6th Social Science term-3 Book back Question and answer
- Tamil Medium
- One mark Questions with answer
- Two mark questions guide
- Full guide
- History lesson -1
பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் book back question and answer
சங்க காலம்
சங்கம் என்னும் சொல் மதுரைப் பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ்ப் புலவர்களின் குழுமத்தைச் சுட்டுகிறது. இப்புலவர்கள் இயற்றிய பாடல்கள் மொத்தமாகச் சங்க இலக்கியம் என அறியப்படுகிறது. இப்பாடல்கள் இயற்றப்பட்ட காலம் சங்க காலம் என அழைக்கப்படுகின்றது.
சான்றுகள் :
- கல்வெட்டுக்கள் : கலிங்கநாட்டு அரசன் காரவேலனுடைய ஹதிகும்பா கல்வெட்டு, புகளூர் (கரூர்க்கு அருகே) கல்வெட்டு, அசோகருடைய இரண்டு மற்றும் பதிமூன்றாம் பேராணைக் கல்வெட்டுக்கள். மேலும் மாங்குளம், அழகர் மலை, கீழவளவு ஆகிய ஊர்களிலுள்ள (இவ்வூர்கள் அனைத்தும் மதுரைக்கு அருகேயுள்ளன) கல்வெட்டுக்கள்.
- செப்புப் பட்டயங்கள் :வேள்விக்குடி மற்றும் சின்னமனூர் செப்பேடுகள்.
- நாணயங்கள்:சங்க காலத்தைச் சேர்ந்த சேர, சோழ பாண்டிய அரசர்களாலும், குறுநில மன்னர்களாலும் வெளியிடப்பட்ட நாணயங்களும், ரோமானிய நாணயங்களும்
- பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள்:புதைவிடங்கள், நடுகற்கள் அகழ்வாய்விலிருந்து பொருட்கள் கிடைத்த இடங்கள்ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், புகார், கொற்கை, அழகன்குளம், உறையூர்.
- இலக்கியச் சான்றுகள் :தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி ஆகியவை. சிலப்பதிகாரம் – மணிமேகலை ஆகிய காப்பியங்கள்.
- அயல்நாட்டவர் குறிப்புகள் :எரித்திரியக்கடலின் பெரிப்ளஸ் (The Periplus of Erythrean Sea) பிளினியின் இயற்கை வரலாறு (Natural History) தாலமியின் புவியியல் (Geography), மெகஸ்தனிஸின் இண்டிகா, ராஜாவளி, மகாவம்சம், தீபவம்சம் ஆகியன.
- தொல்காப்பியம் ஒரு தமிழ் இலக்கண நூலாகும். அது சங்க காலத் தமிழ் மக்களின் மொழி, பாண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
- கால அளவு:கி.மு. (பொ.ஆ.மு) 3 ஆம் நூற்றாண்டு முதல் – கி.பி. (பொ.ஆ) 3 ஆம் நூற்றாண்டு வரை
- தமிழகத்தின் புவியியல் பரப்பு:வடக்கே வேங்கடம் (திருப்பதி) முதல் தெற்கே கன்னியாகுமரி வரை. கிழக்கிலும், மேற்கிலும் கடல்களை எல்லைகளாகக் கொண்டிருந்தது.
- காலம்:இரும்புக் காலம்
- பண்பாடு: பெருங்கற்காலப் பண்பாடு
- அரசுமுறை :முடியாட்சி
- ஆட்சி புரிந்த அரச வம்சங்கள் :சேரர், சோழர், பாண்டியர்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் என்பார் .தமிழ்மொழியானது இலத்தீன் மொழியின் அளவிற்குப் பழைமையானது எனும் கருத்தைக் கொண்டுள்ளார். ஏனைய மொழிகளின் செல்வாக்கிற்கு உட்படாமல் முற்றிலும் சுதந்திரமான ஒரு மரபாகஅது உருபெற்று எழுந்துள்ளது என அவர் கூறுகிறார்.
முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள்
- உதயன் சேரலாதன்
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
- சேரன் செங்குட்டுவன்
- சேரல் இரும்பொறை.
