர்.

*இவ்வாறு ஒவ்வொன்றையும் புதுமையாகவும் சிறப்பான வேலைப்பாடுகளுடனும் அமைத்தனர்.


2.ஏதேனும் இரண்டு மெய்ப்பாடுகள் தோன்றுவதற்கான சூழ்நிலைகளைக்
கற்பனையாகப் படைக்க?

இடம் : வகுப்பறை

                    ஆசிரியர் மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டுத் தேர்விற்கான விடைத் தாள்களை வழங்கிக் கொண்டு இருக்கிறார். அவனும் வருகிறான். ஆசிரியர் பேசுகிறார். மாணவர்களே ! இவர்தான் இத்தேர்வின் கதாநாயகன், தமிழ்ப்பாடத்தில் 0க்கு 100 எடுத்துள்ளார். ஆச்சரியம் நான் எப்படித் தேர்வு எழுதவேண்டும் என்று சொன்னேனோ அப்படியே எழுதியுள்ளான். ஒற்றுப்பிழை. சந்திப்பிழை, மயங்கொலிப்பிழை, சொற்றொடர்ப்பிழை எதுவுமில்லாமல் குறித்த அளவில் சரியான வகையில் எழுதியுள்ளான். எனக்கு இவனை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். அம்மாணவனை நாற்பது மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் பாராட்டியது அவனுக்குப் பெருமையாக இருந்தது. வசிஷ்டர் வாயிலே பிரம்மரிஷி பட்டம் பெற்ற விசுவாமித்திரர் போல அவன் நின்றான். பெருமிதம் என்னும் மெய்ப்பாடு வெளிப்படும் சூழல் இது 

அச்சம்.

இடம் : வகுப்பறை

                 ஆசிரியர் விடைத்தாள் கட்டுகளோடு வருகிறார். விடைத்தாள்களை வழங்குமுன் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார். "தேர்ச்சி பெறாத மாணவர்கள் பெற்றோர்களை நாளைக்கு அழைத்து வரவேண்டும். கண்டிப்பாக'' என்கிறார் விடைத்தாளை வழங்கிக் கொண்டிருக்கிறார். வகுப்பறையில் கடைசி பெஞ்சில்
கடைசி மாணவன் தான் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருப்பேன் என்று தெரியாமல் அஞ்சிக் கொண்டிருக்கிறான். அடுத்தது என்னுடையதா? அடுத்தது என்னுடையதா? என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். நாற்பது மாணவர்கள் முப்பத்து ஒன்பது முடிந்துவிட்டது. கடைசி ஆளாய் அம்மாணவன் வருகிறான் பயந்து கொண்டே. ஆசிரியர் திட்டுவாரோ? அப்பா அடிப்பாரோ? அம்மா வைவாரோ? எத்தனை மதிப்பெண்களோ? என்று அச்சப்பட்டுக் கொண்டே வருகிறான். அச்சம் என்னும் மெய்ப்பாடு தோன்றும் சூழல் இது 

3.திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக? 
  காட்சியின் ஆற்றல்
          *காட்சி என்பது கதை நகர்வுக்கு உதவுவது .
*திரைப்படத்தில் காட்சிகள் சிறப்பாக அமைந்தால் வசனத்திற்குக்கூட   இரண்டாம் இடம்தான்.
*நாடகத்தில் விளக்கை அணைத்தும், திரையை இறக்கியும் காட்சி மாற்றத்தைக் காண்பிப்பார்கள்.
* ஆனால் திரைப்படத்தில் வசனம் இன்றிக் காட்சிகளை அடுத்தடுத்து வைப்பதன் மூலம் கதை சொல்வார்கள்

டுத்துக்காட்டு 

             முதல் காட்சியில் தோழி ஒருத்தி கதாநாயகியிடம் தொடர்வண்டிப் பயணச் சீட்டைக் கொடுப்பாள்; அடுத்த காட்சியில் கதாநாயகி தொடர்வண்டியில் இருப்பாள் "எண் 7. வீரையா தெரு.." என்று ஒருவர் முகவரியைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த முகவரியில் சென்று காட்சி நிற்கும்.

