6th social Science Tern-2 Book back Question - answer -
அலகு-1 பொருளியல் –ஓர் அறிமுகம்
முதல் நிலைத் தொழில்கள்
உணவுத் தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வது முதல் நிலைத் தொழில்கள் எனப்படுகிறது.
- வேளாண்மை
- கால்நடைகள் வளர்த்தல்
- மீன் பிடித்தல்
- சுரங்கத் தொழில்
- கனிகள், கொட்டைகள், தேன், மூலிகைகள், ரப்பர், பிசின் போன்றவை சேகரித்தல் மற்றும் மரம் வெட்டுதல்.
இரண்டாம் நிலைத் தொழில்கள்
முதல் நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் முதல் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் இயந்திரங்கள்மூலம் உற்பத்தி செய்யப்படுவது இரண்டாம் நிலை தொழில்கள் (தொழில் துறை) என்று அழைக்கப்படுகின்றன.
உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள், மூலதனம், உடமை ஆகியவற்றின் அடிப்படையில் தொழில்கள் வகைப்படுத்தப்படுகின்றன.மூலப்பொருள் பயன்பாடு அடிப்படையில்தொழிற்சாலைகளை வகைப்படுத்துதல்.
- வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள் – பருத்தி, சர்க்கரை, உணவுபதப்படுத்துதல்.
- காடுசார்ந்த தொழிற்சாலைகள் – காகிதத்தொழில், மரச்சாமான்கள், கட்டுமானப் பொருள்கள்.
- கனிமத் தொழிற்சாலைகள் – சிமெண்ட், இரும்பு, அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள்.
- கடல்சார் தொழிற்சாலைகள் – கடல் உணவு பதப்படுத்துதல்.
மூன்றாம் நிலைத் தொழில்கள்
முன்னர் கூறிய இரண்டு நிலைகளில், குறிப்பாக தொழில் துறையில், பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உற்பத்திப் பொருள்களை தேவையான மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கும் தேவையான சேவைகளை வழங்குவதால் இவை சேவைத் துறை தொழில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளையும் சேவைத் துறை வழங்குகிறது.
- போக்குவரத்து – சாலை, ரயில், கடல், ஆகாயப் போக்குவரத்துகள்.
- தொலைத் தொடர்பு – அஞ்சல், தொலைபேசி, தகவல் தொழில்நுட்பம்.
- வர்த்தகம் – பொருள்களைக் கொள்முதல் செய்தல், விற்பனை செய்தல்.
- வங்கி – பணப் பரிமாற்றம், வங்கிச் சேவைகள்.
பயிற்சிகள்
I) கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் _______________.
2. ‘தேன் சேகரித்தல்,’ என்பது _______________ தொழில்.
3. மூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது _______________ எனப்படும்.
4. காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின் _______________.
5. தமிழ்நாட்டில் _______________ சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
II) பொருத்துக.
1. கால்நடைகள் வளர்ப்பு–இரண்டாம்நிலைத் தொழில்
2. உணவு பதப்படுத்துதல்– சேவை
3. இரும்பு எஃகுத் தொழிற்சாலை–முதல்நிலைத் தொழில்
4. தொலைபேசி– வேளாண்சார் தொழிற்சாலை
5. பருத்தியாலை –மூன்றாம்நிலைத் தொழில்
III) பொருத்திய பின் பொருந்தாத இணையைக் கண்டறிக.
1. சிறிய அளவிலான தொழிற்சாலை –பண பரிவர்த்தனை
2. காடுசார்ந்த தொழிற்சாலைகள்– தகவல் தொழில்நுட்பம்
3. சேவைகள் – காகிதத் தொழிற்சாலைகள்
4. வங்கி– கால்நடைகள் வளர்ப்பு
IV) சரியான விடையைக் கண்டறிக.
1. வேளாண்மை என்பது (முதன்மை / இரண்டாம் )நிலைத் தொழிலாகும்.
2. பொருளாதார நடவடிக்கைகள் (உடைமை / பயன்பாடு) அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
3. சர்க்கரை ஆலை (முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்.
4. வேளாண்மைசார் தொழிற்சாலை (பருத்தி யாலை / மரச்சாமான்கள்).
5. பால்பண்ணை ஒரு (பொது நிறுவனம் / கூட்டுறவு துறை).
V) கீழ்கண்ட வினாக்களுக்கு சுருக்கமாக விடை தருக.
1. சந்தை – வரையறு.
2. பண்டமாற்றுமுறை என்றால் என்ன?
3. வணிகம் என்றால் என்ன?
4. சேமிப்பு என்றால் என்ன?
5. பணம் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் யாது?
6. நீர்நிலைகளுக்கு அருகில் குடியிருப்புகள் வளர்ச்சியடைதற்கான காரணம் என்ன?
7. இரண்டாம்நிலைத் தொழில்கள் என்று எவற்றை அழைக்கின்றோம்?
8. நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில்கள் எவை?
VI) கீழ்கண்ட வினாக்களுக்கு விரிவாக விடை எழுதுக.
1. உனது மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய முதல்நிலைத் தொழில்களைப் பட்டியலிடுக.
2. உனது மாவட்டத்தில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைகளைக் குறிப்பிடுக.
3.மூலப்பொருள் பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு தொழிற்சாலைகள் வகைப்படுத்தப்படுகின்றன?
4. சேவைத்துறையில் காணப்படும் தொழில்களை எழுதுக.
5. நகரங்களின் அம்சங்களாக நீ அறிவன யாவை?