Ad Code

12th தமிழ் மனப்பாடப்பாடல் - இயல்-1 முதல் இயல்- 4 வரை

 


இயல் 1   

தன்னேர் இலாத தமிழ்


 ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் - ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ்

பா வகை : நேரிசை வெண்பா

அணி : பொருள் வேற்றுமை அணி

                                                                - தண்டி


 

இயல் – 2            

 நெடுநல்வாடை

வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென

ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்

ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்

புலம்பெயர் புலம்பொடு கலங்கி கோடல்

நீடிதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ

மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்

கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க

பாவகை : நேரிசை ஆசிரியப்பா

                                                                - நக்கீரர்


 

இயல் – 3            

 கம்பராமாயணம்

 2. துன்பு உளதுஎனின் அன்றோ

                சுகம் உளது? அது அன்றிப்

பின்பு உளது. இடை மன்னும்

பிரிவு உளது என உன்னேல்;

முன்பு உளம் ஒரு நால்வேம்

முடிவு உளது என உன்னா

அன்பு உள, இனி, நாம் ஓர்

ஐவர்கள் உளர் ஆனோம்.

பாவகை : கலிவிருத்தம்.


 9. குகனோடும் ஐவர் ஆனேம்

       முன்பு; பின் குன்று சூழ்வான்

மக னொடும் அறுவர் ஆனோம்

       எம்முழை அன்பின் வந்த

அகன் அமர் காதல் ஐய

       நின்னொடும் எழுவர் ஆனேம்

புகல் அருங் கானம் தந்து

      புதல்வரால் பொலிந்தான் நுந்தை


பா வகை : அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

-கம்பர்


இயல் – 4              

  இதில் வெற்றிபெற

 விண்வேறு விண்வெளியில் இயங்கு கின்ற

           வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு

மண் வேறு மண்ணோடு கலந்தி ருக்கும்

           மணல்வேறு: பனித்துளியும் மழையும் வேறு

புண் வேறு வீரர்களின் விழுப்புண் வேறு

           புகழ்வேறு செல்வாக்கு வேறு: காணும்

கண் வேறு கல்விக்கண் வேறு கற்றார்

          கவிநடையும் உரைநடையும் வேறு வேறு


பாவகை : எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

                                                                - சுரதா


 

புறநானூறு

 அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,

வறுந்தலை உலகமும் அன்றே அதனால்

காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை

மரங்கொல் நக்கன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே

பாவகை : நேரிசை ஆசிரியப்பா

திணை : பாடாண்

                                                - ஔவையார்



Post a Comment

0 Comments

Ad Code