Ad Code

6th social Science term 3 Book back Question and answer - இந்தியா-மௌரியருக்குப் பின்னர்

 6th Social Science term-3 Book back Question and answer

  • Tamil Medium
  • One mark Questions with answer
  • Two mark questions guide
  • Full guide
  • History lesson -2

இந்தியா-மௌரியருக்குப் பின்னர் book back question and answer

அறிமுகம்

மௌரியப் பேரரசின் வீழ்ச்சியின் விளைவாக வடமேற்கிலிருந்து சாகர்கள், சித்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ-கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய-கிரேக்கர்கள், குஷாணர்கள் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர். தெற்கே அசோகரின் மறைவுக்குப் பின்னர் சாதவாகனர்கள் சுதந்திர அரசர்களாயினர். குப்தப் பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கேசுங்கர்களும் கன்வர்களும் ஆட்சி புரிந்தனர். கலிங்கத்தில் சேடிகள் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.

வடக்கு:

  • சுங்கர்கள், கன்வர்கள்

தெற்கு

  • சாதவாகனர்கள்

வடமேற்கு:

  • இந்தோ-கிரேக்கர்கள், 
  • சாகர்கள், 
  • பார்த்தியர்கள், 
  • குஷாணர்கள்
  • இந்தியா- மெளரியருக்குப் பின்

மகதம் முன்பிருந்தது போல் ஒரு பேரரசாக இல்லாது போனாலும் அது தொடர்ந்து பௌத்தப் பண்பாட்டின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.

சான்றுகள்

தொல்லியல் சான்றுகள் :

கல்வெட்டுக்கள்/செப்புப் பட்டயங்கள்:

  • தனதேவனின் அயோத்தி கல்வெட்டு
  • பெர்சிபோலிஸ் நஸ்கி ரஸ்தம் கல்வெட்டு
  • மோகா (தட்சசீலம் செப்புப்பட்டயம்)
  • ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு
  • நாசிக் மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி)
  • முதலாம் டேரியஸின் கல்வெட்டு

நாணயங்கள்:

  • சாதவாகனரின் நாணயங்கள்
  • இரண்டாம் கட்பிஸிசின் நாணயங்கள்
  • ரோமானிய நாணயங்கள்

இலக்கியங்கள்:

  • புராணங்கள்
  • கார்கி சம்கிதா
  • பாணபட்டரின் ஹர்ஷ சரிதம்
  • பதஞ்சலியின் மகாபாஷ்யா
  • குணாதியாவின் பிரிகஸ்தகதா
  • நாகார்ஜுனாவின் மத்யமிக சூத்ரா
  • அஸ்வகோஷரின் புத்த சரிதம்
  • காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம்

அயல் நாட்டவர் குறிப்புகள்

சீன பௌத்தத் துறவி யுவான்-சுவாங்கின் பயணக் குறிப்புகள்

கன்வ அரசர்கள்

  • வாசுதேவர்
  • பூமிமித்ரர்
  • நாராயணர்
  • சுசர்மன்

I சரியான விடையைத் தேர்தெடுக்கவும்

1. கடைசி மௌரிய அரசரைக் கொன்றவர் ________

அ) புஷ்யமித்ரர் 

ஆ) அக்னிமித்ரர் 

இ) வாசுதேவர் 

ஈ) நாராயணர்

2. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்_____

அ) சிமுகா

ஆ) சதகர்ணி

இ) கன்கர் 

ஈ) சிவாஸ்வதி

3. குஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______

அ) கனிஷ்கர் 

ஆ) முதலாம் கட்பிசஸ்

இ) இரண்டாம் கட்பிசஸ்

ஈ) பன்-சியாங்

4. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.

அ) தக்காணம்

ஆ) வடமேற்கு இந்தியா

இ) பஞ்சாப் 

ஈ) கங்கைப் பள்ளத்தாக்கு சமவெளி

5. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

அ) சிர்கப்

ஆ) தட்சசீலம்

இ) மதுரா

ஈ) புருஷபுரம்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்

1. கூற்று:இந்தோ-கிரேக்கர்களின், இந்தோ-பார்த்தியர்களின் குடியேற்றங்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் நிறுவப்பட்டன.

 காரணம்:குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் படிப்படியாக உள்ளூர் மக்களுடன் திருமண உறவுகொண்டு இரண்டறக் கலந்தனர்.

 அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

 ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

 இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

 ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

2. கூற்று 1: இந்தோ-கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு முறையை அறிமுகம் செய்து சின்னங்களும், உருவங்களும், பெயர்களும் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டனர்.

 கூற்று 2: இந்தோ-கிரேக்கர்களின் ஆட்சியைக் குஷாணர் முடித்துவைத்தனர்.

