மது பிரியர்களுக்கு ஷாக்., நவம்பர் முதல் மது பானங்களில் விலை இது தான்., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அரசு....!!


பொதுவாக அரசுக்கு வருமானம் ஈட்டி தருவதில் மது விற்பனை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அரசாங்கம் நடத்திவரும் டாஸ்மாக் கடைகள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள்,பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சில கட்டுப்பாடுகளுடன் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையானது பொது விடுமுறை, பண்டிகை காலங்களில் கல்லாக்கட்டும்.
அந்த வகையில் அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் மது பானங்களுக்கான வாட் வரியை உயர்த்தியுள்ளது. அதாவது மதுபானங்களுக்கு ஏற்கனவே 5 % வாட் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து பார்களில் அமர்ந்து மது அருந்துவதற்கு கூடுதலாக 5% வாட் வரி என மொத்தமாக 10% செலுத்த வேண்டுமாம். இதனால் மதுபிரியர்கள் அதிக விலை கொடுத்து மது அருந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.