- முக்கியத்துவம் வாய்ந்த சோழ அரசர்கள்
- இளஞ்சேட்சென்னி
- கரிகால் வளவன்
- கோச்செங்கணான்
- கிள்ளிவளவன்
- பெருநற்கிள்ளி
முக்கியத்தவம் வாய்நத பாண்டிய அரசர் கள்
- நெடியோன்
- நன்மாறன்
- முதுகுடுமிப் சபருவழுதி
- நெடுஞ்செழியன்.
பாடச் சுருக்கம்
- சங்கம் என்னும் சொல் புலவர்களின் குழுமத்தை குறிக்கிறது. இவ்வமைப்பு மதுரையில் பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கியது.
- சங்க காலத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் தமிழகப்பகுதிகளை ஆட்சி செய்தனர்.
- இம்மூன்று முடியரசர்களுக்கு அப்பாற்பட்டு, தமிழகப் பகுதிகள் பல்வேறுசுதந்திரமான குறுநில மன்னர்களாலும் ஆளப்பட்டன.
- தொல்லியல் அகழ்வாய்வுகள் தமிழகத்திற்கும் அயல் நாடுகளுக்கும் இடையே இருந்த வணிக உறவுகளைஉறுதி செய்கின்றன.
- கி.பி. (பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சங்க காலம் முடிவுறத் தொ டங்கியது. தமிழகத்தைக் களப்பிரர்கள் கைப்பற்றினர். அவர்களின் ஆட்சிக்கான ஆதாரங்கள் சமண, பௌத்தஇலக்கியங்களில் காணப்படுகின்றன.
பயிற்சி
I சரியான விடையைத் தேர்வு செய்க
1. தமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________
அ. பாண்டியன் நெடுஞ்செழியன்
ஆ. சேரன் செங்குட்டுவன்
இ. இளங்கோ அடிகள்
ஈ. முடத்திருமாறன்
2. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை
அ. பாண்டியர்
ஆ. சோழர்
இ. பல்லவர்
ஈ. சேரர்
3. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.
அ. சாதவாகனர்கள்
ஆ. சோழர்கள்
இ. களப்பிரர்கள்
ஈ. பல்லவர்கள்
4. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.
அ. மண்டலம்
ஆ. நாடு
இ. ஊர்
ஈ. பட்டினம்
5. குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது?
அ. கொள்ளையடித்தல்
ஆ. ஆநிரை மேய்த்தல்
இ. வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்
ஈ. வேளாண்மை
II. கூற்றை வாசிக்கவும், சரியான விடையை (✓) செய்யவும்
1. கூற்று: புலவர்களின் குழுமம் சங்கம் என அறியப்பட்டது.
காரணம் : சங்க இலக்கியங்களின் மொழி தமிழாகும்.
அ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ. கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி; காரணம் தவறு.
ஈ. கூற்றும் காரணமும் தவறானவை.
2. கீழ்காணும் கூற்றுகளில் எவை உண்மையானவை அல்ல?
1. கரிகாலன் தலையாலங்கானம் போரில் வெற்றி பெற்றான்.
2. பதிற்றுப்பத்து சேர அரசர்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.
3. சங்க காலத்தைச் சேர்ந்த பழைமையான இலக்கியங்கள் பெரும்பாலும் உரைநடையில் எழுதப்பட்டன.
அ. ‘1’ மட்டும்
ஆ. ‘1 மற்றும் 3’ மட்டும்
இ. ‘2’ மட்டும்
3. பண்டைக்காலத் தமிழகத்தின் நிர்வாகப் பிரிவுகள் ஏறுவரிசையில் இவ்வாறு அமைந்திருந்தது
அ. ஊர் < நாடு < கூற்றம் < மண்டலம்
ஆ. ஊர் < கூற்றம் < நாடு < மண்டலம்
இ. ஊர் < மண்டலம்< கூற்றம் < நாடு
ஈ. நாடு < கூற்றம் < மண்டலம் < ஊர்
4. அரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.
