Ad Code

12th Commerce - Book back answer - Unit-1 -மேலாண்மை தத்துவங்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. மேலாண்மை என்பது__________ன் செயல் ஆகும்.

அ) மேலாளர்

ஆ) கீழ்ப்ப ணியாளர்

இ) மேற்பார்வையாளர் 

ஈ) உயரதிகாரி

2.மேலாண்மை என்பது ஒரு

அ) கலை

ஆ) அறிவியல்

இ)கலைமற்றும் அறிவியல் 

ஈ) கலை அல்லது அறிவியல் 

3.அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்

அ) ஃபோயல்

இ) மேயோ

ஆ) டேலர்

ஈ) ஜேக்கப்

4.வேலையை பல்வேறு சிறு பணிகளாக  பிரிப்பதை _________என்பர்

அ) ஒழுங்கு

ஆ) பயன்பாடு

இ) வேலைப்பகிர்வு 

ஈ) சமத்துவம்

5.பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களின் அளவு____________

அ) அதிகம்

இ) பன்மடங்கு

ஆ) குறைவு

ஈ) கூடுதல்

விடைகள் :

1 அ 2 இ 3 ஆ 4 இ 5 ஆ

குறு வினாக்கள் -


1.மேலாண்மை என்றால் என்ன ?

  • மேலாண்மை என்பது மற்றவர்களின் முயற்சி மற்றும் ஒத்துழைப்புடன் நோக்கங்களை எய்தும் ஒரு கலையாகும்.
  • தொழிலமைப்பின் இலக்குகளை வெற்றிகரமாக எய்துவதற்கும் வியாபாரத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கும் உதவுவது மேலாண்மை ஆகும்
2.மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக 

  • கணக்கியல்
  • வணிகச் சட்டங்கள்
  • உளவியல்
  •  புள்ளயியல்
  • பொருளியல்
  • தரவு செயலாக்கம்

3.மேலாளர் என்பவர் யார் ?

  • ஒரு நிறுவனத்தின் மேலாண்மைப் பணியை ஏற்பவர் மேலாளர் ஆவார். நிர்வாக மற்றும் பணி சார்ந்த செயல்பாடுகள் இரண்டையும் கவனிப்பவர் மேலாளர் ஆவார்.

4.அதிகாரம் என்பதன் பொருள் தருக

  • அதிகாரம் என்பது ஒரு அலுவலர் தன் கீழ்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையைக் குறிக்கின்றது.

5.மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது?

  • உயர் அலுவலரால் திறமையாக மேலாண்மை செய்யப்படும் கீழ்ப்பணியாளர்களின் எண்ணிக்கையே மேலாண்மையின் வீச்செல்லை ஆகும்.

சிறு வினாக்கள் -


1.மேலாண்மை வரைவிலக்கணம் தருக

  • மேலாண்மை என்பது முன்கணிப்பு செய்தல், திட்டமிடுதல் , ஒழுங்கமைப்பது , கட்டளையிடுவது. ஒருங்கிணைப்பது . கட்டுப்படுத்துவது "
  • - ஃபோயல்,
  • மேலாண்மை என்பது பன்னோக்கு செயல், அது வியாபாரத்தை மேலாண்மை செய்கின்றது.மேலாளரை மேலாண்மை செய்கிறது, மேலும் பணியாளரையும் பணியினையும் மேலாண்மைசெய்கிறது " 
  • -பீட்டர் F.டிரக்கர்.


2.மேலாண்மை கலையா அறிவியலா ?

  • மேலாண்மை என்பது ஒரு நுட்பமான அறிவியலாகும்.
  • அறிவியலில் கொள்கைகளை அல்லது தத்துவத்தை ஆய்வகங்களில் பரிசோதித்து மிகச் சரியாக நிரூபிக்கலாம்.
  • அது போல மனிதவளம் , இயந்திரம் , பணம் , கச்சாப் பொருட்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வியாபார இலக்குகளை அடையச் செய்வதன் மூலம் மேலாண்மைக் கொள்கைகளை பரிசோதிக்க முடியும்.
  • நிர்வாகம் என்பது ஒரு கலை.
  • கலை என்பதன் கருத்தாக்கம் அன்றாட வாழ்வின் திறனை தெரிந்து கொள்வது மற்றும் வாழ்வில் பயன்படுத்துவது ஆகும்.
  • மேலாண்மையில் மேலாளரின் முடிவெடுக்கும் திறன் அவரின் மூத்த அதிகாரியிடம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு மேற்கொள்ளும் போது மேலாண்மை கலையை பிரதிபலிக்கிறது.
  • எனவே மேலாண்மை என்பது ஒரு கலையும் அல்ல , அறிவியலும் அல்ல இரண்டின் தொகுப்பாகும்.

3.மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக?



4.டேலரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை?

  • அறிவியல் கட்டை விரலின் விதி அல்ல.
  •  இணக்கம் சச்சரவின்மை.
  • மனப்புரட்சி .
  • தனிமனிதத் தத்துவம் அல்ல ஒத்துழைப்பு
  • ஒவ்வொருவருக்கும் அவரவரது திறமைக்கும் செழிப்புக்குமான வளர்ச்சி.
5.மேலாண்மையின் வீச்செல்லையை தீர்மானிப்பவை எவை?

