திருச்சி தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.95,000/-
திருச்சி தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.95,000/-
திருச்சி தெற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் GDMO & Physician பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
- நிறுவனம் Southern Railway – Trichy
- பணியின் பெயர் GDMO & Physician
- பணியிடங்கள் 07
- கடைசி தேதி 15.05.2021
- விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :
திருச்சி தெற்கு ரயில்வே மண்டலத்தில் GDMO & Physician பணிக்கு 07 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 65 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
General Duty Medical Officer – மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Physician – மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MD (General Medicine) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.95,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது
தேர்வு செயல்முறை :
Online Interview மூலமாக பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
southern railway notification online pdf
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் cmsgoc@tpj.railnet.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.