Ad Code

6th Social science tern-2 - வளங்கள் book back Question-answers

 6th social science Term-2 Book back question and answer

வளங்கள்


1. இயற்கை வளங்கள் (Natural Resources

இயற்கையிலிருந்து நேரடியாகப்பெறப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளங்கள் எனப்படும். 

இயற்கை வளங்களின் வகைப்பாடு (Classification of Natural Resources)

இயற்கை வளங்களை அதன் தோற்றம், வளர்ச்சிநிலை, புதுப்பித்தல், பரவல் மற்றும் உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.



) தோற்றத்தின் அடிப்படையில் வளங்கள் (On the basis of origin)

தோற்றத்தின் அடிப்படையில், வளங்களை

  • உயிரியல் வளங்கள் (Biotic Resources) மற்றும் 
  • உயிரற்ற வளங்கள் (Abiotic Resources) என

வகைப்படுத்தப்படுகிறது.

(i) உயிருள்ள அனைத்தும் உயிரியல் வளங்கள் எனப்படும். உதாரணமாக தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள்.

(ii) உயிரில்லாத அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் எனப்படும். உதாரணமாக நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்.


ஆ) வளர்ச்சியின் அடிப்படையில் வளங்கள் (On the 

Basis of Development)

வளர்ச்சிநிலையி ன் அடிப்படையில் வளங்களை, 

  • கண்டறியப்பட்ட வளங்கள் (Actual Resources) மற்றும் 
  • மறைந்திருக்கும் வளங்கள் (Potential Resources) என்று 

வகைப்படுத்தப்படுகிறது.

i. கண்டறியப்பட்ட வளங்கள் தற்போது பயன்படுத்தப்படுவதும் அதன் இருப்பின்அளவும் அறியப்பட்டிருக்கிறது. (எ.கா) நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம்.

ii. மறைந்திருக்கும் வளங்கள் என்பது தற்பொழுது அதிகபயன்பாட்டில் இல்லாததும், அதன் அளவு மற்றும் இருப்பிடம் அறியப்படாமல் இருப்பதாகும். இவ்வளத்தினை எடுத்து பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை. (எ.கா) வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் காணப்படும் கடல் ஈஸ்ட் (Marine Yeast).

நினைவில் நிறுத்துக.

  •  மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்பவைகள் வளம் ஆகும்.
  • இயற்கையிலிருந்து பெறப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளங்கள் ஆகும்.
  • உயிருள்ள அனைத்து வளங்களும் உயிரியல் வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • உயிரற்ற அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • இயற்கை வளங்களைச் சேகரித்தல் முதல்நிலைச் செயல்பாடு எனப்படுகிறது.
  • தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் கண்டுபிடிக்கப்பட்ட வளங்கள் எனப்படுகின்றன. 
  • தற்போது பயன்பாட்டிற்கு வராத வளங்கள் மறைந்திருக்கும் வளங்கள் எனப்படும்.
  • வளத்தினைப் பயன்படுத்திய பிறகு, குறிப்பிட்டக் காலத்திற்குள் இயற்கைச் செயல் முறைகளால் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய அனைத்து வளங்களும் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் எனப்படுகின்றன.
  • குறைவான இருப்பு உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும்.
  • அனைத்து இடங்களிலும் பரவலாகக் காணப்படும் வளங்கள் உலகளாவிய வளங்கள் எனப்படும். 
  • குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் உள்ளூர் வளங்கள் எனப்படும். 
  • மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயற்கை வளங்களைச் செயல்முறைகளினால் மாற்றுருவாக்கம் செய்வது மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் எனப்படும். 
  • மனிதர்களும் வளங்களே.
  • உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்துச் சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். 
  • வளங்களை மிகக் கவனமாகக் கையாளுதலே வளங்களைப் பாதுகாத்தல் ஆகும்.
  • நிகழ்காலத்தில் உள்ள மக்கள் தொகையின்தேவைகளைப் பூர்த்தி செய்து வருங்காலத்தலைமுறையினரையும் கவனத்தில் கொண்டு சுற்றுச்சூழல் பாதிக்கா வண்ணம் ஏற்படும் வளர்ச்சியே நிலையான வளர்ச்சி ஆகும்.

பொருத்துக்:-

1.இயற்கை வளம் - கனிமங்கள்

2.பன்னாட்டு வளம் - நிலையான வளர்ச்சி 

3.குறைத்தல், மறு பயன்பாடு, மறுசுழற்சி - காற்று

4.புதுப்பிக்க இயலாதது - உற்பத்தி செய்தல்

5.உலகளாவிய வளம்-  திமிங்கலப் புனுகு

6.இரண்டாம் நிலை செயல்பாடுகள் - காடு

ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கரும்பிலிருந்து ___________ 
தயாரிக்கப்படுகிறது.

2. வளங்களை _____________ 
கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு 
எனப்படுகிறது. 

3. குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் 
வளங்கள் _____________ 
எனப்படுகிறது.

4. தற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் 
_____________ வளங்கள் என்று 
அழைக்கப்படுகிறது.

5. _____________ வளம் மிகவும் மதிப்பு 
மிக்க வளமாகும்.

6. இயற்கை வளங்களைச் சேகரித்தல் 
_____________ எனப்படுகிறது.

இ) சிறு குறிப்பு வரைக.

1. புதுப்பிக்கக் கூடிய வளங்கள்

2. மனித வளம்

3. தனிநபர் வளம் 

4. மூன்றாம் நிலை செயல்பாடுகள்

ஈ) மிகச் சுருக்கமாக விடையளி 

1. வளங்கள் என்றால் என்ன?

2. கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் 
என்ன?

3. உயிரற்ற வளங்களை வரையறு.

4. நிலையான வளர்ச்சி என்றால் என்ன?

உ) சுருக்கமாக விடையளி

1. உலகளாவிய வளங்கள் மற்றும் உள்ளூர் 

வளங்களை வேறுபடுத்துக?

2. மனிதன் ஒரு இயற்கை வளம், ஆனால் 

மனிதன் மட்டுமே ஒரு தனி வளமாக

கருதப்படுவது ஏன்?

3. நாட்டு வளம் மற்றும் பன்னாட்டு வளம் - 

ஒப்பிடுக.

4. மனிதன் உருவாக்கிய வளத்திற்கும், மனித 

வளத்திற்கும் உள்ள வேறுபாடுகளைக் 

கூறுக.

Post a Comment

0 Comments

Ad Code