பத்தாம் வகுப்பு 

தமிழ் இயல் 1 
சிறுவினாக்களும் விடைகளும்.

இயல்1 சிறுவினாக்கள்

  1.  தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு     சுட்டுவன யாவை?
  2. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளதுஇதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
  3. அறிந்ததுஅறியாததுபுரிந்ததுபுரியாததுதெரிந்ததுதெரியாததுபிறந்ததுபிறவாததுமயை அனைத்தையும் யாம் அறிவோம்அதுபற்றி உமது அறிவுரை மக்களுக்கு தேவை இல்லைஎல்லாம் எமக்குத் தெரியும்.

    இக்கூற்றின் வண்ண எழுத்துக்களில் உள்ள வினைமுற்றுகள் தொழில் பெயர்களாக மாற்றி எழுதுக.

  4. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை    விளக்குக.

பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 சிறு வினாக்களும் விடைகளும்.

 1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள்:

 அன்னை மொழியே தமிழ் மொழி பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியாகவும்கடல் கொண்ட குமரிக்கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசாகவும்பாண்டிய மன்னனின் மகளாகவும் திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளாகவும் பத்துப்பாட்டுஎட்டுத்தொகை முதலிய சங்க நூல்களாகவும் நிலைத்து நிற்கும் சிலப்பதிகாரம் ஆகவும் அழகான மணிமேகலை யாகவும் விளங்குவதால் தமிழன்னையை வாழ்த்துகின்றார்

 

2. 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'

இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

  •  கண்ணன் வயலில் நெல் நாற்றிற்குத் தண்ணீர் பாய்ச்சினான்.
  •  தாத்தா நிறைய தென்னம்பிள்ளைகளை வாங்கி வந்தார்.
  •  கந்திரி நாற்றில் வெட்டுக்கிளிகள் இருந்தன.
  • மாங்கன்று மழைக்குப் பிறகு தளிர் விட்டுள்ளது.
  •  வாழை மரத்தடியில் வாழைக்கன்றுகள் உள்ளன.

 

3. அறிந்ததுஅறியாததுபுரிந்ததுபுரியாததுதெரிந்ததுதெரியாததுபிறந்ததுபிறவாதது' மயை அனைத்தையும் யாம் அறிவோம்அதுபற்றி உமது அறிவுரை மக்களுக்கு தேவை இல்லைஎல்லாம் எமக்குத் தெரியும்.

இக்கூற்றின் வண்ண எழுத்துக்களில் உள்ள வினைமுற்றுகள் தொழில் பெயர்களாக மாற்றி எழுதுக.

வினைமுற்று

தொழிற்பெயர் 

அறிந்தது 

அறிதல்

அறியாதது 

அறியாமை 

புரிந்தது  

புரிதல்

புரியாதது

புரியாமை 

தெரிந்தது 

தெரிதல்

தெரியாதது 

தெரியாமை 

பிறந்தது

பிறத்தல்

பிறவாதது 

பிறவாமை


4. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கு:

  • முத்தமிழ் : கடல் - முத்தினையும் அமிழ்தினையும் தருகிறதுதமிழ் - இயல்இசைநாடகம் ஆகிய முத்தமிழாய் விளங்குகிறது.
  • முச்சங்கம் : கடல் - வெண்சங்குசலஞ்சலம்பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறதுதமிழ் - முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
  • மெத்தவணிகலன் (மெத்த + அணிகலன்) : தமிழ்ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றுள்ளதுகடல் மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது
  • சங்கத்தவர் காக்க : தமிழ்சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது கடல்தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்தி சங்கினைக் காத்தல்.

 **************************************************