Ad Code

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்நிலையில் தேர்தல் காரணமாக பள்ளிகள் இன்று முதல் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

சட்டமன்ற தேர்தல் பணிகள்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகள் காரணமாக 1 மாதங்களாக அனைத்து அரசு அலுவலகங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. ஆனால் கொரோனா காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக திறக்கப்படாமல் தற்போது தான் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் மட்டும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வரவில்லை.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் - தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவு!

இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பள்ளிகளை ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இன்று புனித வெள்ளி என்பதால் ஏற்கனவே அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அனைத்து பள்ளிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வர பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிகள் வாக்குச் சாவடிகளாக மாற்றப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாளை ஆசிரியர்களுக்கான இறுதி கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 7 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code