10th standard Tamil Unit 1 

Question and Answers

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 குறுவினாக்கள்

இயல்1 அமுத ஊற்று குறுவினாக்கள்

1. 'வேங்கைஎன்பதைத் தொடர்மொழியாகவும் பொதுவாழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

2. 'மன்னும் செல்ம்பேமணியே கலைவடிவே

முன்னும் நினைவால் முடிதாழவே வாழ்த்துவமே!' - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களை தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

3. ஒரு தாற்றில்  பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல தாறு  வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டிஎஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக

4. 'உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண் வற்றாகும் கீழ்' -  இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டிஅதன் இலக்கணம் தருக.

5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

இயல்1 அமுத ஊற்று குறுவினாக்கள் மற்றும் விடைகள்

1. 'வேங்கைஎன்பதைத் தொடர்மொழியாகவும் பொதுவாழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

  • வேங்கை - மரத்தைக் குறிக்கும்
  • வேம் - கை - வேகின்ற கை

2. 'மன்னும் செல்ம்பேமணியே கலைவடிவே

முன்னும் நினைவால் முடிதாழவே வாழ்த்துவமே!' - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களை தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

  1. சீவக சிந்தாமணி
  2. வளையாபதி
  3. குண்டலகேசி

3. ஒரு தாற்றில்  பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல தாறு  வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டிஎஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக

 சரியான தொடர்கள்:

  • ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன
  • ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன

 பிழையான தொடர்கள்:

  • ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன

 காரணம்:

  • பல சீப்பு வாழைப்பழங்கள் சேர்ந்ததுதான் ஒரு தாறு.
  • ஒரு சிரிப்பில் பல வாழைப்பழங்கள் தான் இருக்கும்.

4. 'உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

வடுக்காண் வற்றாகும் கீழ்' -  இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டிஅதன் இலக்கணம் தருக.

  1. உடுப்பதூஉம் - இன்னிசை அளபெடை
  2. உண்பதூஉம் - இன்னிசை அளபெடை

5. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் 

எடுத்துக்காட்டுத் தருக.

ஒரு சொல்லோ , சொற்றொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடை அணிஎன்றும் அழைப்பர்தற்கால உரைநடையில் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன

.கா : சென்னை வரவேற்கிறது என்பதை ஆம்சென்னை வர வேர்க்கிறது (வியர்க்கிறது என்பதன் பேச்சு வழக்குஎன்று சிலேடை மூலம் பகடியாக சொல்லலாம்

***************************************************