சமைக்கும் பெண்களுக்கு சில சமையலறை குறிப்புகள்...!!


ருளைக்கிழங்கு அல்லது வெங்காய சூப்புடன் நெல்லிக்காய் பருமன் சீஸ் சேர்த்தால் விரும்பத்தக்க ருசியை அளிக்கும்.

கிழங்குகளை மூடிய பாத்திரங்களிலும், பச்சைக் காய்கறிகளைத் திறந்த பாத்திரங்களிலும் வேகவைக்க வேண்டும்.

காய்கறிகளின் நிறம் கெடாமலிருப்பதற்குக் கொதிக்கும் தண்ணீருடன் சோடாவிற்குப் பதிலாக உப்பு (4 கோப்பைகளுக்கு 1 தேக்கரண்டி அளவு) சேர்க்கப்பட வேண்டும்.

வேகவைக்கும்பொழுது ஆப்பிள் கறுத்துப் போகாமலிருக்கச் சில சொட்டுகள் எலுமிச்சஞ்சாறு சேர்க்க வேண்டும்.

பாலாடைக் கட்டி(சீஸ்)யைப் புதிதாக வைத்திருக்க ஈரமான துணியில் சுற்றி வைக்கவும். ஒரு நாள் விட்டு ஒருநாள் தலைகீழாக வைக்கவும். அப்படிச் செய்வதால் அதிலுள்ள கொழுப்பு மேலும் கீழும் சென்று கொண்டு, பாலாடைக் கட்டிக்குள்ளேயே தங்கிவிடுகிறது.

ற்றுத் தண்ணீரிலிருக்கும் மீனின் சகஜமான சேற்று வாடையைப் போக்கச் சிறிது உப்பிட்ட நீரில் ஊற வைக்கவும்.



டைந்த முட்டையை நீரில் வேக வைக்கும்போது ஒரு நடுத்தர கரண்டி வினிகரைத் தண்ணீருடன் சேர்த்துக் கொண்டால் முட்டை பிரிந்து தண்ணீருடன் சேராமலிருக்கும்.

ரமான பாத்திரத்தில் முட்டையைக் கடைந்தால் வெள்ளைக் கரு பாத்திரத்தில் ஒட்டிக்கொள்வதைத் தடுக்கலாம்.

டினமான சமைக்காத இறைச்சியை எலுமிச்சம்பழத் துண்டினால் தேய்ப்பதாலோ அல்லது பப்பாளி இலையில் சிறிது நேரம் சுற்றிவைப்பதாலோ மிருதுவாகச் செய்யலாம். இதனால் மாமிசம் மிருதுவாக இருப்பதுடன், முழு ஊட்ட மதிப்பையும், ருசியையும் தங்கச் செய்ய முடியும்.

ணவுகளுக்கு நிறமளிக்க மஞ்சள், குங்குமப்பூ, கரிந்த சர்க்கரை போன்ற இயற்கை நிறமளிக்கும்பொருள்களை உபயோகப்படுத்துவதே சிறந்தது.

குழம்பில் காரம் அதிகரிக்காமல், ஆனால் நல்ல சிவப்பு நிறத்தைக் கொடுக்க. விதைகளகற்றிய இரண்டு மிளகாய் வற்றல்களை அரை கப் ஜலத்தில் அல்லது வினிகரில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின்பு நன்றாகக் கரைத்து குழம்பில் சேர்க்கவும்.

பாலில் தயாரிக்கும் பண்டங்களுக்கு வாசனை அளிக்க எலுமிச்சை அல்லது இதர பழச்சாறுகள் சேர்க்க வேண்டியிருந்தால் பால், பிரியாமலிருப்பதற்காகச் சொட்டுச் சொட்டாகச் சேர்க்க வேண்டும்.

ரஞ்சுத் தோல்களை உலர்த்திப் பொடி செய்து கூழ், கேக்குகளுக்கு வாசனையளிக்க உபயோகிக்கலாம். உலர்ந்த தோலை ஆடைகள் வைக்கும் பெட்டிக்குள் வைத்திருந்தால் நேர்த்தியான மணத்தை அளிக்கும்.

சாலட் பிரெஸ்ஸிங் தயாரிக்கும்பொழுது எண்ணெயைத் தாராளமாகவும், வினிகரைக் குறைவாகவும் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.