              அடுத்த காட்சி விளையாட்டு அரங்கம் எனில், அங்கு எழும் ஒலிகள் முதல் காட்சி முடிவதற்கு முன் தொடங்கிவிடும். காட்சிகள் மாறுவதை உணர்த்த ஒரு காட்சியைச் சிறிது சிறிதாக மங்கலாகக் காட்டி இருள் ஆக்கிக் காட்டுவர். இதைக் காட்சி மறைவு என்பார்கள். அடுத்த காட்சி தொடங்கும்போது இருட்டாக இருந்த பகுதி சிறிது சிறிதாக வெளிச்சமாக மாறி முழுக்காட்சியும் வெளிப்படும். இதனைக் காட்சி உதயம் என்பார்கள்.

                ஒரு காட்சி மறையும்போதே அடுத்த காட்சி தெரியத் தொடங்கும். இதனைக் கலவை/கூட்டு என்பார்கள், பழைய காட்சியை அழித்துக் கொண்டே அடுத்த காட்சி தோன்றுவதை அழிப்பு என்பார்கள் இவ்வாறு பலவேறு உத்திகளைக் கொண்டு காட்சி ஆற்றலை மேம் படுத்துகிறார்கள்.

நெடுவினா

1.திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் பார்வையைக் கட்டுரையாக்குக ?

முன்னுரை

               திரைப்படம் என்பது தனி ஒருவன் முயற்சியால் உண்டானதல்ல. பல ஆயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பால் உண்டாவது. திரைப்படத்துறை என்பது லட்சக்கணக்கான மக்களை வாழ வைத்துக் கொண்டிருப்பது. அதன் சிறப்பு என்ன என்பதை இக்கட்டுரையின் மூலம் என் பார்வையைப் பதிவு செய்கிறேன் .
திரைப்படத்துறை ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழில்

                 ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேண்டும். மூன்று மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படம் உருவாக்கம் தொடர்பான பணிகள் செய்யப் பல்லாயிரக்கணக்கான பணியாளர் வேண்டும். இது பல படங்கள் பல மொழிகளில், பல நாடுகளில் பணிக்கு மொழி வேறுபாடு கிடையாது. எந்த மொழிக்காரரும் எந்த மொழியிலும் பணியாற்றலாம்.
இப்படிப் பலப்பல தேவைகளைக் கொண்ட திரைப்படத்துறை லட்சக்கணக்கான குடும்பங்கள், லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றிக் கொள்ளும் தொழிலாக உள்ளது. கிளாட் அடிக்கும் மனிதன் முதல் போஸ்டர்' ஒட்டும் மனிதன் வரை பல இனங்களில் தாற்றில், பல வகையில் செயல்படுவது திரைப்படத்துறை,

கலைகளின் சங்கமம்/
              எத்தனை எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் ஒரு சில படங்கள் பேசப்படுவையாக உள்ளன. சில படங்கள் காலத்தை வென்றும் வாழ்கின் அமரகாவியம் உள்ளது, ஏன்? என்று சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை நடிகை விளங்கும். அதுதான் 'கலைகளின் சங்கமம். பூக்கின்ற மலர்கள் எல்லாம் மணப்பதில்லை. படைக்கப்படுகின்ற படங்கள் எல்லாம் பாராட்டப்படவில்லை ஆயிரம் படங்கள் வந்தாலும் ஐந்து அல்லது ஆறு படங்கள்தான் கலைநயம் மிக்க கலைகளின் சங்கமமாகக் காணப்படுகிறது. ஆஸ்கார் விருதுகளை அள்ளி குவிக்கிறது

             எந்த ஒரு பெற்றோரும் தன் பிள்ளையை அனைவரும் புகழ்வதை விரும்புவர். அதுபோல் எந்த ஒரு இயக்குநரும் தம் படங்களைப் பார்த்தேன் பாராட்ட வேண்டும் என்று விரும்புவர், சாதாரணமான படங்கள் காணாம போய்விடும். ஆனால் கலைகளின் சங்கமமாக இருந்தால் பாராட்டைப் பெற் தீரும். பல காலம் வாழும்.

