10TH STD 5 MARK QUESTION ANSWERS -10 ம் வகுப்பு 5 மதிப்பெண் வினாக்கள்-நிற்க அதற்குத் தக | kaTrathukalvi - samacheer Kalvi guide
நிற்க அதற்குத் தக
இயல் -1 ப.எண் : 24
இன்சொல் வழி , தீய சொல் வழி - அட்டவணையைப் பார்க்க .
வினா :
இதில் நீங்கள் செல்லும் வழி யாது ? உங்கள் நண்பருக்கு காட்டும் வழி யாது ?
விடை :
*இன்சொல் பேசுவதே எனது சிறந்த வழியாகும் . பிறர் மனம் மகிழும்படி பேசுவேன் ; புகழ் பெறுவேன் ; நல்ல நண்பர்களுடன் சேர்ந்து அன்பை நிறைவு செய்வேன் .
* இன்சொல் பேச முடியாத போதும் , தீய சொற்களைப் பேச வேண்டாம் என நண்பர்களுக்கு வழிகாட்டுவேன் .
-------‐---------------------- ------------------------------------------------------------------
*இன்சொல் பேசுவதே எனது சிறந்த வழியாகும் . பிறர் மனம் மகிழும்படி பேசுவேன் ; புகழ் பெறுவேன் ; நல்ல நண்பர்களுடன் சேர்ந்து அன்பை நிறைவு செய்வேன் .
* இன்சொல் பேச முடியாத போதும் , தீய சொற்களைப் பேச வேண்டாம் என நண்பர்களுக்கு வழிகாட்டுவேன் .
-------‐----------------------
நிற்க அதற்குத் தக
இயல் - 2 ப.எண் : 48
2. புயல் அறிவிப்பின் போது நீங்கள் , உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.1 . புயலின்போது வீட்டைவிட்டு வெளியில் செல்ல மாட்டேன் .
2. தொலைபேசி , மின்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பேன்.
3. புயல் அறிவிப்பைக் கேட்டுப் பின்பற்றுவேன் .
4. மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கச் செய்வேன் .
5. மாடியில் இருப்பதைத் தவிர்த்து தளப்பகுதியில் தங்கச் செய்வேன்.
6. வாகனத்தை ஓட்ட நேர்ந்தால் மரங்கள் , மின்கம்பிப் பாதைகள் ,நீர் வழிகள் ஆகியவற்றிலிருந்து விலகி பயணம் செய்வேன் ; குடும்பத்தினரும் பின்பற்றச் செய்வேன்.
7. புயல் காற்று அடிப்பதைக் கவனித்து எச்சரிக்கையோடு இருக்கச் செய்வேன் .
------------------------------------------------------------------------------------------
நிற்க அதற்குத் தக
இயல் -3 ப.எண் : 69
3.மருத்துவர் கு. சிவராமனின் இக்கருத்திற்கு சமூக அக்கறையுடனான உங்களின் பதில்என்னவாக இருக்கும் ?
Answer :
1. வருங்காலங்களில் நோய்கள் வராமல் இருக்க இயற்கையான உணவுகளை உண்ணுங்கள் . கீரை , பால் , தானிய வகைகள் போன்றவற்றை உண்ணுங்கள்.
2. நமது பாரம்பரிய உணவான காய்கறிகள் , பழங்கள் , முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை உணவாக உண்ணுங்கள்.
3. காலை உணவாக வேகவைத்த இட்லி , சமைக்காத இயற்கை உணவுகளையும் உண்பது உடலுக்கு மிகவும் நல்லது . எக்காரணத்தைக் கொண்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது .
4. பீட்சா , பர்கர் போன்ற துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும் . எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது .
5. காலை , இரவு ஆகிய இரு வேளைகளில் சிற்றுண்டியும் , மதிய வேளைகளில் முழுமையான உணவும் உண்ணுவது சாலச்சிறந்தது .
6. பசித்த பின்னர் சாப்பிடுவது நல்லது . இயற்கை உணவே இன்பம் தரும் .
