10TH STD 5  MARK QUESTION & ANSWERS
 -பத்தாம் வகுப்பு-5 மதிப்பெண் வினாக்கள் -- கடிதம் எழுதுதல் - வாழ்த்துரை - நன்றியுரை | katrathukalvi - samacheer Kalvi Guide

1.  உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டு நலப்பணி திட்ட முகாமின் தொடக்கவிழாவில்  மாணவர்களுக்கு  வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை  உருவாக்கித் தருக .


இயல் -9                ப.எண் : 225

                                  வாழ்த்துரை


               பள்ளியின்  தலைமையாசிரியர் ,  நாட்டு நலப்பணித்திட்ட  அலுவலர்கள் ,  விருந்தினர்கள்  ஆகிய அனைவருக்கும்  வணக்கம் .
நாட்டு நலப்பணித் திட்டத்தில்  பங்கேற்கும்  மாணவச்செல்வங்களுக்கு
  மீண்டும்  வணக்கத்தைத் தெரிவித்து வாழ்த்துரை வழங்குகிறேன் .

                மாணவப் பருவத்திலேயே  நாட்டுப்பற்றுடன்   திகழ்வது பாராட்டுக்குரியது . சமூக அக்கறை ,  தொண்டு செய்யும் மனப்பான்மை ,  நாட்டு மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்துவது   நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் நடைபெறுகிறது .

               நாட்டுக்காக உழைத்த நல்லோர்கள் பலர் .  காந்தியடிகள் ,  அன்னை தெரசா,  பாரதியார் , வ.உ.சி  போன்றவர்களும்  தன் வாழ்வையே நாட்டிற்காக அர்ப்பணித்தவர்கள் . நீங்கள் மாணவப் பருவத்திலேயே  இப்பணியை மேற்கொள்வது பெருமைக்குரியதாகும் .
                    நாட்டு நலப்பணி திட்டத்தில்   தூய்மைப் பணிகள், சாலைப்பாதுகாப்பு, பள்ளி வளாகங்களை
த் 
தூய்மைப்படுத்துதல் , அருகில் உள்ள கிராமங்களைத்  தூய்மையாக்குதல் ,  நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்தல்  போன்றவை அடங்கும் .
           இப்பணிகளில்  தன்னலமற்ற உழைப்பு ,   அனுபவம்,  சகிப்புத்தன்மை ,  ஒற்றுமை உணர்வு ,  பாராட்டும் குணம் ,  விட்டுக் கொடுக்கும் பண்பு ,  சேவை மனப்பான்மை  போன்றவை வளர்த்துக்கொள்ள  முடியும் .
                  மேலும் பொது நலன்களுக்காக மரக்கன்றுகள் நடுதல் , மரம் வளர்த்தல் ,   அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சுதல்   போன்ற பணிகளைச் செய்யும்போது மண்வெட்டி, கத்தி ,  கூடை போன்ற பொருள்களைப் பயன்படுத்தும்  திறன்களை அறிந்து கொள்ள முடியும் .  

           "நம்மாலும் முடியும்"  என்ற  தன்னம்பிக்கை வளரும் .
                  மாணவர்களாகிய  நீங்கள்  நாட்டுப் பணிகளில்  கடைப்பிடிக்கும் போது  வருங்காலத்தில் நாடு வளமுடன்  செழிப்புடனும்  திகழும் .
            நாளைய சமுதாயத்தின்  விடிவெள்ளியாய் ,  அக்கறை  கொண்டவர்களாக ,  மனிதநேயத்துடன்  விளங்குவீர்கள்  என்பதில் சிறிதும் ஐயமில்லை .

                இத்திட்டத்தை  சிறப்பாக  செயல்படுத்திட  முழுமனதுடன் பாராட்டுகிறேன் .
                                                  நன்றி !



------------------------------------------------------------------------------------------------------------------------





2. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மரம் நடுவிழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும் ,  பெற்றோருக்கும் பள்ளியின் பசுமைப்  பாதுகாப்புப் படை சார்பாக நன்றியுரை எழுதுக .

இயல் -9                         ப.எண் : 228
                   

                       நன்றியுரை


                 என் பள்ளியின் பசுமைப் பாதுகாப்பு படை  விழாவிற்கு வந்திருக்கும்  சிறப்பு விருந்தினர் ,பெற்றோர்கள்  மற்றும் மாணவச் செல்வங்கள்  அனைவருக்கும்  நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
                
                       நமது பள்ளியின் அழைப்பிற்கு இணங்க ,  பல்வேறு வேலைகளுக்கு இடையில்  பொன்னான நேரத்தை ஒதுக்கி ,  நமது பள்ளிக்கு வருகை தந்த வனச்சரக அலுவலர் அவர்களுக்கு நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன் .
அதுமட்டுமன்றி,  நம் பள்ளிக்கு மரக்கன்றுகளை தந்து உதவியதற்கு பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

              மேலும்   வனச்சரக அலுவலர் அவர்கள் மர வகைகள்,  மரங்களின்  பயன்கள் ,   மரங்களை வளர்க்கும்  முறைகள் ,  இயற்கைப் பாதுகாப்பு ,  மரங்களுக்கு எவ்வாறு தண்ணீர்  பாய்ச்சுவது ?  கனி தரும் மரங்கள் ,  நீண்ட நாள் பலன் தருபவை  போன்ற கருத்துக்களை இவ்விழாவிற்கு வருகைத் தந்து  எங்களுக்கு தெளிவாக  விளக்கிக் கூறியதற்கு  மிகவும் நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன் .

               தலைமையாசிரியர் அவர்கள் பேசும்போது அவசியம் 
              " வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்" 
               என்ற செய்தியை  உறுதிமொழியாக எடுத்துக் கொண்டோம் . அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் .

                  மாணவர்களாகிய இந்த பருவத்தில்  இயற்கையைப் பாதுகாப்பது எங்கள் கடமை . இதற்கு  உறுதுணையாக  இருக்கும் பெற்றோர்களுக்கும் நன்றி கூறுகிறேன் . 
    நம் பூமித்தாயின் " இயற்கை வளங்களைப்  பாதுகாப்போம்"  என்று கூறி   மீண்டும் அனைவருக்கும் நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன் .
                       
                                                 நன்றி!
                             
                                            வணக்கம் .