6th Social Science term-3 Book back Question and answer
- Tamil Medium
- One mark Questions with answer
- Two mark questions guide
- Full guide
- History lesson -3
பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்தனர் book back question and answer
அறிமுகம்
மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் வட இந்தியாவில் குஷாணர்களாலும், தெற்கேசாதவாகனர்களாலும் நிறுவப்பட்டிருந்தவலிமை வாய்ந்த பேரரசுகள் பெருமையையும் வலிமையையும் இழந்தன. இச்சூழல் சந்திரகுப்தரை ஒரு அரசை உருவாக்கித் தனது வம்சத்தின் ஆட்சியை நிறுவ வைத்தது. அவ்வாட்சி இருநூறு ஆண்டுக் காலம் நீடித்தது.குப்தர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதைத் தொடர்ந்து ஏறத்தாழ 50 ஆண்டு இடைபட்ட காலத்திற்குப் பின்னர், வர்த்தன அரச வம்சத்தைச் சேர்ந்த ஹர்ஷர் வட இந்தியாவை கி.பி,(பொ.ஆ)606 -647 வரை ஆட்சி புரிந்தார்.
சான்றுகள்
தொல்லியல் சான்றுகள்
- குப்த அரசர்களால் வெளியிடப்பட்ட தங்க, வெள்ளி, செப்பு நாணயங்கள்
- சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு
- மெக்ராலி இரும்புத்தூண் கல்வெட்டு
- இரண்டாம் சந்திரகுப்தரின் உதயகிரி குகைக் கல்வெட்டு, மதுரா பாறைக் கல்வெட்டு, சாஞ்சி பாறைக் கல்வெட்டு.
- ஸ்கந்த குப்தரின் பிதாரி தூண் கல்வெட்டு
- கத்வா பாறைக் கல்வெட்டு
- மதுபான் செப்புப் பட்டயம்
- சோனாபட் செப்புப் பட்டயம்
- நாளந்தா களிமண் முத்திரைப் பொறிப்பு
இலக்கியச் சான்றுகள்
- விஷ்ணு, மத்சய, வாயு, பாகவத
- புராணங்கள், நாரதரின் நீதி சாஸ்திரம்.
- விசாகதத்தரின் தேவிச்சந்திர குப்தம்,
- முத்ரா ராக்ஸம், பாணரின் ஹர்ஷ சரிதம்.
- காளிதாசரின் நாடகங்கள்
- இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்தில்
- இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன
- பௌத்தத்துறவி பாகியானின் பயணக்
- குறிப்புகள்
- ஹர்ஷரின் ரத்னாவளி, நாகநந்தா,
- பிரியதர்ஷிகா
- யுவான் சுவாங்கின் சி- யூ-கி
விக்கிரமாதித்யரின் அவையிலிருந்த
நவரத்தினங்கள்
- காளிதாசர் - சமஸ்கிருதப் புலவர்
- ஹரிசேனர். -சமஸ்கிருதப் புலவர்
- அமர சிம்ஹர் -அகராதியியல் ஆசிரியர்
- தன்வந்திரி -மருத்துவர்
- காகபானகர் - சோதிடர்
- சன்கு - கட்டடக் கலை நிபுணர்
- வராகமிகிரர் - வானியல் அறிஞர்
- வராச்சி - இலக்கண ஆசிரியர் மற்றும் சமஸ்கிருதப் புலவர்
- விட்டல்பட்டர் - மாயவித்தைக்காரர்(Magician)
இரண்டாம் சந்திரகுப்தரின் பட்டப் பெயர்கள்:
- விக்கிரமாதித்தியர்,
- நரேந்திர சந்திரர்,
- சிம்மசந்திரர்,
- நரேந்திர சிம்மர்,
- விக்கிரமதேவராஜர்,
- தேவ குப்தர்,
6th Social Science term-3 |
பாடச்சுருக்கம்:
- ©குப்த வம்சத்தை நிறுவியவர்
- முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் ஆகியோர் குப்த வம்சத்தின் தலைசிறந்த அரசர்கள் ஆவர்
- குப்த வம்சத்தின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் விஷ்ணு குப்தர்
- குப்தர்கள் தெய்வீக உரிமைக்
- கோட்பாட்டை நடைமுறைப்படுத்தினர்
- குப்தர்கள் காலத்தில் சுரங்கத் தொழிலும் உலோகத் தொழிலும் செழித்தோங்கின
- நால்வர்ண முறையைப் பின்பற்றிய குப்தர் சமுதாயம் தந்தை வழிச் சமூகமாக இருந்தது
