10 TH STD 5 MARK QUESTION &ANSWERS 10th tamil - கடிதம் எழுதுதல் -வாழ்த்து மடல் ,உணவு தரமற்றதால் ஆணையருக்குக் கடிதம் | katrathUkalvi - samacheer Kalvi guide
10th Tamil வாழ்த்து மடல் எழுதுக .
1. மாநில அளவில் நடைபெற்ற" மரம் இயற்கையின் வரம்" எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக .
இயல் -2 ப.எண் : 48
வாழ்த்து மடல்
அன்புள்ள தோழி ,
நான் நலமாக உள்ளேன் . நீ நலமா ? மற்றும் உன் குடும்பத்தினரின் நலமும் அறிய ஆசை .
மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் " மரம் இயற்கையின் வரம் " எனும் தலைப்பில் கட்டுரை எழுதி, முதல் பரிசு பெற்றிருந்தாய் . இச்செய்தியை நாளிதழில் புகைப்படத்துடன் கண்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டேன் .
பள்ளிகளில் நடைபெறும் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு பல நல்ல கருத்துக்களை எழுதியிருப்பதை வியந்து பாராட்டுகிறேன் .
இன்றளவில் மரங்களின் பயன் , மரங்கள் வளர்த்தல். மரங்களை அழிப்பதால் ஏற்படும் தீமைகள் போன்ற கருத்துக்களைத் தெளிவாக எழுதி இருந்தாய் . மரங்களை அழித்துக் கொண்டே போனால் சுவாசிப்பதற்கு காற்று கிடைக்காது . காற்றை விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும் என்ற செய்தியை எழுதியிருந்தாய் . இந்தக் கருத்து மிகவும் சிந்திக்கவும் வரவேற்கத்தக்கதாகவும் அமையும் .
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி
" வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் ; மரங்களை அழிக்காதீர்கள் !"
"மரம் வளர்ப்போம் ; மழை பெறுவோம் !" என்று எழுதி இருந்ததைப் பாராட்டுகிறேன்.
மேலும் மரக்கன்றுகள் வளர்க்கும் விதம் குறித்து எழுதியிருந்தது அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும் .
இதுபோல நீ மேலும் பல கட்டுரைகள் எழுதி பரிசுகள் பெற , மனதார வாழ்த்துகிறேன் .
வாழ்த்துக்கள் .
இப்படிக்கு,
பெறுநர் ,
பெ. கீதா,
அண்ணா சாலை ,
திருநகர் ,
சென்னை .
----------------------------------------------------------------
2. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக .
இயல் -3 ப.எண் : 68
கடிதம்
அனுப்புநர்
சி. கவின் ,
12, சுவாமி சாலை,
அண்ணா நகர் ,
சேலம் .
பெறுநர்
உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள் ,
உணவு பாதுகாப்பு ஆணையம் ,
சென்னை .
ஐயா ,
பொருள் : உணவு தரமற்றதாக இருந்தது குறித்து நடவடிக்கை கோருதல் - சார்பாக .
வணக்கம் . நான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு , உணவு உண்பதற்காக என் வீட்டிற்கு அருகில் உள்ள செல்வி உணவு விடுதிக்குச் சென்றிருந்தேன் . அங்கே பலகையில் மட்டன் பிரியாணி ரூ.120 என எழுதியிருந்தது. நானும் பிரியாணியைச் சாப்பிட்டேன் . பின் காசாளரிடம் அதற்கானத் தொகையினைச் செலுத்தும் போது ரூ.150 செலுத்தும்படி கூறினார். அதிகமாக ஏன் பணம் கேட்கிறீர்கள் ? என்று நான் கேட்டதற்குப் பல விளக்கங்கள் கொடுத்து ரூ.150 பெற்றுக்கொண்டார் .
நான் வீட்டிற்கு வந்து ,சில மணி நேரங்களிலேயே வாந்தி, பேதி ஏற்பட்டு உடல் நலமின்றி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்றேன். மன உளைச்சலுக்கு ஆளானேன் .
எனவே உணவு தரம் அற்றதாகவும் , விலை கூடுதலாக பெற்றதாலும் அந்த உணவு விடுதியின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி !
சேலம் இப்படிக்கு ,
24.03.2020 தங்கள் உண்மையுள்ள,
சி . கவின்
உறை மேல் முகவரி
பெறுநர்
உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள் ,
உணவு பாதுகாப்பு ஆணையம் ,
சென்னை .