 என் கருத்து

              திரைப்படத்துறை ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழில்தான். அதில் சந்தேகம் ஏதுமில்லை.அதை நம்பியே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன உண்மைதான். ஆனால் திரைப்படம் வாழவேண்டுமானால் அது கலைகளின் சங்கமமாக இருக்க வேண்டும். திரைப்படத்துறை கலைகளின் சங்கமமாக இருக் வேண்டும்

சிறப்பு, தொழிலில் இல்லை 
சங்கமத்தில்தான் உள்ளது. 
எனவே திரைப்படத்துறை கலைகளின் சங்கமமாக வேண்டும் என்பதே என் எண்ணம் பதிவு.

2.மகாநடிகரைக் கண்ட பாலசந்திரனின் மனவோட்டத்தை நயத்துடன் எழுதுக ?
முன்னுரை

                  நடிப்புலகின் சக்கரவர்த்தி என எல்லாம் வியக்கின்ற மகத்தான நடிகர் சிவாஜி கணேசன். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிர் அளித்துத் தன் வசனத்தாலும் உடல் அசைவுகளாலும் உருட்டுவிழி நகர்வாலும் காண்பவர்களைக் கட்டிப் போட்டுவிடுகின்ற கலைஞர், நவரச உணர்வுகளைத் தன் முகம் குறிப்புகளாலும் உடல் மொழிகளாலும் சிறப்பாக வெளிப்படுத்தி நடித்த மகாநடிகன் அந்த மகாநடிகரைக் கண்ட பாலச்சந்திரனின் மனவோட்டத்தைக் காண்போம்.
 நினைவலைகள்

         சென்னையில் அரண்மனை போன்ற சிவாஜி கணேசன் வீட்டிற்குள்
பாலசந்திரனும் அவரின் நண்பர்களும் சிவாஜியுடன் ஒன்றாக உணவு அருந்திய போது பாலச்சந்திரனின் மனதில் இன்று மதியம் மிகச்சரியாக மூன்று மணிக்குள் ராதா பிக்சர்ஸ் பேலசின் வெள்ளித் திரையில் தென்னிந்தியத் திரைப்பட நடிப்புச் சக்கரவர்த்தி, தமிழ்நாட்டின் பெருமையின் புகழ்க்கொடி நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிக்கும் தங்கப்பதக்கம்'' என்று கேரள நகரின் வீதிகளில் சிவாஜி கணேசனின் பெருமைகளைச் சொல்லிக் குரல் வயிற்றுப் பிழைத்த அந்தப் பழைய 18 வயது பாலசந்திரன் நினைவலைகளில் மிதந்தான்

சிவாஜியின் அரண்மனை வீடு 
சிவாஜியின் வீடு அரண்மனை போன்று இருந்தது. சிற்ப வேலைப்பாடுகள் செய்த மிகப்பெரிய கதவு. உள்ளே வரவேற்பரையில் இரண்டு பெரிய யானை தந்தங்கள் இருந்தன. இடப்புறம் மேலே செல்ல, பெரிய மாடிப்படிகள் மாடியின் ஒரு திருப்பத்திலுள்ள சுவரில் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் வீரத்தையும் கம்பீரத்தையும் கொட்டி முழங்கிய சிவாஜி கணேசன்.

ஆயில் பெயிண்ட் செய்யப்பட்ட படம். அடுத்த திரைப்படத்தில் உடைவாள் உருவின நிலையில் சத்ரபதி சிவாஜி. வலது பெருவிரலால் மீசை முறுக்கி மந்தகாசப் புன்னகையுடன் நிற்கும் இராஜராஜசோழன் ஒருபுறம். ஒருபுறம் கண்ணாடி அறைக்குள் செவாலியர் விருது டன் கூடிய மிகப்பெரிய வெள்ளைக்குதிரை இவற்றை எல்லாம் கண்டு பாலசந்திரன் நடுங்கிப்போய் வணங்கி ரசித்தப்படி நிற்கிறார்

