Ad Code

11th tamil memory poem -thirukural

 

11th Tamil Memory Poem

திருக்குறள்


 பதினோராம் வகுப்பு தமிழ் மனப்பாடச் செய்யுள்

 திருக்குறள் - அடக்கமுடைமை

 

1. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

 மலையினும் மாணப் பெரிது.

 2. யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

 சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

3. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

 நாவினால் சுட்ட வடு

 

ஒப்புரவறிதல்

4. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

 வேளாண்மை செய்தல் பொருட்டு

 6.மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் 

பெருந்தகை யான்கண் படின்

 

புகழ்

 8. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

9. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்

 

நிலையாமை

 

13. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 

பெருமை உடைத்துஇவ் வுலகு

                        

துறவு

15. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 

அதனின் அதனின் இலன்

16. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 

பற்றுக பற்று விடற்கு

 

வலியறிதல் 

19. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்.

20. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை 

வியந்தான் விரைந்து கெடும்.

22. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல 

இல்லாகித் தோன்றாக் கெடும்.

 

காலமறிதல்

 24. ஞாலம் கருதினும் கைகூடும் காலம் 

கருதி இடத்தால் செயின்.

  

குறிப்பறிதல்

 3. குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள் 

யாது கொடுத்தும் கொளல்.


பகைத்திறம் தெளிதல்

 7. வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க 

சொல்லேர் உழவர் பகை

8. இளைதாக முள்மரம் கொல்க களையுநர் 

கைகொல்லும் காழ்த்த இடத்து.

9. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 

அற்றது போற்றி உணின்.

10. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

 

இரவச்சம்

 13. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து 

கொடுக உலகியற்றி யான்.


*****************************************

Post a Comment

0 Comments

Ad Code