Ad Code

6th social Science Tern-2 Book back Question - answer - தேசிய சின்னங்கள்

 6th social Science Tern-2 Book back Question - answer -குடிமையியல்-  தேசிய சின்னங்கள்

6th social science term -2 Book back Question and answer help for your exam preparation. These answers prepared by good experience teachers team .TNPSC Group 2,4,2A and police exam 



மீள்பார்வை

• புலி, யானை, டால்பின், மயில், கருநாகம், ஆலமரம், மாம்பழம், கங்கை, தாமரை ஆகியவை இயற்கை தேசியச் சின்னங்களாகும்.

• இந்திய அரசியலமைப்புச் சபை 1947, ஜூலை 22இல் மூவண்ணக்கொடியைத்தேசியக் கொடியாக ஏற்றுக் கொண்டது.

• தேசியக்கொடி, தேசிய இலச்சினை, தேசிய கீதம், தேசியப்பாடல் போன்றவை பிற தேசியச் சின்னங்களாகும்.

• விடுதலை நாள், குடியரசு நாள், காந்திஜெயந்தி போன்றவை முக்கிய தேசிய விழாக்களாகும்.



Book Back Exercise

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

1. தேசியப் பாடலான வந்தே மாதரத்தை

இயற்றியவர் ______________.

அ) பிங்காலி வெங்கையா

ஆ) ரவீந்திரநாத் தாகூர்

இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

ஈ) காந்திஜி

2. இந்தியாவின் தேசியக் கீதம் ________

அ) ஜன கண மன

ஆ) வந்தே மாதரம்

இ) அமர் சோனார் பாங்கலே

ஈ) நீராடுங் கடலுடுத்த

3. ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர் ______________.

அ) அக்பர்

ஆ) ரவீந்திரநாத் தாகூர்

இ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

ஈ) ஜவஹர்லால் நேரு

4. _______________பிறந்தநாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம்

அ) மகாத்மா காந்தி

ஆ) சுபாஷ்சந்திர போஸ்

இ) சர்தார் வல்லபாய்பட்டேல்

ஈ) ஜவஹர்லால் நேரு

5. நம் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் நிறம் ______________.

அ) வெளிர்நீலம்

ஆ) கருநீலம்

இ) நீலம்

ஈ) பச்சை

6. இந்திய விடுதலை நாளில் பறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி ______________ அருங்காட்சியத்தில் உள்ளது.

அ) சென்னை கோட்டை

ஆ) டெல்லி

இ) சாரநாத்

ஈ)கொல்கத்தா

7. தேசியக் கீதத்தை இயற்றியவர்

______________.

அ) தேவேந்திரநாத் தாகூர்

ஆ) பாரதியார்

இ) ரவீந்திரநாத் தாகூர்

ஈ) பாலகாங்காதர திலகர்

8. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு ____________

அ) 50 வினாடிகள்

ஆ) 52 நிமிடங்கள்

இ) 52 வினாடிகள்

ஈ) 20 வினாடிகள்

9. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர்______________

அ) பங்கிம் சந்திர சட்டர்ஜி

ஆ) ரவீந்திரநாத் தாகூர்

இ) மகாத்மா காந்தி

ஈ) சரோஜினி நாயுடு

10. விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர் ______________

அ) பிரதம அமைச்சர்

ஆ) குடியரசுத்தலைவர்

இ) துணைக்குடியரசுத் தலைவர்

ஈ) அரசியல் தலைவர் எவரேனும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. இந்திய தேசிய இலச்சினை______________ல் உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2. இந்தியாவின் தேசியக்கனி ______________.
3. இந்தியாவின் தேசியப் பறவை______________.
4. இந்தியாவில் தேசிய மரம் ______________.
5. 1947 விடுதலை நாளின்போது ஏற்றப்பட்டக் கொடி ______________ என்னுமிடத்தில் நெசவு செய்யப்பட்டது.
6. இந்திய தேசியக் கொடியைவடிவமைத்தவர்______________.
7. சக ஆண்டு முறையைத் துவக்கியவர்______________.
8. இந்தியாவின் மிக நீளமான ஆறு ______________.
9. இந்திய நாணயத்தின் குறியீட்டை வடிவமைத்தவர் ______________.
10. தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரம் ______________ ஆரங்களைக் கொண்டது.
விடைகள்:
1.சாராநாத்
2.மாம்பழம்
3.மயில்
4.ஆலமரம்
5.தமிழ்நாட்டிலுள்ள குடியாத்தம்
6.பிங்காலி வெங்கையா
7.பேரரசர் கனிஷ்கர்
8.கங்கை
9.டி.உதயகுமார்
10.24

III.சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

1. நான்முகச் சிங்கம் தற்போது ______________ அருங்காட்சியகத்தில் உள்ளது.

(கொல்கத்தா / சாரநாத்)

2. தேசியக் கீதம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு ______________.