- வேத மதமும் வேதச் சடங்குகளும் மீண்டும் நடைமுறைக்கு வந்தன
- கட்டுமானக் கோவில்களை முதலில் கட்டியவர்கள் குப்தர்களே. அது முந்தைய பாறைக் குடைவரைக் கோவில்களிலிருந்து பரிணாமம் அடைந்ததாகும்
- ஆரியபட்டர், வராகமிகிரர், பிரம்மகுப்தர் ஆகியோர் அக்காலத்தின் தலைசிறந்த வானியல் மற்றும் கணித அறிஞர்களாவர்
- ஹர்ஷர் வர்த்தன வம்சத்தின் மிகச் சிறந்த அரசர் ஆவார். அவர் பேரரசரானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்
- ஒரு கலைஞராக, நாடக ஆசிரியராக ஹர்ஷர் கலை, இலக்கியங்களின்
- வளர்ச்சிக்குப், பங்களிப்புச் செய்துள்ளார்.
- யுவான் சுவாங் நாளந்தா
- பல்கலைக்கழகத்திற்கு வருகைபுரிந்தார்.
- அவருடைய பயணக் குறிப்புகள் ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தைய இந்தியாவின் நிலைகளைப் புரிந்து
- கொள்ளப் பயன்படுகின்றன
- ஹர்ஷர் பௌத்த மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றினாலும் வேத மதத்தையும் வளசெய்யவும்
பயிற்சி
I சரியான விடையைத் தேர்வு செய்யவும்
1. குப்த வம்சத்தை நிறுவியவர் ________ ஆவார்.
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) ஸ்ரீ குப்தர்
இ) விஷ்ணு கோபர்
ஈ) விஷ்ணுகுப்தர்
2. பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்.
அ) காளிதாசர்
ஆ) அமரசிம்மர்
இ) ஹரிசேனர்
ஈ) தன்வந்திரி
3. சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் _______ என்ற இடத்தில்
உள்ளது.
அ) மெக்ராலி
ஆ) பிதாரி
இ) கத்வா
ஈ) மதுரா
4. அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ____
அ) சரகர்
ஆ) சுஸ்ருதர்
இ) தன்வந்திரி
ஈ) அக்னிவாசர்
5. வங்காளத்தின் கௌட அரசர் _______
அ) சசாங்கர்
ஆ) மைத்திரகர்
இ) ராஜ வர்த்தனர்
ஈ) இரண்டாம் புலிகேசி.
II கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து, சரியான விடையை (✓) செய்யவும்
1. கூற்று: வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம்
சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார்.
காரணம்: முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை
மணமுடித்தார்சரி
அ) காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
2. கூற்று: 1 தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சுமுகமான உறவைக்
கொண்டிருக்கவில்லை
கூற்று: 2 குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்.
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி
ஆ) இரண்டாம் கூற்று தவறு, ஆனால் முதல் கூற்று சரி
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
3. கீழ்க்காண்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?
அ) ஸ்ரீகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் - விக்கிரமாதித்யர்
ஆ) முதலாம் சந்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்
இ) ஸ்ரீ குப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் - முதலாம் சந்திரகுப்தர்
ஈ) விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் - முதலாம் சந்திரகுப்தர்
4. கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும். அவற்றில் எது/ எவை சரியானது/
சரியானவை என்பதைக் கண்டறியவும்.
