10TH STANDARD 3 MARKS QUESTIONS & ANSWERS - பத்தாம் வகுப்பு - 3 மதிப்பெண் வினாக்கள் - சிறுவினா | katrathukalvi-samacheerkalvi guide
சிறுவினா
இயல் -7 பக்க எண் : 179
1. ' முதல் மழை விழுந்ததும் ' என்னவெல்லாம் நிகழ்வதாக கு .ப. ராஜகோபாலன் கவிபாடுகிறார் ?
1. முதல் மழை விழுந்ததும் மேல் மண் பதமாகிவிட்டது .
2. வெள்ளி முளைத்திடுது ; காளைகளை ஓட்டி விரைவாகச் சென்று பொன்னேரிலே மாட்டைப் பூட்டி , காட்டைக் கீறுவோம் .
3. ஏர் புதிதல்ல ; ஏறும் நுகத்தடி கண்டது ; காடு புதிதன்று ; கரையும் பிடித்தது தான் ; கை , கார் புதிதாய் இல்லை ; நாள் தான் புதிது ; நட்சத்திரம் புதிது .ஊக்கம் புதிது , உரம் புதிது .
4. மாட்டைத் தூண்டி , கொழுவை அமுத்தி மண் புரள , மழை பொழியும் .
5. நிலம் சிலிர்க்கும் ; நாற்று நிமிரும் ; எல்லை தெய்வம் எல்லாம் காக்கும்; கவலை இல்லை ; நல்ல வேளையில் உழவுத் தொழில் செய்வோம் என கு.ப.ராஜகோபாலன் கவிபாடுகிறார் .
2. அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர்புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான் ; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக .
1 . " வஞ்சித் திணை " இந்நிகழ்வுக்குப் பொருத்தமான திணை ஆகும் .
2. வஞ்சித் திணை :
மண்ணாசை காரணமாக பகைவர் நாட்டைக் கைப்பற்ற , வஞ்சிப் பூவைச் சூடி போருக்குச் செல்வது வஞ்சித்திணை ஆகும் .
3 . விளக்கம் :
அவந்தி நாட்டு மன்னன் , மருத நாட்டு மன்னனுடன் போர்புரிந்து நாட்டை கைப்பற்ற நினைத்து , அவந்தி நாட்டு படைவீரர்கள் வஞ்சிப் பூவைச் சூடி போருக்குச் செல்வது "வஞ்சித் திணை " ஆகும் .
3." தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் " இடம் சுட்டிப் பொருள் விளக்குக .
இடம் :
" சிற்றகல் ஒளி " என்னும் மா . பொ. சிவஞானத்தின் 'எனது போராட்டம் ' தன்வரலாற்று நூலில் இருந்து இக்கட்டுரை வழங்கப்பட்டுள்ளது .
பொருள் :
ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னை தான் அதன் தலைநகரமாக இருக்க வேண்டும் என்று அதன் தலைவர்கள் கருதினர் . அதனை எதிர்த்து மாநகராட்சி சிறப்புக் கூட்டம் செங்கல்வராயன் தலைமையில் கூட்டி , சென்னை பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து , ம .பொ.சி . முழங்கிய முழக்கமாகும் .
விளக்கம் :
சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரியும்போது , சென்னை தான் அதன் தலைநகராக இருக்க வேண்டுமென ஆந்திர தலைவர்கள் கருதினர் . இதனை எதிர்த்து மாநகராட்சி சிறப்பு கூட்டம் ஒன்றை செங்கல்வராயன் தலைமையில் கூட்டி , " தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் " என்ற முழக்கத்தை ம. பொ .சி . முன்மொழிந்தார் . அதன்படி 25.03 .1953 நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு " சென்னை தமிழருக்கே " என்ற உறுதிமொழியை வெளியிட்டார் .
4. " பகர்வனர் திரிதரு நகர வீதியும் :
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும் :
தூசும் துகிரும் ஆரமும் அகிலும் "
அ) இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?
ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக .
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
ஈ) காருகர் - பொருள் தருக .
உ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை ?
விடை :
அ) சிலப்பதிகாரம்
ஆ) பகர்வனர் , பட்டினும்
பட்டினம் , பருத்தி
இ) பகர்வனர், நகர வீதியும்
பட்டினம் , கூட்டு நுண்வினை
ஈ) நெய்பவர்
உ) சந்தனமும் அகிலும்
5. பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக .
பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி . பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப் பெறும் . சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி , அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி , பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும் .
சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாதனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை . முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது . இதன்கண் வம்ச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை . ஏனையை பகுதியில் உள்ளன . எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது . இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன .
விடை :
பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்கீர்த்தி . இது சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சியாண்டு , போர் வெற்றிகளையும் வரலாற்றையும் கூறி , தன் தேவியோடு நீடு வாழ்க என குறிப்பிடும் . முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது . இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதாமல் சுருக்கமாக உள்ளது . பின்வந்த மெய்க்கீர்த்திகள் வம்ச பரம்பரையை விரித்துக் கூறியுள்ளன .