(1950 / 1947)

3. ______________ இந்தியாவின் தேசிய நுண்ணுயிரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(லாக்டோ பேசில்லஸ் / ரைசோபியம்)

IV. நிரப்புக.

1. காவி – தைரியம்; வெள்ளை – ________:நேர்மை

2. குதிரை – ஆற்றல்; காளை –__________ ;வலிமை

3. 1947 – விடுதலைநாள்; 1950 –________;குடியரசு நாள்

V. பொருந்தியுள்ளவற்றுள் சரியானதைத்

தேர்ந்தெடுக்கவும்

1. ரவீந்திரநாத் தாகூர் – அ. தேசியப்பாடல்

2. பங்கிம் சந்திர சட்டர்ஜி – ஆ. தேசியக்கொடி

3. பிங்காலி வெங்கையா – இ. வான் இயற்பியலாளர்

4. மேக்னாத் சாகா – ஈ. தேசியகீதம்

        1.   2.  3.  4

அ). அ ஈ ஆ இ

ஆ). ஈ அ இ ஆ

இ). ஈ அ ஆ இ

VI. பொருத்தியபின் பொருந்தாதது எது?

1. தேசிய ஊர்வன – புலி

2. தேசிய நீர்வாழ் விலங்கு – லாக்டோ பேசில்லஸ்

3. தேசிய பாரம்பரிய விலங்கு– ராஜநாகம்

4. தேசிய நுண்ணுயிரி– டால்பின்

VII. தவறான சொற்றொடரைத்தேர்ந்தெடுக்கவும்.

1. அ) தேசியக் கொடியின் நீள அகலம் 3:2 என்ற விகிதத்தில் உள்ளது.

ஆ) அசோகச் சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டது.

) அசோகச் சக்கரம் வெளிர் நீலநிறமுடையது.

2. அ) பிங்காலி வெங்கையா தேசியக் கொடியை வடிவமைத்தார்.

ஆ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல்தேசியக் கொடி தற்போது கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ளது.

இ) விடுதலை நாளில் ஏற்றப்பட்ட முதல் தேசியக்கொடி குடியாத்தத்தில் நெசவு செய்யப்பட்டது.

VIII. சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

1. அ) ஆகஸ்டு 15 அன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.

ஆ) நவம்பர் 26 அன்று குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.

இ) அக்டோபர் 12 அன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

IX-விடையளிக்கவும்

1.தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் குறிப்பன எவை

  1. காவி நிறம் - தைரியம், தியாகம்
  2. பச்சை நிறம் - செழுமை, வளம்
  3. வெள்ளை நிறம் -நேர்மை, அமைதி, தூய்மை
  4. சக்கரத்தின் கருநீல நிறம்- அறவழி, அமைதி

 2.தேசிய இலச்சினையின் பாகங்கள் எவை

  1. தேசிய இலச்சினையான சாரநாத் அசோகத்தூண் மேல்பகுதி, அடிப்பகுதி என பிரிக்கப்பட்டுள்ளது
  2. மேல்பகுதியில் வட்ட வடிவ பீடத்தில் நான்முகச் சிங்கங்கள் உள்ளன .
  3. அடிப்பகுதியில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்களும் இடையே தர்மசக்கரமும் அமைந்துள்ளது. 
  4. இதனடியில் 'சத்யமேவ ஜயதே' என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது 
3. தேசியக் கீதத்தின் சிறப்பு அம்சங்கள் எவை?

  1. இந்திய தேசிய கீதம் இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது.
  2.  இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு இது அடையாளச் சின்னமாக விளங்குகிறது .
4.இந்திய நாணயத்தின் குறியீட்டின் வடிவத்தை வரைந்து வரையறுக்கவும்

இந்திய நாணயம்: (INR) 

  1.  இந்தியாவின் அதிகாரப்பூர்வ நாணயம் ரூபாய் ₹. 
  2. ரூபாய்க்கான சின்னத்தை 2010-ல் வடிவமைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த டி. உதயகுமார் ஆவார்

5. தேசிய இலச்சினை எங்கெல்லாம் 

பயன்படுத்தப்படுகிறது?

6. தேசிய உறுதி மொழியை எழுதியவர் யார்?

7. தேசிய இலச்சினையின் அடிபாகத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் எவை?

8. இயற்கை தேசியச் சின்னங்கள் எவை?

9. மயில்கள் சரணாலயம் எங்குள்ளது?