சிங்கநடை 
               ஒரே சீராய் அடி எடுத்து வைத்து. ஒவ்வொரு பாத அடி வைக்கும் போதும் மறுதோள் முன்னோக்கிச் சாய, தலை நிமிர்ந்து, நெஞ்சு விரிந்து. இசைக்கு அசைப்பது போல கைகள் வீசி, பார்வை இமை அசையாது மெல்ல மெல்லச் சிங்க நடை நடந்து வரும் அந்த மகா நடிகரைப் பார்த்த பொழுது ராஜராஜ சோழனின் வருகையைப் பார்த்த தமிழ்நாட்டுத் தெருப்பிள்ளைகளைப் போல பாலசந்திரனும் ராஜீவ்நாத்தும் எழுந்து காலில் விழுந்து வணங்கினார்

மன அடுக்குகளில் சிவாஜியின் கதாபாத்திரங்கள்

                   சிவாஜியும் ராஜீவ்நாத்தும் கதையையும் கதாபாத்திரத்தையும் பற்றிப் பேசிக் கொண்டிருக்க பாலசந்திரன் சிவாஜியின் புருவங்களையும் கண்களையும் முக அபிநயங்களையும் உதடுகளையும் கைவிரல்களையும் தாள, லய அபிநயங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்

ஊழித் தாண்டவமாடும் ருத்ரன், கவசம் குண்டலம் கொடுத்த கர்ணன் காளமேகத்தில் கவிதை ததும்பச் செய்த கவிகுல குரு காளிதாசன், அமிழ்தத் தமிழ் மொழியின் உன்னதக் கவியான பாரதி, தாய்த்தமிழ் மண்ணின் வீரதீரச் சந்ததியான வீரபாண்டிய கட்டபொம்மன். சோழ குலோத்துங்கச் சூரியனான ராஜராஜ சோழன் என சிவாஜியின் கதாபத்திரங்கள் பாலசந்திரனின் மன அடுக்குகளில் மின்னி மறைந்தது.

 கவிக்கு மரியாதை

என் இயக்குநர் ராஜீவ்நாத்திடம் 'இவர் யாரு' என்று என்னைக் கேட்டபோது
இவர் கவிஞர் என்று சொன்னவுடன் என் முன்னால் இரு கைகளையும் கூப்பி அவர் மென்மையாய்ச் சொன்னார் கவிஞரா! வணக்கம், எனக்கான மரியாதை அல்ல அது காவியக் கலையிடம் மூத்த திராவிடனுக்கு இருக்கும் ஆழ்ந்த ஆதரவையும் மரியாதையையும்தான் அவர் காண்பித்தது .

சிங்கக் கர்ஜனை

என் இயக்குநர் ராஜீவ் நாத் சிவாஜி கணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனத்தில் ஒரு வசனம் எங்களுக்காகச் சொல்ல முடியுமா என்று கேட்டபோது நடந்த அதிசயம் சிவாஜிகணேசன் மெதுவாக் குனிந்து. இடது கையால் வேட்டியின் தலைப்பைப் பிடித்து, மெதுவாக நிமிர்ந்து சட்டென விஸ்வரூபமெடுத்தது.
போலத் திரும்பி நின்றது. நாங்கள் மிரண்டு போனோம். உயரம் குறைவான வயதான. எங்களிடம் இவ்வளவு நேரம் இயல்பாய்ப் பேசிக்கொண்டிருந்த சிவாஜி கணேசன் அது. மனித ஆத்மாவை நடுநடுங்க வைத்த வீரபாண்டிய கட்டபொம்மன் தான் அது, சூரியன் அஸ்தமனம் ஆகாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியான ஜாக்சன் துரை க்கு நேராக ஆதித் தமிழக வீர பௌருஷத்தில் சிங்கக் கர்ஜனை அது 

பாலசந்திரனைப் பாராட்டும் மகாநடிகன்

"இலங்கையில் போர்க்கொடிகள் பறக்கட்டும்... யானை ஆயிரம், ரதம் ஆயிரம்

குதிரைகள் இரண்டாயிரம், காலாட்படை ஒரு கோடி. ஆ.... நானே வெல்வேன் என்று ராவண வசனத்தை பாலசந்திரன் சொல்லி முடித்ததும், தான் ஒரு மாபெரும் நடிகன் என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டு முதன் முதலாய் ஒரு நாடக வசனம் கேட்டும் சாதாரண மனிதனைப் போல கைதட்டிப் பாராட்டினார் சிவாஜி.