" உணவே மருந்து "
----------------------------------------------------------------------------------------------------
நிற்க அதற்குத் தக
இயல் -4 ப.எண் : 98
4.தங்கைக்கு திறன்பேசிப் பயன்பாட்டால் ஏற்படும் நன்மை தீமைகளைக் குறித்துக் கடிதம் எழுதுக .
சேலம் ,
20.02.2020 .
அன்பு தங்கைக்கு ,
அக்கா எழுதும் கடிதம் .நான் நலமாக இருக்கிறேன்.நீ நலமா ?
நீ எப்போதும் திறன்பேசியைப் பயன்படுத்திக் கொண்டே இருப்பதை அறிந்தேன் . எனவே அதன் நன்மை தீமைகளைப் பற்றி இக்கடிதத்தில் கூறுகிறேன் .
நன்மைகள் :
1. தினசரி செய்திகளை அறிந்து கொள்ளலாம் .
2. சிறுசிறு விளையாட்டுகளைத் தெரிந்து கொள்ளலாம் .
3. சில புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ளலாம் .
4. தொலைதூரத்தில் இருப்பவர்களிடம் முகம் பார்த்துப் பேசலாம் .
5. மனதில் உள்ள கவலைகளை நீக்க ஆடல் பாடல் நிகழ்வுகளைக் கண்டு களிக்கலாம்.
தீமைகள் :
1. திறன்பேசி யை அதிக நேரம் பயன்படுத்துவதால் கண்கள் பாதிப்பு ஏற்படலாம் .
2. மனக்குழப்பம் , மனநோய் ஏற்பட வாய்ப்பு உண்டு .
3. திறன்பேசியை அதிக நேரம் பயன்படுத்துவதால் பல வேலைகளை முடிக்க இயலாமல் போகும் .
4 . இதில் கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையானவை அல்ல .
5. காலவிரயம் , பொருள் விரயம் ஏற்படுகிறது .
கருத்து : எனது அருமைத் தங்கையே ! எனவே , திறன்பேசியில் உள்ள அனைத்து செய்திகளும் கற்பனையே ; உண்மையானவை அல்ல .
மேலும் மனம் ஒரு குரங்கு . எனவே நம்மை நாம் உணர்ந்து வேண்டுமென்பதை நீ தெளிவாக உணர்ந்து கொள்வாய் என நம்புகிறேன் .
அன்புள்ள அக்கா ,
ராணி
உறைமேல் முகவரி
ராதா ,
5-வது தெரு ,
மயில் ரோடு ,
சென்னை -600001 .
----------------------------------=---------------------------------------------------------------
நிற்க அதற்குத் தக
இயல் 5 ப.எண் : 126
5.பள்ளியிலும் வீட்டிலும் நீங்கள் செய்யும் செயல்களைத் தொகுத்து எழுதுக .
பள்ளியில் நான்:
1. நேரத்தைச் சரியாக கடைப்பிடிப்பேன்.
2. உடன் பயிலும் மாணவரின் திறமையைப் பாராட்டுவேன் .
3. ஆசிரியர் நடத்தும் பாடத்தை அக்கறையோடு கவனிப்பேன் .
4 . நண்பர்களுடன் படிப்பேன் .
5 . வகுப்பறைத் தூய்மையைப் பாதுகாப்பேன் .
வீட்டில் நான் :
1. வீட்டுப் பணிகளைப் பகிர்ந்து செய்வேன் .
2. அம்மாவுக்கு சமையலறையில் உதவி செய்வேன் .
3. அப்பா கூறும் வேலைகளைச் செய்வேன் .
4. சிறிது நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பேன்.
5. வீட்டைத் தூய்மையாக வைத்து இருப்பேன் .
----------------------------------------------------------------------------------
நிற்க அதற்குத் தக
இயல் -6 ப,எண் : 153
6.நிகழ்கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மேன்மேலும் பரவலாகவும் நீங்கள் செய்யவிருப்பவனவற்றை வரிசைப்படுத்துக .
