10TH STD QUESTION & ANSWERS -பத்தாம் வகுப்பு-5 மதிப்பெண் வினாக்கள் 
கடிதம் எழுதுதல் -
1."உழவுத்  தொழிலுக்கு வந்தனை செய்வோம் "  என்ற கட்டுரையை வெளியிடுதல் -
2.மின்விளக்கு பழுது நீக்குதல் - கடிதம் | katrathukalvi - samacheer Kalvi Guide


                       கடிதம் எழுதுக .

1 . நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் "உழவுத்  தொழிலுக்கு வந்தனை செய்வோம் "  என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி,  அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக .


இயல்-7                  ப.எண்:180   

       

               கடிதம்

அனுப்புநர்
             சி .கவின்
             27 , அண்ணா சாலை ,
            காக்காவேரி ,
           சேலம் - 637606

பெறுநர்
           தினத்தந்தி ஆசிரியர் அவர்கள் ,
           தினத்தந்தி அலுவலகம் ,
           அம்பத்தூர் ,  சென்னை -6

ஐயா ,

 
பொருள் :   நாளிதழில் கட்டுரை வெளியிட வேண்டுதல் -  சார்பாக
     வணக்கம் . 
                           நான் சேலம் மாநகரில் அரசுப் பள்ளி ஒன்றில்  பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன் .  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிகை சார்பாக  பொங்கல் மலர்  வெளியிடப்படுவதை தங்கள் செய்தித்தாளில் விளம்பரம் பார்த்தேன் .  அம்மலரில் நான் கட்டுரை எழுதி  கலந்து கொள்வதற்காக " உழவுக்கு வந்தனை செய்வோம்"  எனும் தலைப்பில்  நான்கு பக்க அளவில்  கட்டுரை ஒன்றை எழுதி  தங்கள் அலுவலகத்துக்கு அனுப்பி  உள்ளேன் .  அக்கட்டுரையைத்  தாங்கள் வெளியிடும் " தினத்தந்தி -  பொங்கல் மலரில்"  வெளியிடுமாறு  பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .
                             நன்றி !
 
  

 சேலம்                                                இப்படிக்கு,
 25.03.2020                                            சி. கவின்


உறை மேல் முகவரி
பெறுநர்
தினத்தந்தி ஆசிரியர் அவர்கள்,
தினத்தந்தி அலுவலகம்,
அம்பத்தூர் ,  சென்னை -6



---------------------------------------------------------------------------------------------------------------


2.  உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன . அதனால்  இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி அலுவலருக்குக் கடிதம் எழுதுக .


இயல்-8                  ப.எண்:199

                        கடிதம்


அனுப்புநர்
                  ப.  சிவா ,
                 20 ,  பாரதி தெரு ,
                 காந்தி நகர் ,
                 சென்னை .

பெறுநர்
            மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள்,
            செயற்பொறியாளர் அலுவலகம் ,
           செம்னை.

ஐயா ,

         
பொருள் :  மின் விளக்குகள் பழுது நீக்குதல் -  சார்பாக


 வணக்கம் . 
                 எங்கள்  பாரதி தெருவில்  100 குடும்பங்கள் வசித்து  வருகிறோம் . தெருவில்  2 மின் விளக்குகள்  மட்டுமே உள்ளன . அவை இரண்டும் மழை பெய்ததால்  பழுதடைந்துள்ளன .  அதனால் எங்கும் இருளாக உள்ளது . மக்கள்  இரவில் சாலையில் நடந்து செல்ல இயலவில்லை .  மேடு பள்ளங்கள்  தெரியாமல் தவிக்கின்றனர் .  சில சமயங்களில் திருட்டும் ஏற்படுகிறது .  நகராட்சியில் பலமுறை கூறியும்  மின் விளக்குகள்  பழுது நீக்கவில்லை .
        
             எனவே ,  அருள் கூர்ந்து  எங்கள் தெருவிற்கு மின் விளக்குகளை பழுது  நீக்கியும் ,  கூடுதல் மின் விளக்குகளை அமைத்தும்  உதவிடுமாறு  தெருமக்கள் சார்பாக  தங்களைப் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் .
                   
                        நன்றி!


சென்னை                                           இப்படிக்கு ,
30.3.2020                                   தெரு மக்கள் சார்பாக ,
                                                    ப.  சிவா,

உறை மேல் முகவரி
பெறுநர்
மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள் ,
செயற்பொறியாளர் அலுவலகம்
சேலம் .