பிளஸ் 2 மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு விபரங்களை பதிவு செய்ய, பள்ளிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

12th internal mark 2021

தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 3 முதல் பொது தேர்வு நடத்தப்படுகிறது. ஏப்., 16 முதல் செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதுவரை, பாட திட்டப்படி பாக்கியுள்ள பாடங்களை, நேரடி வகுப்பு வழியே நடத்தி முடிக்க, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டிய, செய்முறை விளக்க குறிப்பு நோட்டுகளை, மாணவர்களிடம் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் செய்முறை விளக்க நோட்டுகள் மற்றும் அவர்களின் ஆய்வக செயல்பாடு களை வைத்து, மதிப்பெண் வழங்குமாறும், அதை அகமதிப்பீட்டு பட்டியலில் சேர்க்குமாறும், தலைமை ஆசிரியர்களுக்கு அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.இந்த மதிப்பெண் பட்டியல் விபரங்களை, ஏப்., 15 முதல் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவுகளை முடித்து, ஏப்., 28க்குள் தேர்வு துறையில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை கூறியுள்ளது.