1. பிறந்தநாள் விழாக்களில் மயிலாட்டம் முதலான கலைகளை நிகழ்த்த முனைவேன்.
2. எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்த ஏற்பாடு செய்வேன் .
3. எங்கள் ஊரில் நடைபெறும் மாரியம்மன் திருவிழாவிற்கு மயிலாட்டம் , கரகாட்டம், பொம்மலாட்டம் போன்றவை நடைபெற ஏற்பாடு செய்வேன் .
4. பண்டிகை நாட்களில் நாடகங்கள் , நிகழ்கலை ஆட்டங்கள் போன்றவை மூலம் கருத்துக்களை மக்களுக்கு கூறச் செய்வேன் .
5 . கோவில்களில் தாரை , தப்பட்டை முழக்கங்கள் மற்றும் போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்வேன் .
6. விவசாயத்தைப் பேணவும் , இயற்கை உணவு உண்ணவும் நிகழ்கலைகள் மூலம் ஆண்டுதோறும் விழா எடுக்க ஏற்பாடு செய்வேன் .
------------------------------------------------------------
நிற்க அதற்குத் தக
இயல் - 7 ப.எண் :182
7.கோவில்களில் பழம்பெரும் நினைவுச் சின்னங்களையும் கல்வெட்டுகளையும் எவ்வாறு பராமரிக்கவும் பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்களைக் குறிப்பிடுக.
1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை என் நண்பர்களுக்குக் கூறுவேன் .
அவற்றின் மதிப்பைக் குறைக்கும்படி எதுவும் கூற அனுமதிக்கமாட்டேன்.
2. கல்வெட்டுகள் குறித்து அவர்களைப் பெருமிதம் அடையச் செய்வேன் .
முன்னோர்களின் பண்பாட்டை அறிய உதவும் கல்வெட்டுகளை எவரும் சிதைக்காமல் பாதுகாப்பேன் .
3. பழந்தமிழ் வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாப்பேன் .
பழந்தமிழ் வரலாற்று சான்றுகளை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் கணினியில் பதிவு செய்வேன் .
4. பழந்தமிழரின் பண்பாடுகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறி பண்பாடுகளை வளர்ப்பேன்.
பழந்தமிழர்களின் பண்பாடுகளை உலகில் அனைவரும் அறிந்துகொள்ளும் வண்ணம் வானொலி , தொலைக்காட்சிகளில் தகவல் அளிப்பேன் .
5. ஆண்டுதோறும் விழா எடுப்பதன் மூலம் நினைவுச் சின்னங்கள் , கல்வெட்டுகள் பராமரிக்கவும்
பாதுகாக்கவும் செய்வேன் .
------------------------------------------------------------
நிற்க அதற்குத் தக
இயல் - 8 ப.எண் : 201
8.மாணவர்கள் நிலையில் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளும் எழுதுக .
நாம் செய்ய வேண்டுவன (அறங்கள் ) :
1. நல்ல சொற்களையே தேர்ந்தெடுத்துப் பேசுதல் .
2. ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் புறம் பேசாதிருத்தல் .
3. பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிடல் .
4. நண்பர்களுக்கு உதவும் குணத்தை வளர்த்தல் .
5. நண்பர்களின் பொருட்களை அனுமதியுடன் பயன்படுத்துதல் .
அறங்கள் தரும் நன்மைகள் :
1. நல்ல நண்பர்களைப் பெறலாம் ; எதிரிகளையும் நண்பராக்கலாம் .
2. நற்பண்புகளைக் கடைப்பிடிக்கலாம் ; நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளலாம்.
3. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளலாம் .
4. தன்னுடைய வேலைகளை முடித்துக் கொள்ளும் பண்பு வளரும் .
5. அடுத்தவர் பொருளின் மேல் ஆசை கொள்ளாத பண்பு வளரும் .
------------------------------------------------------------
நிற்க அதற்குத் தக
இயல் - 9 ப.எண் : 229
9.மாணவர்கள் செய்து பார்த்த உதவிகளால் எய்திய மனநிலையை பட்டியலிடுக .