முடிவுரை

விருந்து முடித்து. சிவாஜியின் வீட்டிலிருந்து திரும்பி, சீறிப்பாயும் காரில் உட்கார்ந்திருக்கும் போதும் பாலசந்திரனின் இதயத்தில் தெருக்களில் கொரோனா விற்றுப்பிழைத்த அந்த பழைய பையனின் சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

3. உங்கள் ஊர்ப்பகுதியில் வாழும் கலைஞர் ஒருவரை நேரில் பார்த்த அனுபவத்தை விவரித்துக் கட்டுரையாக்குக?

                 எங்கள் ஊரான கோவையில் நான் வாழும் வீட்டிற்கு அருகில் வாழ்ந்து வரும் சிற்பக்கலைஞர், ஓவியக்கலைஞர் திரு. இராசகோபால் அவர்களைச் சந்திக்க எண்ணினேன். அவர் தொலைபேசி எண்ணை எடுத்துப் பேசினேன், "ஐயா வணக்கம். உங்களைச் சந்திக்க வரலாமா? என்றேன். வாருங்கள் ! இன்று நான் வீட்டில்தான் இருக்கிறேன் என்றார். நானும் பழங்கள் வாங்கிக் கொண்டுகலைஞரைச் சந்திக்கச் சென்றேன்

              வீட் டின் முன்பகுதியில் மான், குரங்கு. நாய் சிலைகள் தத்ரூபமாக இருந்தது கண்ணால் பருகிக் கொண்டே உள்ளே சென்றேன். நீளமான அறை. மேலே நிறையப் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. பல்வேறு உருவங்கள் உடைய கலைநயம் மிக்க வண்ணப்படங்கள் சுவரில் மாட்டப்பட்டிருந்தன. கோட்டோவியங்கள் உண்டு

                 ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே நின்றேன். மெய்மறந்து போனேன்.
செல்வம்! குரல்கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். கலைஞர் நின்று கொண்டிருந்தார். அய்யா | நலமாக உள்ளீர்களா? விசாரித்தபடியே பழங்களைக் கொடுத்தேன். நான் நலம், நீங்கள் எப்படி உள்ளீர்கள்? குழந்தைகள் நலமா? என விசாரித்தார். நான் அவர் வீட்டுக்கு அடிக்கடி சென்றாலும் ஒரு கேள்வியைக் கேட்க நினைப்பேன். ஆனால் மறந்துவிடுவேன். இன்று கேட்டே ஆக வேண்டும் என்று கேட்டுவிட்டேன். எப்படி உங்களால் இப்படிச் செய்ய முடிகிறது. ஓவியம், சிலை சிற்பம் எல்லாம் மிகத் தத்ரூபமாக உள்ளது, எங்கு படித்தீர்கள்? எத்தனை காலம் பயிற்சி எடுத்துக் கொண்டீர்கள்? என்ன சிறப்புத் தகுதி என்றேன் நான் அவர் சொன்னார். செல்வம்! என் அப்பா இந்தத் தொழில்தான் செய்தார். நானும் அவரைப் பின்பற்றி இந்தப் புனிதமான தொழில் செய்து வருகிறேன். தனியாகப் படிக்கவில்லை. வாழ்க்கையைப் படிக்கிறேன் என்றார். எனக்குப் புரியவில்லை அவரே தொடர்ந்தார். எந்தப் பொருளையும் நான் சாதாரணமாகப் பார்க்க மாட்டேன் உற்றுப் பார்த்தேன். ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்தேன். அதன் தொடர்ச்சிதான் என் மனம், கைகள், கருவிகள் எல்லாம். உற்று நோக்கல் - ஈடுபாடு - முழுமையாகத் தெரிந்துகொள்ளல் இந்த மூன்றும்தான் என்னை முன்னேற வைத்துள்ளது. ஆனால் இக்கலையை நான் தொழிலாக செய்யவில்லை. சேவையாகச் செய்து வருகிறேன், பணம் வாழ்க்கைக்குத் தேவைதான். பணமே வாழ்க்கை அல்ல என்பதைப் புரிந்து   கொண்டுள்ளேன். என் மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம் என்றார். 
             அவர்முன்னேற்றத்தின் அடிப்படை எனக்குப் புரிந்துவிட்டது. வணக்கம் சொல்லி     அங்கிருந்து நான் புறப்பட்டேன்.


