Ad Code

10th tamil Important 3 Mark questions - iyal 6

 10th Standard 3 Marks Questions & Answers - 

பத்தாம் வகுப்பு - 3 மதிப்பெண் வினாக்கள் - சிறுவினா | katrathukalvi- samacheer Kalvi guide


சிறுவினா
இயல் - 6      ப.எண் : 148

1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும்  அணிகலன்களுடன்  செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

வைத்தியநாதபுரி முருகன்  குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன்  செங்கீரை ஆடிய  நயம் :

* திருவடியில் அணிந்த  சிறு செம்பொன் கிண்கிணிகளோடு  சிலம்புகளும்  சேர்ந்து ஆடின .
* இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவட்டங்கள் ஆடின.
*  பசும்பொன்னென ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடியது .
* பட்டம் கட்டிய நெற்றியில் பொட்டுடன்  வட்டவடிவமான சுட்டி பதிந்தாடியது.
*  கம்பிகளால்  உருவான குண்டலங்களும்  காதின் கொலைகளும் அசைந்தாடின.
*  உச்சிக் கொண்டையும்  அதிலுள்ள முத்துக்களும் ஆடின .
*  வைத்தியநாதபுரியில் எழுந்தருளியுள்ள முருகனே!
  இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட ,  செங்கீரை ஆடி அருளினான் எனக்  குமரகுருபரர்  வர்ணித்துள்ளார்.

2.  நவீன கவிதையில் வெளிப்படும் உண்மை உள்ளம்,  பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடல்களை வெளிப்படுத்துகிறது. ஒப்பிட்டு எழுதுக.
நவீன கவிதை :
இப்பாடலில் ' பூ ' என்பதை மலரோடு ஒப்பிடப்பட்டுள்ளது .
நாட்டுப்புற பாடல் :
       இப்பாடலில் ' பூ ' என்பதை மாரி தெய்வத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது .

நவீன கவிதை :
*  பூவை இறுக்கி முடிச்சிட்டால் , காம்புகளின் கழுத்து முறியும் .
* தளரப்  பிணைத்தால் , மலர்கள் தரையில் நழுவும் .
* வாசலில் மரணம் நிற்பதறிந்தும் வருந்தாமல் சிரிக்கும் .
* இதனை எவ்வாறு தொடுப்பது  ....

நாட்டுப்புறப்பாடல் :
*  மாரியாகிய பெண் தெய்வத்திற்கு கையாலே பூவெடுத்தால் , காம்பழுகிப் போய்விடும் .
* விரலாலே பூவெடுத்தால்  , வெம்பி விடும் .
* எனவே , மாரி தெய்வத்திற்கு ' தங்கத் துரட்டி ' கொண்டு பூ எடுத்தார் எனக் கவிஞர் குறிப்பிடுகிறார் .


3. "  கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது ;  மலைப்பகுதியில் மலைப் பயிர்களும்  நிலப்பகுதியில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன ." -  காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் ,  பண்டைத் தமிழரின் திணை நிலைத் தொழில்கள்  இன்றளவும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

1. 1. திணை - நெய்தல்
2. தொழில்கள் -  மீன்பிடித்தல் , உப்பு காய்ச்சுதல்
3. இன்றைய வளர்ச்சி : 
   *மீன் பிடித்தல் இன்றளவும்  சிறப்பாக நடைபெறுகிறது . மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ளன . இதன்மூலம் பல பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது . பதப்படுத்தப்பட்ட மீன்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி  செய்யப்படுகிறது .
*    கடற்கரையில் இன்றளவும் உப்பு காச்சுதல்  நடைபெறுகிறது .
*"உப்பில்லாப் பண்டம்  குப்பையிலே " , 
" உப்பிட்டவரை உள்ளளவும் நினை" 
எனவே அனைத்து இடங்களிலும் உப்பு விற்பனை செய்யப்படுகிறது .
உப்பளங்களில் உள்ள உப்பு சுத்திகரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

2 . 
1. திணை - குறிஞ்சி
2. தொழில்கள் : மலைநெல் , தினை , தேனெடுத்தல் ,  கிழங்கு அகழ்தல்.
3. இன்றைய வளர்ச்சி :
*   மலைநெல் , தினை உணவிற்காகப் பயன்படுத்தப்படுகிறது .
* தேன் மருந்துப் பொருளாக பயன்படுகிறது . பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது .
*  கிழங்கு வகைகள் உணவாகப் பயன்படுகிறது .  அதிலிருந்து மாவு ,  ஜவ்வரிசி  போன்றவை தயாரித்து  சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது .
*  இதனால்  மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடிகிறது .

