Ad Code

12th tamil தன்னேர் இலாத தமிழ் - Thaner ilatha tamil

 தன்னேர் இலாத தமிழ்


ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது

தன்னேர் இலாத தமிழ்! *


பொருள்:

மக்களால் போற்றப்பட்டு , உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, கடலால் சூழப்பட்ட உலகத்தின் பு ற இ ரு ளை அகற்றுவது ஒன்று. பொதிகை மலையில் தோன்றி, சான்றோ ரால் தொழப்பட் டு ,மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குவதோடு ஒப்புவமை இல்லாததுமாக இருப்பது இன்னொன்று. இருளைப் போக்கும் இவ்விரண்டில் ஒன்று ஒளிர்கின்ற கதிரவன்;இன்னொன்று தனக்கு நிகரில்லாத தமிழ்.

அணி : பொருள் வேற்றுமை அணி

விளக்கம் : இருவேறு பொருள்களுக்கிடைேய ஒற்றுமையை மு த லி ல் கூறிப் பி ன்வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.

  • தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறிஅவற்றுள் தமிழ் தன்னேரிலாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக்காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று . இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும்.


Post a Comment

0 Comments

Ad Code