தமிழாக்கம் தருக

 Popular as the Cultural Capital of India. Tamil Nadu is extremely well-known for its marvellous tempies and other architectural gems. The state rose to prominence primarily because of its well-known and outstanding Tanjore Paintings that flourished ai the tamr of Chola dynasty an ancient Tanjaveoe. In this traditional an form, the paintings showcase the embellished form of the sacred deities of the region. The deities in the paintings are festooned with plus pieces. pearls. semi-precious stones, and gold and ather vibrant colours. In the mountain times. Tanjore paintings look up to human figures animals. floral motifs and thirst as mums

இந்தியக் கலாச்சாரத்தின் தலைநகரம் என்ற புகழைத் தமிழகம் பெற்றிருக்கிறது தமிழகம் கோயில்கள் மற்றும் கட்டடக்கலைகளால் நன்கு புகழ்பெற்று விளங்குகிறது அதன் பெருமைகளில் முதன்மையாகக் காணப்படுவது காலத்தை வென்று நிற்கும் சோழப் பேரரசுகளின் கலாச்சாரத்தைப் பறைசாற்றுகின்ற தஞ்சாவூர் ஓவியங்கள் அவை கோயிலை அலங்கரித்தன. கண்ணாடித் துண்டுகள், முத்துக்கள். தங்க முலாம் மற்றும் மின்னும் வண்ணங்களால் ஓவியங்கள் காணப்படுகின்ற தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டது, தஞ்சை ஓவியங்கள் காணப்படுகின்ற மனித உருவங்கள் விலங்குகள், மலர்கள், பறவைகள் போன்ற சிறப்பியல்புகளால் நவீன காலத்திலும் கலை தேவதையாகத் தஞ்சை ஓவியம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.


கீழ்க்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத் தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக

எ.கா.கபிலன் திறமையானவர் என்று .. .குமார்) தெரியும் 
*கபிலன் திறமையானவர் என்று குமானுக்குத் தெரியும்

1.நேற்று முதல்....அணை)நீர்மட்டம் உயாந்து வருகிறது

       *நேற்று முதல் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
 
2.உங்களுக்கு .................... (யார்) நன்மை என நினைக்கிறீர்கள்

*உங்களுக்கு யாரால் நன்மை என நினைக்கிறீர்கள்

3. முருகன்.........வேகம்) சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை *முருகன் வேகமாகச் சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை

நம்முடைய ....தேவை) அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும் நம்முடைய தேவையின் அளவு குறைந்தால் மகிழ்ச்சி பெருகும்

பொருள் வேறுபாடு அறிந்து தொடரமைக்க 
எ.கா :களம், கலம்

*போர்க்களத்தில் புண்பட்ட வீரர்களுக்கு கலத்தில் நீர் தரப்பட்டது

1.வலம், வளம் 
*ஆற்றின் வலப்புறம் உள்ள வயல்கள் நீர் வளத்தால் செழித்திருந்தது.

1.புல்-புள்

*புள்ளினங்கள் ஆர்க்கும் புலர்காலைப் பொழுதில் புல் நுனிகளில் பனி

குவிந்திருக்கும்

2. உழை -உளை 
*உளையில் புதைந்தாலும் உழைத்துக்கொண்டு இருப்பது உழவனின் சிறப்பாகும்

3. கான்-காண்
* அடர்ந்த கான் பகுதிகளில் தாவித்திரியும் கலைமான் கூட்டங்களைக் கண்டால் சுகம்.

4.ஊன்,ஊண்
*நாம் அன்பால் வளர்த்த ஆட்டைக் கொன்று அதன் ஊனினை ஊராகக் கொள்வது உயர்வு தானா

5. தின்மை - திண்மை
* எவர்க்கும் எக்காலத்திலும் தின்மை செய்யாது வாழ்வதே வாழ்விற்கு திண்மை சேர்க்கும்.

Post a Comment

1 Comments

Ad Code