Ad Code

9th tamil Guide unit-1 Question and answer

 9th tamil Guide PDF download online study material, 9th tamil Guide திராவிட மொழிக்குடும்பம் book back  Question and answer, 9th tamil Guide திராவிட மொழிக்குடும்பம் creative question and answer.


குறுவினா


1.நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

         நீங்கள் பேசும் மொழி தமிழ் மொழி, தமிழ் மொழி இந்திய மொழிக் குடும்பத்தில் திராவிட மொழிகள் வகையைச் சேர்ந்தது.

சிறுவினா

1.திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை?அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக:-

  • தென் திராவிட மொழிகள்
  • வட திராவிட மொழிகள்
  • நடுத் திராவிட மொழிகள்

என மூன்றாகப் திராவிட மொழிகளைப் பிரிப்பர்.

தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்:

  • தொன்மை, 
  • இலக்கண-இலக்கிய வளம் உடையது 
  • தமிழ் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் பேசப்படும் பெருமையுடையது.
  • தமிழ்,பிற திராவிட மொழிகளை விட தனித்த இலக்கண வளத்தை கொண்டு தனித்தியங்கும் ஆற்றல் உடையது .
  • தமிழ் ,பிறமொழித் தாக்கம் இல்லாத மொழி.


2.தமிழ் மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

  • மூணு - மலையாளம்
  • முரு -கன்னடம்
  • மூடு - தெலுங்கு
  • முஜி - துளு


நெடுவினா

1.திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக?

      திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது.

        தமிழ்' என்ற சொல்லில் இருந்து 'திராவிடா என்ற சொல் பிறந்தது என்பதை ஹீராஸ் பாதிரியார் 

தமிழ் - தமிழா - தமிலா - டிரமிலா - ட்ரியா - த்ராவிடா - திராவிடர் என்று விளக்குகிறார்.

       பிரான்சிஸ் எல்லிஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஒரே இனம் என்என்பார்.

ஹோக்கன், மாக்கமுல்லர் ஆகியோர் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்பார்

      கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் திராவிடமொழிகள் ஆரிய மொழிகளில் இருந்து வேறுபட்டவை என்றார். சமஸ்கிருதத்திற்குள்ளும் திராவிட மொழிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளது என்றார்.


கூடுதல் வினாக்கள்


பலவுள் தெரிக


1 திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் 

அ) குமரிலபட்டர்

ஆ)) கால்டுவெல் 

இ)ச. அகத்தியலிங்கம் 

ஈ)மாக்ஸ்மூல்லர்    

  Answer: அ) குமரிலபட்டர்

2. வினைச்சொற்கள் காலத்தை மட்டுமே காட்டும் மொழி

அ) தமிழ்    இ) மலையாளம் ஆ)ஆங்கிலம்  

  ஈ}தெயுங்கு 

Answer: ஆ)ஆங்கிலம் 

3. பணத்தாளில் தமிழ் மொழி இடம்பெற்றுள்ள பிற நாடுகள் 

அ) மொரிசியஸ், இலங்கை

 இ) பர்மா, பிஜித்தீவு 

ஆ)மலேசியா பயான்

விடை: அ) மொரிசியஸ், இலங்கை

4.இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை___________க்கும் மேலானது.

ஆ)) 1300 இ) 1500 ஈ) 800

விடை ஆ) 1300

5.இந்திய மொழிக்குடும்பம் ஐரோப்பிய மொழியோடு தொடர்புடையது வடமொழி என்று முதன்முதலில் குறிப்பிட்ட அறிஞர் 

அ) வில்லியம் ஜோன்ஸ்

இ) போப்

ஆ) கால்டுவெல் ஈ ரஸ்க் 

விடை அ) வில்லியம் ஜோன்ஸ்


7. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் 

அ) குமரிலபட்டர்

அ. ச.அகத்தியலிங்கம்

இ) கால்டுவெல் 

ஈ) மாக்ஸ் முல்லர் 

விடை: இ) கால்டுவெல் 

கோடிட்ட இடத்தை நிரப்புக


1.தமிழ் மொழியில் பழமையான இலக்கண நூல்________ : தொல்காப்பியம் 


2. மலையாள மொழியில் பழமையான இலக்கண நூல்_________ Answer:  லீலாதிலகம்


3. ராமசரிதம் என்ற பழமையான இலக்கியம் அடைந்த திராவிட மொழி 

____     Answer :மலையாளம் 

4.நீ என்ற தமிழ்ச்சொல் துளு மொழியில்

________ Answer : ஈ 

5.மரம் என்ற தமிழ்ச்சொல் தெலுங்கு மொழியில்

Answer : மானு


6.சொற்களின் இன்றியமையாப் பகுதி வேர்ச்சொல்_______    எனப்படும்

Answer: அடிச்சொல்

7 குவி பேரழைக்கப்படும் நடுத் திராவிட மொழி _______

Answer: கூவி

8.அண்மையில் சேர்க்கப்பட்ட திராவிட மொழிகளுடன் திராவிட மொழிகள் மொத்தம் 

விடை:  28


கூடுதல்- குறுவினா


1.மொழிகள் பல எவ்வாறு உருவானது ?

         மனித இளம் வாழ்ந்த இடஅமைப்பும், இயற்கை அமைப்பும் வேறுபட்ட ஒலிப்பு முயற்சிகளை உருவாக்கத் தூண்டிய இதனால் பல மொழிகள் உருவானது.


2.இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை யாது?

           1300 க்கும் மேற்பட்ட மொழிகள் இந்தியாவில் பேசப்படுகின்றன .

3.மொழிக்குடும்பங்கள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை

     மொழிக்குடும்பங்கள் நான்கு வகைப்படும். 

அவையாவன: * திராவிட மொழிகள் | சீன திபெத்திய மொழிகள்

*இந்தோ - ஆரிய மொழிகள்

* ஆஸ்திரோ ஆரிய மொழிகள் 

4.பிரான்சிஸ் எல்லிஸ் குறிப்பிடும் தென்னிந்திய மொழிகள் யாவை?

*தமிழ்,

* கன்னடம், 

*தெலுங்கு, 

*மலையாளம் 

5.ஹோக்கன் குறிப்பிடும் தமிழியன் மொழிகள் யாவை?

தமிழ், தெலுங்கு, கன்னடம், தோ, தோடா, கோண்டி.


*******************************************

9th all Units Book back question and answer, Creative question and answer 

            Dear friends these 9th Tamil Guide prepared by well experience Tamil teachers team .these samacheer Kalvi 9th class Tamil guide book Question solutions help for your assignments works and study purpose. You can get good marks in exam.9th Tamil important question, 9th Tamil model question papers, 9th Tamil guide PDF download, 9th Tamil important study material, 9th Tamil important model question papers, 9th Tamil guide previous year question also available here.




Post a Comment

0 Comments

Ad Code