பதினோராம் வகுப்பு தமிழ் 

இயல் 1 

நெடுவினாக்கள் 


11ம் வகுப்பு தமிழ் இயல் 1 நெடுவினாக்கள் மற்றும் விடைகள்

1. நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சுமொழியையும் எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.

 முன்னுரை:

கலைகளின் உச்சம் கவிதை என்பர் கவிதையினைஇயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்றும் கூறினார் மகாகவி பாரதி கவிதை எவ்வாறு நிகழ்கிறதுஎழுத்து மொழியைக் கடந்து பேச்சுமொழி எவ்வாறு கவிதைக்கு நெருக்கமாக இருக்கிறது என்பவை பற்றிப்பேசுகிறது இக்கட்டுரை.

பேச்சுமொழி:

  • எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறதுஎனவேதான் இலக்கிய வாழ்க்கை நெறியைகைவிட்டுப் பேச்சுமொழிக்குத் திரும்பியவுடனே கவிஞனுடைய கவிதையின் மொழிஅதிக வெளிப்பாட்டுச் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது.
  • அதனால்தான் பேச்சுமொழிஎழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.
  • பேச்சு என்பது தன்னைத் திறந்து கொள்கிற ஒரு செயல்பாடுபேச்சு என்பது மொழியில் நீந்துவது பேச்சுமொழியின் போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் நம்மை மொழி என்னும் நீரில் முன்னோக்கி நகரச் செய்கிறது.
  • இதை உணர்ந்த கவிஞர்கள் சிலர் தங்களுடைய கவிதைகளை எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவது போல அமைக்கின்றனர்இதையே அவர்கள் நேரடி மொழி எனக் கருதுகின்றனர்.
  • பேச்சு மொழிக்கு ஒரு போதும் பழமை தட்டுவதில்லைஅது வேற்றுமொழி ஆவதில்லைஅது எப்போதும் உயிர்ப்புடனும் இருக்கிறதுமாறிக்கொண்டும் இருக்கிறதுஇம்மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா இல்லை இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது என்கிறார் மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மாபேச்சு மொழியில் ஒரு கவிதை செய்யப்படுகிறபோது அஃது உடம்பின் மேல்தோல்போல் இயங்குகிறது.

எழுத்துமொழி:

  • ஒரு திரவ நிலையில்தான் விரும்பும் வகையில் தன்னிடம் கீழ்ப்படிந்து நடந்து கொள்ளும் மொழி எழுத்து மொழியாக பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைந்து விடுகிறது.
  • எழுத்து மொழி எழுதுவதை மட்டும்தான் மனிதனின் கை செய்கிறதுஎழுத்து மொழியில் பேச்சைக் கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாதுஎழுத்து என்பது ஒரு வகையில் பார்த்தால் தனக்குத் தானே பேசிக் கொள்கிற பேச்சு.
  • பேச்சு மொழியில் ஒரு கவிதை செய்யப்படுகிறபோது அஃது உடம்பின் மேல் தோல் போல் இயங்கும் ஆனால் எழுத்து மொழியில் அதே சொற்கள் கவிதையின் உணர்வைஉணர்ச்சியற்ற ஆடைபோல் போர்த்தி மூடி விடுகிறான்.

முடிவுரை: பேச்சுமொழிஎழுத்துமொழி இவைகள் மூலம் எவ்வாறு மொழியை வெளிப்படுத்தலாம் என்பதனை மேற்கண்ட கருத்துக்களின் மூலம் நாம் தெரிந்து கொண்டோம்எழுத்து மொழியை விட பேச்சு மொழியே மொழியை வெளிப்படுத்தும். சிறந்த கருவியாக இருக்கிறது.

 *******************************

2நன்னூல் பொதுப்பாயிரம்சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க.

முன்னுரை:

முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்

நன்னூல்.

நூலைப் புரிந்து கொள்ளவும் அதன் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்கவும் பாயிரம் உதவுகிறது. நன்னூலில் பொதுப்பாயிரம்சிறப்புப் பாயிரம் வாயிலாக அறியும் செய்திகளைப் பற்றி இங்கு காண்போம்.

 பாயிரம்-அறிமுகம்:

நூலை உருவாக்கும் ஆசிரியர் சிறப்பையும்அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறைப்பற்றிப் பேசுவது பாயிரமாகும்.

பாயிரத்திற்கு உரிய ஏழு பெயர்கள்:

  1. முகவுரை- நூலுக்கு முன் சொல்லப்படுவது.
  2. பதிகம் - ஜந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது.
  3. அணிந்துரைபுனைந்துரை நூலின் பெருமை முதலியவை விளங்க அலங்கரித்தும்  சொல்வது
  4. நூன்முகம் - நூலுக்கு முகம்போல் முற்பட்டிருப்பது
  5. புறவுரை - நூலில் சொல்லிய பொருள் அல்லாதவைகளை நூலின் புறத்திலே சொல்வது சொல்வது
  6. தந்துரை - நூலில் சொல்லிய பொருளல்லாதவைகளைத் தந்து
  7. பாயிரம் 1. பொதுப் பாயிரம், 2. சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும்.

பொதுப் பாயிரம்:

  1. நூலின் இயல்பு
  2. ஆசிரியர் இயல்பு
  3. கற்பிக்கும் முறை
  4. மாணவர் இயல்பு
  5. கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரம்.

சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம்:

  1. நூலாசிரியர் பெயர்.
  2.  நூல் பின்பற்றிய வழி.
  3.  நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு.
  4.  நூலின் பெயர்.
  5. தொகைவகைவிரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு.
  6.  நூலில் குறிப்பிடப்படும் கருத்து.
  7.  நூலைக் கேட்போர் (மாணவர்.
  8. நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன் ஆகிய எட்டுச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் ஆகும்.
  9. நூல் இயற்றப்பட்ட காலம்அது அரங்கேற்றப்பட்ட அவைக்களம்அது இயற்றப்பட்டதற்கான காரணம் என் இம்மூன்றையும் மேலே கூறப்பட்டுள்ள எட்டுச் செய்திகளுடன் சேர்த்துக் கூறுவோரும் உள்ளனர்இப்பாடல் நூற்பா வகையைச் சார்ந்தது.

பாயிரத்தின் முக்கியத்துவம்

ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும் பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப்படும்

மாடங்களுக்கு ஓவியங்களும் பெரிய நகரங்களுக்குக் கோபுரங்களும் அழகிய தோள்களைக் கொண்ட மகளிருக்கு அணிகலன்களும் எழிலைத் தரும்அவை போன்று எல்லா வகை நூல்களுக்கு முன்னர் அழகு தருவதாக அணிந்துரையைப் புலவர்கள் பெருமையுடன் சேர்த்து வைத்தனர்

முடிவுரை: நன்னூலில் பொதுப்பாயிரம்சிறப்புப் பாயிரம் பற்றி ஏழு நூற்பாக்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டதைக் கற்று பயன் பெறுவோம்


  *******************************


3. தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வுகளோடும் முத்துலிங்கத்தின் திணைப் பாகுபாடு எவ்வாறு இணைக்கப்படுகிறது?

சங்க இலக்கியம் கூறிய புலம்பெயர் நிகழ்வு:

  1. தமிழர்கள் வேலைவாய்ப்புவறுமை போன்ற காரணங்களினால் இடம் விட்டு இடம் செல்கின்றனர் இவ்வாறு புலம்பெயர்வது ஒன்றும் புதிதல்லஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் புலம் பெயர்ந்தபடியே இருக்கிறான்.
  2. சங்க இலக்கியம் குறிஞ்சிமுல்லைமருதம்நெய்தல்பாலை ஆகிய ஐந்து நிலங்கள் பற்றிப் பேசும் பல பாடல்கள் தலைவன்தலைவி பிரிந்து போவதைச் சொல்லும் பொருள் தேடப் போவதால் புலம்பெயர நேரிடுகிறது.
  3. நற்றிணை 153 வது பாடலில் தனிமகனார்சினம் கொண்ட அரசனின் கொடுமை தாங்க முடியாமல் துயருற்றுசொந்த ஊரைவிட்டு ஓடியவர்களின் கதையை
வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி
வாழ்வோர் போசிய பேர் ஊர்ப் பாழ் என்கிறார்.

4. 2000 வருடங்களுக்கு முன்னர் அரசரின் கொலைச் சீற்றத்திற்குப் பயந்து வெளியேறியவர்கள் போலத்தான் சமீப காலங்களில் புகலிடம் தேடி அலைந்து கரை சேர்ந்தவர்களையும் சொல்லலாம்.

 கனடாவில் புலம்பெயர் நிகழ்வுகள்:

  • தமிழ் அகதிகள் கனடாவுக்கு குடிபெயரத் தொடங்கியது 1983 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் தான் அவர்கள் குடியேறிய சில வருடங்களிலேயே பத்திரிகைகளும் ஆரம்பித்துவிட்டார்கள்நிரந்தர வேலை கிடையாதுஅடுத்த வேளை உணவு பற்றி நிச்சயமில்லைஆனால் பத்திரிகைகளும் இலக்கிய சஞ்சிகைகளும் தொடங்கியுள்ளனர்.
  • புது நாட்டில் புது வாழ்க்கையைப் பதிவு செய்கின்றனர்இன்றைய கணினி யுகத்தில் தமிழ் கற்பது இலகுவாகிவிட்டதுதமிழர்கள் எட்டுக்கோடிப் பேர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.
  •  நியூசிலாந்திலிருந்து அலாஸ்காவரை பரந்துபோய்ப் புலம்பெயர் தமிழர்கள் பத்து லட்சம் பேர் வாழ்கிறார்கள்.
  • அதனால்தான் சூரியன் மறையாத தமிழ்ப் புலம்என்று சொல்லும் அளவிற்குத் தமிழர்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.

முத்துலிங்கத்தின் திணைப் பாகுபாடு:

  •  சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையில் ஒன்று ஐங்குறுநூறுஐவகை நிலத்திற்கும் ஒவ்வொரு நூறு பாடலாக ஐந்நூறு பாடல்கள் கொண்டது.
  • அந்நூலில் பனியும் பனி சார்ந்த நிலத்துக்கும் பாடல்கள் இல்லைபுலம் பெயர்ந்த பத்து இலட்சம் மக்கள் சென்றடைந்தது பனிப் பிரதே சாங்களுக்குத்தான்.
  • ஆறு மணிக் குருவிக்கு எல்லையே கிடையாதுஇமயமலைக்குப் பறந்துபோய் மீண்டும் திரும்பும் அதேபோல்தான் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களும்அவர்களுக்கு எல்லையே கிடையாது. அவர்கள் உலகம் ஆறாம் திணை பனியும் பனி சார்ந்த நிலமும் தான்.
  • இவ்வாறு தமிழர் வாழ்வோடும் புலம் பெயர் நிகழ்வுகளோடும் முத்துலிங்கத்தின் திணைப் பாகுபாடு இணைக்கப்படுகிறது.



*****************************************