 அ) கூற்று ‘1’ தவறு , ஆனால் கூற்று ‘2’ சரி

 ஆ) கூற்று ‘2’ தவறு , ஆனால் கூற்று ’1’ சரி 

 இ) இரண்டு கூற்றுகளுமே சரி

 ஈ) இரண்டு கூற்றுகளுமே தவறு

3. பொருந்தாததை வட்டமிடுக

புஷ்யமித்ரர்,வாசுதேவர்,சிமுகா ,கனிஷ்கர்

4. ஒரு வார்த்தையில் பதில் எழுதவும்

 கடைசி சுங்க அரசர் யார்?

 சாகர்களில் மிக முக்கியமான, புகழ் பெற்ற அரசர் யார்?

 மகதத்தில் கன்வ வம்சத்தை நிறுவியர் யார்?

கோண்டோ பெர்னஸைக் கிறித்துவ மதத்திற்கு மாற்றியவர் யார்?

III.கோடிட்ட இடங்களை நிரப்பவும்

1. இந்தோ-பார்த்திய அரசை நிறுவியவர் ________

2. தெற்கே_________ இறப்பிற்குப் பின்னர் சாதவாகனர் சுதந்திர அரசர்களாயினர்.

3. ஹாலா எழுதிய, நூலின் பெயர் ________

4. ________ கன்வ வம்சத்தின் கடைசி அரசராவார்.

5. குஷாணர்களின் பிந்தைய தலைநகரம் ________ ஆகும்.

IV சரியா/தவறா என எழுதுக

1. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் மகதம் தொடர்ந்து ஒரு பௌத்த பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது.

2. காரவேலரைப் பற்றி அதிகமான செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்

3. குந்தல சதகர்ணி, சாதவாகன வம்சத்தின், பத்தாவது அரசராவார்.

4. ‘புத்த சரிதம்’ அஸ்வகோஷரால் எழுதப்பட்டது.

V பொருத்துக

 அ) பதஞ்சலி-1. கலிங்கம்

 ஆ) அக்னிமித்ரர் -2. இந்தோ-கிரேக்கர்

 இ) அரசர் காரவேலர் -3. இந்தோ-பார்த்தியர்

 ஈ) டெமிட்ரியஸ்-4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்

 உ) கோண்டோ பெர்னெஸ் -5. மாளவிகாக்னிமித்ரம்.

 அ) 4, 3, 2, 1, 5

ஆ) 3, 4, 5, 1, 2 

இ) 1, 5, 3, 4, 2

ஈ) 2, 5, 3, 1, 4

VI பின்வருவனவற்றில் தவறான கூற்றைக் கண்டறிக

1. குஷாணர் வடமேற்குச் சீனாவில் வாழ்ந்த யூச்-சி பழங்குடி மக்களின் ஒரு பிரிவினரை உருவாக்கினார்.

2. கனிஷ்கர் சமண மதத்தை அரசு மதமாக்கிப் பல மடாலயங்களைக் கட்டினார்.

3. சாஞ்சியின் மாபெரும் ஸ்தூபியும் அதன் சுற்றுவேலியும் சுங்கர் காலத்தைச் சேர்ந்தவை.

4. பன்-சியாங் சீனத் தளபதியாவார். இவர் கனிஷ்கரால் தோற்கடிக்கப்பட்டார்.

VII ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

1. கடைசி மௌரிய அரசருக்கு என்ன நேர்ந்தது?

2. காளிதாசரின் ‘மாளவிகாக்னிமித்ரம்’ குறித்து சிறு குறிப்பு வரைக.

3. கன்வ வம்சத்தின் அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுக

4. சாதவாகனர்களின் இலக்கியச் சாதனைகளை எடுத்து கூறுக.

5. சாதவாகனர்களின் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை?

6. முதலாம் கட்பிசஸ்ஸின் சாதனைகளைக் குறிப்பிடுக.

7. கனிஷ்கரின்அவையை அலங்கரித்த துறவிகள், அறிஞர்கள் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிடுக.

VIII.கீழ்க்காண்பனவற்றிற்கு விடையளிக்கவும்

1. மௌரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்?

2. புஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.

3. கௌதமிபுத்திர சதகர்ணியைப் பற்றிக் குறிப்பெழுதுக.

4. கோண்டோபரித் அரச வம்சத்தைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன?

5. இந்தோ-கிரேக்க அரசர்களில் மிக முக்கிய அரசர் யார்? ஏன்?

6. சாகர்கள் யார்?

7. கனிஷ்கருடைய மதக் கொள்கை பற்றி எழுதுக.

Post a Comment

0 Comments

Ad Code