9th,11th வகுப்புகளுக்கு, பிப்ரவரி 1 முதல் பள்ளிகளை திறக்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இது குறித்து, நாளை மறுநாள் ஆலோசனை நடத்தி, முதல்வரின் ஒப்புதல் பெறப்பட உள்ளது.



தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, 2020 மார்ச் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. புதிய கல்வி ஆண்டு துவங்கினாலும், ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடந்தன.இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதும், 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், இம்மாதம் 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. நான்கு நாட்களாக, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் முடிவுகள், 29ம் தேதி வெளியாக உள்ளன. 

மேலும் படிக்க:10th,11th,12th பொதுத்தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து, தொற்று எண்ணிக்கை குறைந்த அளவில் மட்டுமே இருந்தால், பிப்., 1 முதல் ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கும் பள்ளிகளை திறந்து, நேரடி வகுப்புகளை நடத்தலாம் என, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.இது குறித்து, தலைமை செயலகத்தில், நாளை மறுதினம் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. 

இதில், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.'இந்த ஆலோசனையின் முடிவில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளை துவங்குவது குறித்து, முதல்வரிடம் ஒப்புதல் பெறுவதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என, பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The Tamil Nadu School Education Department plans to open schools for 9th and 11th classes from February 1.  In this regard, the approval of the Chief Minister is to be obtained by holding a consultation the next day.

In Tamil Nadu, schools have been closed since March 2020 to prevent the spread of corona.  Despite the start of the new school year, classes were held online only.  For four days, the corona test is performed on government school students.  The results will be released on the 29th.

 Read more: Permission has been granted to hold 10th, 11th, 12th Public Exam.

 Following this, the school education department plans to open schools for classes 9 to 9 and plus 1, Feb. 1, if the number of infections is only low.

 School Education Minister Senkottayan, Principal Secretary Theeraj Kumar, Director of School Education Kannabhan and officials are expected to participate in the meeting.