ஐயப்ப பக்தர்களே ரெடியா? .. மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்கு தயாராகும் சபரிமலை.. நடை திறப்பு விபரம்....!!!!

ஐயப்பனை காண வாருங்கள் என்று அழைக்கிறது தேவசம்போர்டு. கார்த்திகை மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்க உள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை நடை திறப்பு தொடங்கி 2025ஆம் ஆண்டு மகர விளக்கு பூஜை வரைக்கும் எந்த நாளில் என்னென்ன விழாக்கள் நடைபெறும் என்று ஓராண்டுக்கான விஷேச நாட்களை தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

ஆன்மீகவாதிகளுக்கும், ஐயப்ப பக்தர்கள் அனைவருக்குமே சபரிமலை என்ற பேரை கேட்டாலே மெய் சிலிர்க்கும். சபரிமலைக்கு எப்போது போய் ஐயப்பனை தரிசனம் செய்வோமோ என்றும் மனம் ஏங்கும். நெய் அபிஷேகப்பிரியனான ஐயப்பனைப் பற்றியும் அவருடைய வரலாற்றைப் பற்றியும் கேட்டாலே ஐயப்ப பக்தர்கள் அப்படியே நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.


கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து பய பக்தியோடு ஒரு மண்டலம் விரதம் இருப்பார்கள். பாதயாத்திரையாக சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்வார்கள். சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் எங்கும் எதிரொலிக்கும். கடுமையாக விரதம் இருந்து ஐயப்பனை காணச் செல்வார்கள். அதே போல மாதந்தோறும் நடை திறக்கப்படும் நாட்களில் ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நவம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை 1ஆம் தேதி முதலே பக்தர்கள் மாலை அணிந்து கடுமையாக விரதம் இருந்து தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து சபரிமலைக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் வருவார்கள்.



சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடை திறப்பு முதல் 2025 ஜனவரி வரை நடைபெறும் முக்கிய திருவிழாக்களின் தேதியை உங்களின் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


கார்த்திகை மாத மண்டல கால பூஜை நவம்பர் 16ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 27 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்படும். டிசம்பர் 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். மகர விளக்கு பூஜை ஜனவரி 15, 2024ஆம் தேதி நடைபெறும். ஜனவரி 20, 2024 வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.


மாசி மாத பூஜை - 13.02.2024 முதல் 18.02.24 வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.


பங்குனி மாத பூஜை - 13.03.24 முதல் 18.03.24 ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.


பங்குனி உத்திர விழா - 15.03.24 முதல் 25.03.24 ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும். மார்ச் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பங்குனி உத்திரம் மற்றும் ஆரட்டு விழா 25.03.24 தேதி நடைபெறும்.


சித்திரை மாத பூஜை - 10.04.24 முதல் 18.04.24 வரை கோவில் நடை திறந்திருக்கும். சித்திரை விஷு கனி காணுதல் விழா 14.04.24 அன்று நடைபெறும்.


மாசி மாத பூஜை - 13.02.2024 முதல் 18.02.24 வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.


பங்குனி மாத பூஜை - 13.03.24 முதல் 18.03.24 ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.


பங்குனி உத்திர விழா - 15.03.24 முதல் 25.03.24 ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும். மார்ச் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பங்குனி உத்திரம் மற்றும் ஆரட்டு விழா 25.03.24 தேதி நடைபெறும்.


சித்திரை மாத பூஜை - 10.04.24 முதல் 18.04.24 வரை கோவில் நடை திறந்திருக்கும். சித்திரை விஷு கனி காணுதல் விழா 14.04.24 அன்று நடைபெறும்.


வைகாசி மாத பூஜை - 14.05.24 முதல் 15.05.24, ஐயப்பன் கோவில் பிரதிஷ்டை தின விழா - 18.05.24 முதல் 19.05.24 வரை கோவில் நடை திறந்திருக்கும்.


ஆனி மாத பூஜை - 16.06.24 முதல் 19.06.24 வரை கோவில் நடை திறந்திருக்கும் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.


ஆடி மாத பூஜை - 15.07.24 முதல் 20.07.24 கோவில் நடை திறந்திருக்கும் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.


ஆவணி மாத பூஜை - 16.08.24 முதல் 21.08.24 வரை கோவில் நடை திறந்திருக்கும். ஆவணி மாதத்தில் திருவோண பூஜைக்காக 13.09.24 முதல் 17.09.24 வரை கோவில் நடை திறந்து வழிபாடுகள் நடைபெறும்


புரட்டாசி மாத பூஜை - 16.09.24 முதல் 21.09.24 வரை கோவில் நடை திறந்து பூஜைகள் நடைபெறும்.


ஐப்பசி மாத பூஜை - 16.10.24 முதல் 21.10.24, சித்திரை ஆட்ட திருநாள் - 30.10.24 முதல் 31.10.24 வரை நடைபெறும்.


2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மண்டல கால பூஜை - 15.11.24 முதல் 26.12.24 வரை நடைபெறும். மண்டல பூஜை 26.12.24ஆம் தேதி நடைபெறும்.

மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்காக 30.12.24 அன்று நடை திறக்கப்படும். 2025ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும்.



ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.