இயல் – 5 தெய்வமணிமாலை
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறும் நினதுபுகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்க வேண்டும்
பாவகை : பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
இயல் – 6
சிலப்பதிகாரம்
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை
பாவகை : ஆசிரியப்பா
- இளங்கோவடிகள்
இயல்-7
புறநானூறு
காய்நெல் அறுத்துக் களம் கொளினே
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்
நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே
வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்
பாவகை : நேரிசை ஆசிரியப்பா
- பிசிராந்தையார்
இயல்-8
இரட்சணிய யாத்திரிகம்
இறைமகனின் எளிய நிலை
2. பாதகர் குழுமிச் சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி
ஏதமில் கருணைப் பொன்மான இருதயத்து ஊன்ற ஊன்ற
வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால்
நோதகச் சினந்தோர் மாற்ற நுவன்றிலா கரும் நோக்கி.
பாவகை : அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
- ஹெச் ஏ கிருட்டிணனார்