அ. சேரர் –1. மீன்
ஆ. சோழர் -2. புலி
இ. பாண்டியர் -3. வில், அம்பு
அ. 3, 2, 1
ஆ. 1, 2, 3
இ. 3, 1, 2
ஈ. 2, 1, 3
III. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. வெண்ணி போரில் வெற்றி பெற்றது ____________.
2. சங்க காலத்து மிகப்பழமையான தமிழ் இலக்கண நூல் ____________.
3. காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ____________ கட்டினார்.
4. படைத் தலைவர் __________ என அழைக்கப்பட்டார்.
5. நில வரி ____________ என அழைக்கப்பட்டது.
விடைகள்.
- 1.கரிகாலன்
- 2.தொல்காப்பியம்
- 3.கரிகாலன்
- 4.தானைத்தலைவன்
- 5.இறை
IV. சரியா / தவறா
1. சங்க காலத்தில் பாடல்களைப் பாடுவோர் இருளர் என அழைக்கப்பட்டனர்.❎
2. சாதிமுறை சங்க காலத்தில் வளர்ச்சி பெற்றது.❎
3. கிழார் என்பவர் கிராமத்தின் தலைவர்ஆவார்.✅
4. புகார் என்பது நகரங்களின் பொதுவான பெயர் ஆகும்.❎
5. கடற்கரைப் பகுதிகள் மருதம் என அழைக்கப்பட்டன.❎
V. பொருத்துக
அ. தென்னர் – சேரர்
ஆ. வானவர் – சோழர்
இ. சென்னி– வேளிர்
ஈ. அதியமான்–பாண்டியர்
விடைகள்:
அ. தென்னர் – பாண்டியர்
ஆ. வானவர் – சேரர்
இ. சென்னி– சோழர்
ஈ. அதியமான்–வேளிர்
VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்
1. பண்டைக்காலத் தமிழகத்தின் வரலாற்றை மறுகட்டுமானம் செய்ய உதவும் இரு இலக்கியச் சான்றுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
- தொல்காப்பியம்
- எட்டுத்தொகை
2.நடுகல் அல்லது வீரக்கல் என்றால் என்ன?
- பண்டைக்காலத் தமிழர்கள் போர்க்களத்தில் மரணமுற்ற வீரர்களின் நினைவைப் போற்றுவதற்காக நடப்பட்ட கற்களே நடுகல் அல்லது வீரக்கல் எனப்பட்டன.
3.சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து திணைகளின் பெயர்களைக் குறிப்பிடுக?
- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
4.சங்க காலத்தோடு தொடர்புடைய இரு தொல்லியல் ஆய்விடங்களைக் குறிப்பிடுக?
- புகார்,
- கொற்கை
- பாரி,
- காரி,
- ஓரி,
- பேகன்,
- ஆய்,
- அதியமான்,
- நள்ளி ஆகியோர் கடையேழு வள்ளல்களாவர்.
- பெரியபுராணம்,
- சீவக சிந்தாமணி,
- குண்டலகேசி .
VI. கீழ்க் காண்பதற்கு விடையளிக்கவும்:
1.சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்:-
சங்ககால பெண்கள்:
- சங்க காலத்தில் பெண்களுக்கு சமூக வாழ்வில் கட்டுப்பாடுகள் இல்லை. பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை அளிக்கப்பட்டது
- நாற்பது பெண்பால் புலவர்கள் அரிய நூல்களை கொடுத்துள்ளனர்.
- அவ்வையார்,
- வெள்ளிவீதியார்,
- காக்கைப்பாடினியார்,
- ஆதி மந்தியார்,
- பொன்முடியார் போன்றோர் முக்கியமான புலவர்களாவர்.
- திருமணம் சொந்த விருப்பத்தினை சார்ந்து நடத்தப்பட்டது.
. 'கற்பு' பெண்களின் ஒழுக்கமாகக் கருதப்பட்டது சொத்துக்களில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது.
கூடுதல் வினாக்கள் (TNPSC Group 4,2,2A)
1.முசிறியை இந்தியாவின் முதல் பேரங்காடி என இயற்கை வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டவர் யார் ?
