10th standard Tamil Unit 1
Question and Answers
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1
நெடுவினாக்களும் விடைகளும்
இயல்1 நெடுவினாக்கள்
- மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
- தமிழில் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் வாழ்வதற்கான மரைக் குறிப்புகளை எழுதுக.
ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.
குழல் - வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்கு மொழியைப் பேச மட்டுமே தெரியும், ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்பு பற்றி உரையாடல்
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 நெடுவினாக்களும் விடைகளும்.
1. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்த்தாய் இன்று நேற்று பிறந்தவள் இல்லை. அவளுடைய புகழைப் பாடப்பாட இனிமை பிறக்கும் தமிழ்த்தாயைப் போற்றாத புலவரில்லை என்றால் அது மிகையாகாது மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களும் பெருஞ்சித்திரனார் அவர்களும் தமிழ்த்தாயை வாழ்த்தியமையைப் பார்ப்போம்.
பெ. சுந்தரனார் அலைகடலை ஆடையாக அணிந்த பூமிப் பெண்ணிற்குப் பாரத கண்டம், முகமாகத் திகழ்வதாகக் கூறுகிறார். அம்முகத்திற்குத் தென்திசை நாடுகள் பிறைநிலவு போன்ற நெற்றியாகவும் அந்நெற்றியில் நறுமணம் மிக்க திலகமாய்த் தமிழகம் உள்ளதாய்க் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் திலகத்தின் மணம் எல்லோரையும் இன்புறச் செய்வது போல் தமிழ்த்தாய் எல்லாத் திசைகளிலும் புகழ்பெற்றவளாக இருப்பதாகக் கூறியுள்ளார்
பெருஞ்சித்திரனார் தமிழைப் பழமைக்குப் பழமையாய்த் தோன்றியவள், குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசாளும் மண்ணுலகப் பேரரசு, பாண்டிய மன்னனின் மகள் என்றெல்லாம் குறிப்பிடுகிறார் பெ.சுந்தரனார் தமிழ்த்தாய் எல்லாத் திசைகளிலும் புகழ்பெற்றுத் திகழ்வதாகக் கூறியுள்ளார். அதனையே பெருஞ்சித்திரனார் திருக்குறள் பெருமைக்குரியவளாகவும் பதினெண் மேற்கணக்கு, கீழ்க்கணக்கு ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாத் திசையிலும் பரவியுள்ளாள். பொங்கியெழும் இந்நினைவுகளால் தலை பணிந்து வாழ்த்துகின்றோம் என்றார் உலகின் மூத்தமொழியாக இருந்தும் இன்றளவும் இளமையாக இருக்கின்றாள் என்று சுந்தரனார் பாடுகிறார். பெருஞ்சித்திரனார் இதனைப் பழமைக்குப் பழமை என்கிறார்
சுந்தரனார் தமிழ் மொழியின் வளம் பெருகுகின்றதே தவிர குறையவில்லை என்கிறார். இதனைப் பெருஞ்சித்திரனார் தமிழ் பழம்பெருமையும் தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டுள்ளது என்கிறார். மேலும் வியக்கத்தக்க நீண்ட உன் நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன” என்கிறார்
சுந்தரனார் தமிழை, தமிழாக பெண்ணே, தாயே உன்னைவாழ்த்துகிறேன் என்கிறார். பெருஞ்சித்திரனார், எம் தனித்தமிழே! உள்ளத்தில் கனல் மூள, வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம் என்று பாடியுள்ளார் இவ்வாறு மனோன்மணியம் பெ. சுந்தரனார் அவர்களும் பெருஞ்சித்திரனார் அவர்களும் தமிழின் பெருமையைப் பறைசாற்றி வாழ்த்துகின்றனர்
1. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.
அனைவருக்கும் வணக்கம்!