1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி
ஈ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு
5. பொருந்தாததை வட்டமிடுக.
1. காளிதாசர், ஹரிசேனர், சமுத்திரகுப்தர், சரகர்
2. ரத்னாவளி, ஹர்சசரிதா, நாகநந்தா, பிரியதர்சிகா
III கோடிட்ட இடங்களை நிரப்புக
1. இலங்கை அரசர் ______ சமுத்திர குப்தரின் சமகாலத்தவர் ஆவார்.
2. இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின்போது சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி_____ இந்தியாவிற்கு வந்தார்.
3. _______ படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.
4. ______ அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.
5. குப்தர்களின் அலுவலக மொழி _______.
6. பல்லவ அரசர் _______ சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
7. வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ______ஆவார்.
8. ஹர்ஷர் தலைநகரை _______லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்தவறா
IV சரியா / தவறா
1. தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்.
2. குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோ - ஆரிய பாணியை ஒத்துள்ளன.
3. குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை.
4. ஹர்ஷர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்.
5. ஹர்ஷர் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயர் பெற்றவர்.
V பொருத்துக
அ)
அ. மிகிரகுலா -1. வானியல்
ஆ. ஆரியபட்டர் -2. குமாரகுப்தர்
இ. ஓவியம்-3. ஸ்கந்தகுப்தர்
ஈ. நாளந்தா பல்கலைக்கழகம் -4. இடம் விட்டு இடம் செல்லும் வணிகர்கள்
உ. சார்த்தவாகர்கள்-5. பாக்
அ) 1, 2, 4, 3, 5
ஆ) 2, 4, 1, 3, 5
இ) 3, 1, 5, 2, 4
ஈ) 3, 2, 1, 4, 5
ஆ)
அ. பாணர் -1. 10,000 மாணவர்கள்
ஆ. ஹர்ஷர் -2. பிரயாகை
இ. நாளந்தா பல்கலைக்கழகம் -3. ஹர்ஷ சரிதம்
ஈ. யுவான் சுவாங்-4. ரத்னாவளி
உ. பெளத்த சபை -5. சி - யூ- கி
அ) 4, 3, 2, 1, 5
ஆ) 5,2,1,3,4
இ) 3, 5, 1, 2, 4
ஈ) 2, 1, 3, 4, 5
VI ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்
1. ‘கவிராஜா’ என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது? ஏன்?
2. நாளந்தா பல்கலைக்கழகத்தில் கற்றுத்தரப்பட்ட பாடப்பிரிவுகள் யாவை?
3. அரசர்களின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை விளக்குக
4. உலோகவியலில் குப்தர்களின் சாதனைகளை எடுத்துக் கூறுக.
5. ஹூணர்கள் என்போர் யார்?
6. ஹர்ஷர் காலத்தில் வசூலிக்கப்பட்ட மூன்று வகையான வரிகளைக் குறிப்பிடுக.
7. ஹர்ஷர் எழுதிய நூற்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
VII சுருக்கமான விடையளிக்கவும்
1. மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.
2. சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.
3. குப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?
4. சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.
5. கட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.
6. காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.
7. ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.
VIII உயர் சிந்தனை வினா
1. குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது -
அ) நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை
ஆ) தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை
இ) அரசாட்சி செழிப்பாக இருந்ததை
ஈ) மன்னர்களின் ஆடம்பர இயல்பை
2. பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ள ஓவியங்கள் எவற்றின் மீது
வரையப்பட்டுள்ளன?
அ) குகைச் சுவர்களில்
ஆ) கோவில்களின் விதானங்களில்
இ) பாறைகளில்
ஈ) பாப்பிரஸ் இலைகளில்
3. குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?
அ) கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
ஆ) தென்னிந்தியப் படையெழுச்சி
இ) ஹூணர்களின் படையெடுப்பு
ஈ) மதசகிப்புத்தன்மை
4. குப்தர்கள் காலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல்
அறிஞர்கள் சாதித்ததென்ன?