  • தேசிய இலச்சினை

      சாரநாத் அசோகத் தூணின் உச்சியில் அமைந்திருக்கும் நான்முகச் சிங்கம் இந்தியாவின் தேசிய இலச்சினையாக ஜனவரி 26, 1950இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் அடிப்பகுதியில் ‘சத்யமேவ ஜெயதே’ எனப் பொ றிக்க ப்ப ட் டு ள்ள து . ‘வாய்மையே வெல்லும்’ என்பதே இதன் பொருளாகும். தேசிய இலச்சினை மேல்பகுதி, அடிப்பகுதி என இரண்டு பகுதிகளைக் கொண்டது.மேல்பகுதியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாகபொருந்தியிருக்குமாறு வட்டவடிமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நமது இலச்சினையில் மூன்று சிங்க உருவங்களை மட்டுமே காண இயலும்.அடிப்பகுதியில் யானை (ஆற்றல்), குதிரை(வேகம்), காளை (கடின உழைப்பு), சிங்கம் (கம்பீரம்) ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன. இவ்வுருவங்களுக்கிடையே தர்ம சக்கரம் அமைந்துள்ளது. இந்த இலச்சினை இந்திய அரசின் அலுவல் முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் கடவுசீட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

  • தேசியகீதம்

‘ஜன கண மன……’ நமது தேசிய கீதமாகும். இது இந்தியாவின் இறையாண்மைமற்றும் ஒருமைபாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது. இப்பாடல் இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது. இதன் இந்தி மொழியாக்கம் ஜனவரி 24, 1950இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  • பாடும்போது பின்பற்ற வேண்டியன

• இக்கீதத்தை சுமார் 52 வினாடிகளில் பாட/இசைக்க வேண்டும்.

• பாடும்போது அனைவரும் எவ்விதஅசைவுகளும் இன்றி நேராக நிற்க வேண்டும்.

• பொருள் புரிந்து சரியாகப் பாடவேண்டும்.தேசியப் பாடல் - வந்தே மாதரம்வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய "வந்தே மாதரம் பாடலின் முதல் பத்தி விடுதலை போராட்டத்தில் முக்கியப் பங்களித்தது. இதன் காரணமாக, தேசிய கீதத்திற்க்கு இணையான தேசியப் பாடல் என்ற சிறப்பு இப்பாடலுக்கு அளிக்கப்படுகிறது" என அரசியலமைப்பு சட்ட நிர்ணய மன்றத் தலைவரும் மேனாள் குடியரசுத்தலைவருமான ராஜேந்திர பிரசாத் 1950, ஜனவரி 24 ஆம் நாள் அறிவித்தார். இப்பாடல் ஆனந்த மடம் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டது.

  • தேசிய உறுதிமொழி

“இந்தியா எனது தாய்நாடு…..” எனத்தொடங்கும் நமது தேசிய உறுதிமொழியைப் பிதிமாரி வெங்கட சுப்பாராவ் என்பவர் தெலுங்கில் எழுதினார்.

  • தேசிய நுண்ணுயிரி

நாம் அன்றாடம் சாப்பிடும் தயிர் பாலிலிருந்து உருவாகப் பயன்படுவது லாக்டோபேசில்லஸ் டெல்புரூக்கி எனும் நுண்ணுயிர். 2012-ம் ஆண்டில் இது தேசிய நுண்ணுயிராகஅங்கீகரிக்கப்பட்டது. இந்தப் பாக்டீரியா வேதிவினை புரிந்து பாலில் இருக்கும் புரதத்தை மாற்றுவதால் தயிர் கிடைக்கிறது. தயிர்செரிமானத்துக்கும், வயிற்றுக் கோளாறுகளுக்கும், குளிர்ச்சி தருவதற்கும் அறியப்பட்டது.

  • இந்திய நாணயம் (INR) `

இந்தியாவின் அதிகாரபூர்வ பணத்தின்பெயர் ரூபாய். 16-ம் நூற்றாண்டில் மன்னர் ஷெர்ஷா சூரி வெளியிட்ட வெள்ளி நாணயத்துக்கு ‘ருபியா’ என்று பெயர். அதுவே ரூபாய் என்று மருவியுள்ளது. ரூபாய்க்கானசின்னம் `. இந்தச் சின்னத்தை 2010-ல் வடிவமைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த டி. உதயகுமார் ஆவார்.

  • தேசிய நாட்காட்டி

பேரரசர் கனிஷ்கர் காலத்தில் கி.பி.(பொ.ஆ.) 78-ல் சக ஆண்டு முறை தொடங்கியது. இளவேனில் கால சம பகல்-இரவு நாளான மார்ச் 22 அன்று இந்த ஆண்டு தொடங்குகிறது. லீப் ஆண்டுகளில் இது மார்ச் 21 ஆக அமையும். சக ஆண்டு முறையையேநமது தேசிய நாட்காட்டி பின்பற்றுகிறது. பிரபல வான் இயற்பியலாளர் மேக்னாத் சாகா தலைமையிலான நாட்காட்டி சீரமைப்புக்குழுவின் பரிந்துரையின் பேரில் 1957 மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டி ஏற்றுக்கொள்ளப்பட்டது.பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டஇந்திய மக்களிடையே நாட்டுப்பற்றையும் ஒற்றுமை உணர்வையும் வளர்த்தெடுப்பதில் தேசிய சின்னங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Post a Comment

0 Comments

Ad Code