தமிழ்த்தாய் இன்று நேற்று பிறந்தவள் இல்லை. அவளுடைய புகழைப் பாடப்பாட இனிமை பிறக்கும் தமிழ்த்தாயைப் போற்றாத புலவரில்லை என்றால் அது மிகையாகாது மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களும் பெருஞ்சித்திரனார் அவர்களும் தமிழ்த்தாயை வாழ்த்தியமையைப் பார்ப்போம்.
பெ. சுந்தரனார் அலைகடலை ஆடையாக அணிந்த பூமிப் பெண்ணிற்குப் பாரத கண்டம், முகமாகத் திகழ்வதாகக் கூறுகிறார். அம்முகத்திற்குத் தென்திசை நாடுகள் பிறைநிலவு போன்ற நெற்றியாகவும் அந்நெற்றியில் நறுமணம் மிக்க திலகமாய்த் தமிழகம் உள்ளதாய்க் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் திலகத்தின் மணம் எல்லோரையும் இன்புறச் செய்வது போல் தமிழ்த்தாய் எல்லாத் திசைகளிலும் புகழ்பெற்றவளாக இருப்பதாகக் கூறியுள்ளார்
பெருஞ்சித்திரனார் தமிழைப் பழமைக்குப் பழமையாய்த் தோன்றியவள், குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று அரசாளும் மண்ணுலகப் பேரரசு, பாண்டிய மன்னனின் மகள் என்றெல்லாம் குறிப்பிடுகிறார் பெ.சுந்தரனார் தமிழ்த்தாய் எல்லாத் திசைகளிலும் புகழ்பெற்றுத் திகழ்வதாகக் கூறியுள்ளார். அதனையே பெருஞ்சித்திரனார் திருக்குறள் பெருமைக்குரியவளாகவும் பதினெண் மேற்கணக்கு, கீழ்க்கணக்கு ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாத் திசையிலும் பரவியுள்ளாள். பொங்கியெழும் இந்நினைவுகளால் தலை பணிந்து வாழ்த்துகின்றோம் என்றார் உலகின் மூத்தமொழியாக இருந்தும் இன்றளவும் இளமையாக இருக்கின்றாள் என்று சுந்தரனார் பாடுகிறார். பெருஞ்சித்திரனார் இதனைப் பழமைக்குப் பழமை என்கிறார்
சுந்தரனார் தமிழ் மொழியின் வளம் பெருகுகின்றதே தவிர குறையவில்லை என்கிறார். இதனைப் பெருஞ்சித்திரனார் தமிழ் பழம்பெருமையும் தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டுள்ளது என்கிறார். மேலும் வியக்கத்தக்க நீண்ட உன் நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன” என்கிறார்
2. தமிழில் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் வாழ்வதற்கான மரைக் குறிப்புகளை எழுதுக
- சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும், தமிழ் மட்டும் அதில் தலை சிறந்ததாகும்.
- தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழில் உள்ள ஒரு பொருள் பல சொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத் தெளிவாகத் தோன்றும்.
- தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம் முதலிய பிற திராவிட மொழிகளுக்கு உரியனவாக கருதப்படும் சொற்களும் தமிழில் உள்ளது என்கிறார் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்)
- தமிழ்ச் சொல் வளத்தைப் பலதுறைகளிலும் காணலாமேனும், இங்குப் பயிர்வகைச் சொற்கள் மட்டும் சிறப்பாக எடுத்துக் காட்டப்பெறும்.
ஒரு தாவரத்தின் அடிப் பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள்.
கழி
கழை
அடி
தமிழ்நாடு எத்துணைப் பொருள்வளமுடைய என்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிறநாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில வகைப்பட்டனவாகவுமிருக்க தமிழ்நாட்டிலுள்ளவையோ, பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதுமையை எடுத்துக்கொள்ளின் அதில் சம்பா கோதுமை, குண்டுக் கோதுமை, வாற்கோதுமை முதலிய சிவ வகைகள் உண்டு. ஆனால், தமிழ்நாட்டு நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும் சம்பா. மட்டை, கார் என்றும் பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச்சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலியஅறுபது உள்வகைகள் உள்ளன.
3. ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.
குழல் - வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்கு மொழியைப் பேச மட்டுமே தெரியும், ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்பு பற்றி உரையாடல்.
உறவினர் மகள்
(மாலா) : (ஆங்கிலச் செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கிறார்)
செந்தமிழ் செல்வி: என்ன மாலா! தமிழ் செய்தித்தாள் படிக்கிறாயா?
மாலா: செய்தித்தாள் தான். ஆனால் தமிழ் இல்லை. ஆங்கிலம்தான்
செந்தமிழ் செல்வி : ஏன் தமிழ் படிக்கத் தெரியாதா?
மாலா: இல்லை . தமிழ் நன்றாகப் பேசுவேன். படிக்கத் தெரியாது எனக்கு தமிழ் நூல்கள் படிக்க விருப்பம் தான்.
செந்தமிழ்செல்வி: தமிழ் மிகவும் எளிமையான மொழி. அம்மொழியைப் பேசுவது எவ்வளவு எளிமையோ அவ்வளவு படிப்பதும் எளிமைதான்
மாலா : அப்படியா?
செந்தமிழ்செல்வி: தமிழ் உரைநடைக்கு இலக்கண முறை என்று ஒன்று இல்லை. உரைநடைக்கு கருத்துகள் தெரிந்தால் அவற்றை எளிதில் எழுதவும் முடியும், வாக்கியமைப்பு திணை, பால், எண், இடம், காலம் பொருந்தியும் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் சரியாக அமைந்தால் போதும்.
மாலா : உரைநடை என்கிறாயே அது என்ன?
செந்தமிழ்செல்வி: செய்யுள் என்பவை எதுகை, மோனை, இயைபு, அணி என்று பல நயங்களால் அழகுப்படுத்தப்பட்டிருக்கும். உரைநடை அவ்வாறு இல்லை. உரைநடை என்பது தொல்காப்பியர் காலத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலா : அப்படியா?
செந்தமிழ்செல்வி: இறையனார் களவியல் உரை, இளங்கோவடிகள் உரை என வளர்ந்து வந்துள்ளது. திரு.வி.க. மு.வ. அண்ணா போன்றோர் இருபதாம் நூற்றாண்டில் உரைநடை வளர்ச்சிக்குக் காரணமாக இருந்துள்ளனர்.
மாலா : உரைநடை என்பதில் வரும் இலக்கியங்கள் யாவை?
செந்தமிழ்செல்வி சிறுகதை, புதினம், நாவல், புராணக் கதைகள் இவையெல்லாம் உரைநடை, உரைநடை வளர்ந்ததால் நாம் பிறமொழி நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து பாரதியின் அவாவை நிறைவேற்றியுள்ளோம்.
மாலா: வீரமாமுனிவர், ஜி.யு.போப் போன்ற சான்றோர்களும் இப்பணியைச் சரியாகச் சொன்னாய். கால்டுவெல் தமிழுக்கு ஆற்றிய பணிகள் ஏராளம் செவ்வனே ஆற்றியுள்ளார்கள் அல்லவா?
செந்தமிழ்செல்வி இவர் தமிழ் மொழியின் சிறப்பை தமிழருக்குக் கூறியவர். இதுபோல பல சான்றோர்கள் மூலம் உரைநடை வளர்ந்துள்ளது. உரைநடை வளர்ந்து வருவதால்தான் தமிழ் இலக்கியங்களைப் பிறர் அறிய முடிகிறது.
மாலா: தமிழ் மொழி அறியாதவர்களால் தமிழைப் படித்து நூல்கள் இயற்றும் போது எனக்குத் தமிழ் பேசத் தெரியும். கற்பது என்ன கடினமா? இன்றே எனக்கு தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடு, நானும் கற்றுக் கொள்கிறேன்
செந்தமிழ் செல்வி : சரி, வா!