அ) மெகஸ்தனிஸ்
ஆ)வாஸ்கோடகாமா
இ) பிளினி
ஈ) அகஸ்ட ஸ் சீசர்
விடை: இ) பிளினி
2. சங்ககாலத்தில் விவசாயம் செய்வோரின் மிகப் பொதுவான பகுதிநேர தொழிலாக இருந்தது________
அ) நெசவு
ஆ) ஆநிரை மேய்த்தல்
இ) மீன் பிடித்தல்
ஈ) வேட்டையாடுதல்
விடை: அ) நெசவு
3.சங்ககால மக்களுடைய மிக முக்கியமான பண்பாட்டு அம்சமாக விளங்கியது
அ) இயல் ஆ) இசை இ) ஓவியம் ஈ) கூத்து
விடை: ஈ) கூத்து
4.பரதவர் மக்கள் காணப்படும் திணை
அ) குறிஞ்சி ஆ) முல்லை இ) பாலை ஈ)நெய்தல்
விடை: ஈ) நெய்தல்
5. வேளாண்மை முதன்மைத் தொழிலாகக் கொண்ட திணையின் கடவுள்
அ) இந்திரன் ஆ) மாயோன்
இ) வருணன் ஈ) முருகன்
விடை அ) இந்திரன்
6.ஐந்து திணைகளில் மென்புலம் எனப்படுவது
அ) குறிஞ்சி ஆ) முல்லை இ) மருதம் ஈ) பாலை
விடை: ஐ) மருதம்
7._________என்பது துறைமுகங்களை குறிக்கும் பொதுவான சொல்
அ) கொற்கை , ஆ) முசிறி இ) வஞ்சி ஈ) புகார்
விடை: ஈ) புகார்
8.சங்க காலத்தில் அரசர்கள் எத்தனை கடமைகளைச் செய்தனர்
அ). 4)
விடை .ஆ) 5
இ) 6
ஈ) 7
9. கீழ்க்கண்டவற்றுள் சேரர்கள் சூட்டிக்கொண்ட பட்டம் எது
அ) சென்னி ஆ) வழுதி இ) இரும்பொறை
ஈ) தென்னர்
விடை: இ) இரும்பொறை
iii.கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தமிழ்மொழியானது இலத்தீன் மொழியின் அளவிற்குப் பழமையானது எனக் கூறிய பேராசிரியர் ...... .
விடை: ஜார்ல் எல் ஹார்ட்
2. சேர அரசர்கள் குறித்த செய்திகளைத் தரும் நூல்_____
விடை: பதிற்றுப்பத்து
3.வட இந்தியாவின் மீது படையெடுத்த சேர அரசர்
விடை: செங்குட்டுவன்
4. தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சோ அரசன் ................
விடை: சேரல் இரும்பொறை
5.சேரர்களின் சின்னம் வில்_____
விடை: அம்பு
6. சோழர்களின் துறைமுகம்
விடை: புகார்
7.கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுபவர்
விடை: நெடுஞ்செழியன்
8.பாண்டிய நாடு ................. புகழ் பெற்றதாகும்.
விடை: முத்துக் குளிப்புக்குப்
9. வேதவேள்விகளை நடத்திய பாண்டிய அரசர்
விடை : முதுகுடுமிப் பெருவழுதி
10. மாறன், வழுதி, செழியன், தென்னர் போன்ற பட்டங்களை ________
விடை: பாண்டிய அரசர்கள் சூட்டிக்கொண்டனர்
11.பண்டைய காலத்தில் ஆட்சிசெய்த நிலவுடமைப் பிரிவினர்
விடை : வேளிர்கள்
12. பண்டைய காலத் தமிழகத்தில் கிராமத்தலைவர் _______எனப்பட்டார்.
விடை: கிழார்
13. இளவரசருக்கு பட்டம் சூட்டப்படும் விழா .............. என அழைக்கப்பட்டது.
விடை : அசுரக்கட்டிலேறுதல்.