3. 
1.திணை - முல்லை
2. உணவு / தொழில்கள் - வரகு , சாமை, ஏறுதழுவுதல் , நிரை மேய்த்தல்
3. இன்றைய வளர்ச்சி :
* வரகு , சாமை முதலியன உணவாகப் பயன்படுகின்றன .
*  ஏறுதழுவுதல் இன்றளவும் மக்களிடையே காணப்படுகிறது .
* நிரை மேய்த்தல் உணவு , வியாபாரம் , ஏற்றுமதிக்காகப் பயன்படுத்தப்படுகிறது .

4. 
1.திணை  - மருதம்
2. உணவு / தொழில்கள் - செந்நெல் , வெண்ணெல் ,  நெல்லரிதல் ,  கலை பறித்தல்
3. இன்றைய வளர்ச்சி :
*  செந்நெல் , வெண்ணெல்  உணவுக்காக ,  வியாபாரத்திற்காக  பயிரிடப்படுகிறது .
*  நெல்லரிதல் ,  களை பறித்தல்  வயல்களில்  உணவுக்காகவும் ,  விற்பனைக்காகவும்  தொழில் செய்யப்படுகிறது .

4.  படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து இரண்டு  வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.


1.தேவராட்டம் குறித்து எழுதுக.
   * வானத்து தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது .
* இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம் .
*  இந்தக் கலை ,  வேட்டி கட்டியும்  தலையிலும் இடையிலும் சிறு துணி கட்டியும்  கால்களில் சலங்கை அணிந்தும்  எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகிறது .
*  இவ்வாட்டத்தில்  8 முதல் 13 கலைஞர்கள்  கலந்து கொண்டு ,  சடங்கு சார்பாக ஆடப்படுகின்றது .


2.  கரகச் சொம்பின் அமைப்பை விவரி.
*  கரகச் சொம்பின் அடிபாகத்தை உட்புறமாகத் தட்டி ,  ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படி  செய்கின்றனர் .
* தலையில் சொம்பு நிற்கும் அளவு எடைக்கு  பச்சரிசி அல்லது மணலை நிரப்புகின்றனர் .
*  கண்ணாடியாலும் பூக்களாலும்  அழகூட்டிய கரகக்  கூட்டின் நடுவில் ,  கிளி பொம்மை தீய மூங்கில் குச்சியை செருகி  வைத்து ஆடுகின்றனர் .
*  இதற்கு நையாண்டி  மேளம் ,  நாகசுரம் , தவில் ,  பம்பை போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றன .
* இது ஆணும் பெண்ணும் சேர்ந்து  நிகழ்த்தும் கலை ஆகும். 


-------------------------------------------------------------------------

சிறுவினா

திருக்குறள்   ப.எண் : 158


1. வள்ளுவம் ,  சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும்  பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

* தொழில் செய்வதற்குத் தேவையான  கருவி ,  அதற்கு ஏற்ற காலம் ,  செயலின் தன்மை , செய்யும் முறை  அரிய செயல்களைச் செய்தல்  வேண்டும்.

* மனவலிமை , குடிகளைக் காத்தல் , ஆட்சி முறைகளைக் கற்றல் , நூல்களைக் கற்றல் , விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைதல் வேண்டும்.


* இயற்கையான நுண்ணறிவும்  நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன் ,  மட்டமான சூழ்ச்சிகள்  நிற்க  இயலாது.


* ஒரு  செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும் ,  உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும் .

எனவே இவ்வாறு   நன்மை ,  தீமைகளை அறிந்து சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்களை பின்பற்ற வேண்டும் .

2.  பலரிடம் உதவி  பெற்று கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர்,  அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை.  அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை ?

* சுற்றத்தாரிடம்  ஒருவர்
 அன்பு இல்லாமலும் 
பொருந்திய துணை இல்லாமலும் , 
வலிமை இல்லாமலும் இருந்தால் 
அவர் எப்படிப்பட்ட பகைவரின் வலிமையையும் வெல்லமுடியாது .
*  மனத்தில் துணிவு இல்லாதவராய் ,  
அறிய வேண்டியவற்றை அறியாதவராய் ,  
பொருந்தும் பண்பு இல்லாதவராய் , 
 பிறர்க்குக்  கொடுத்து உதவாதவராய்  இருந்தால்  
எளிதில் பகைக்கு ஆட்பட நேரும்.



-----------------------------------------------------

Post a Comment

0 Comments

Ad Code