  • மேலாண்மை வீச்செல்லையை தீர்மானிப்பது படுக்கை அமைப்பு (விரிவான வீச்சு மற்றும் செங்குத்து அமைப்பாகும் ( குறுகலான வீச்சு )
  • மேலாண்மை பரப்பு என்பது நிர்வாகக் கட்டமைப்பின் கிடைமட்ட நிலைகளோடு தொடர்புடையதாகும்.
  • பரந்த அளவுள்ள மேலாண்மை பரப்பில் குறைவான அதிகாரப் படிநிலை மட்டங்கள் இருக்கும்.
  • குறுகிய மேலாண்மை பரப்பில் அதிக படிநிலை மட்டங்கள் மிகுதியாக இருக்கும்.
பெரு வினாக்கள் -

1.மேலாண்மைக்கு பீட்டர் டிரக்கரின் பங்களிப்பு யாது ?

1. வணிகத்ததை மேலாண்மை செய்தல்.
2.மேலாளரை மேலாண்மை செய்தல்.
3. பணியாளர்களையும் பணியையும் மேலாண்மை செய்தல்.
  • இதில் ஏதேனும் ஒன்று விடுபட்டாலும் எவ்வித செயலையும் மேலாண்மை செய்ய இயலாது.
  • மேலும் வணிக நிறுவனத்தையோ அல்லது தொழில் சமூகத்தையோ நிர்வகிக்க இயலாது.
  • மேற்கூறிய அனைத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுபவது மேலாளர் கடமையாகும்.
  • ஒவ்வொரு வணிகத்திலும் அதன் மேலாளர் சூழ்நிலைக்குகேற்ப மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவராகவும் வியாபாரத்திற்கு உயிர் கொடுப்பவராகவும் செயல்படுகிறார்.
  • திறம்பட செம்மையான மேலாண்மை இல்லாமல் மனித வளம் , பொருட்கள் , நிதி வளங்களையும் திறமையாக ஒதுக்கீடு செய்யவும் மற்றும் முழுவதுமாக பயன்படுத்தவும் இயலாது.

2.மேலாண்மைச் செயல்முறைகளை விரிவாக விளக்குக :-

மேலாண்மை என்பது ஒருங்கிணைத்தல்:-
  • ஒரு மேலாளர் என்பவர் அந்நிறுவத்தின் மனிதவளம் , இயந்திரங்கள், பொருட்கள் மற்றும் பணம் ஆகிய நான்கு வளங்களையும் அதன் செயல்பாடுகளையும் திறம்பட ஒருங்கிணைக்க வேண்டும்.
மேலாண்மை ஒரு செயல்முறை -
  • ஒரு மேலாளர் திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல் , பணியமர்த்தல் , இயக்குவித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வளங்களை திறம்பட ஒருங்கிணைத்தல் செய்கிறார்.
மேலாண்மை என்பது ஒரு திட்டமிட்ட செயல்முறை:-
  • முன்கூட்டியே திட்டமிட்ட நோக்கங்களையும் குறிக்கோள்களையும் அடைவதற்காக இயக்கப்படுகிறது. மேலாண்மையும் நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை கொண்டிருக்க வேண்டும் மேலாண்மை என்பது ஒரு சமூக செயல்பாடாகும்.இது மற்றவர்கள் மூலம் குறிப்பிட்டபொருளை பெறுவதற்கான கலையாகும்.
மேலாண்மை என்பது ஒரு சுழற்சியான செயல்முறை:-
  • மேலாண்மை திட்டமிடல் செயல்பாடு கட்டுப்படுத்தல் மறுதிட்டமிடல் ஆகிய சுழற்சியை பிரதிபலிக்கிறது. திட்டமிட்ட இலக்கை அடைவதற்கான ஒரு தற்போதைய செயல்முறை ஆகும். 
3.அறிவியல் பூர்வ மேலாண்மையின் கோட்பாடுகள் யாவை?

அறிவியல், கட்டை விரல் விதி அல்ல :
  •  நிறுவனத்தின்திறனை உயர்த்துவதற்காக"கட்டைவிரல்விதி முறைக்கு பதிலாக அறிவியல் பூர்வ வேலைப் பகுப்பாய்வு மூலம் வளர்ச்சியடைந்த முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
  • கட்டைவிரல்விதி என்பது மேலாளர் தனது தனிப்பட்ட தீர்ப்புகள் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு ஆகும்.
  • டேலரின் கருத்துப்படி, இரும்புத் தகடுகளை பாக்ஸ் கார்களில் ஏற்றுவது போன்ற சாதாரண சிறிய உற்பத்தி நடவடிக்கைகளைக் கூட அறிவியல் பூர்வமாக திட்டமிட இயலும்.
  • இது மனித திறனையும், நேரத்தையும் சேமிக்க உதவும். 
  • காரணங்கள், விளைவுகள் இவற்றிற் கிடையே உறவுகளை அறிவியல் அடிப்படையிலான விசாரணை மூலம் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
இணக்கம், சச்சரவின்மை:-

  • மேலாண்மைக்கும், பணியாளர்களுக்கும் மிகச்சிறந்த ஒற்றுமை இருக்க வேண்டு மென்பதை டேலர் வலியுறுத்துகிறார்.
  • மேலாண்மைக்கும், பணியாளருக்கும் இடையே முரண்பாடு ஏற்படும் போது அதன் மூலம் மேலாண்மையோ அல்லது பணியாளர்களோ ஆதாயம் அடைந்துவிடக் கூடாது .
  •  மேலாண்மையும், பணியாளர்களும் மற்றவரின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.
  • இந்த நிலையை அடைய மேலாண்மைக்கும் பணியாளருக்கும் முழுமையான மனப்புரட்சியை டேலர் முன்மொழிகிறார்.
  • நிர்வாகம், பணியாளர்கள் இவ்விருவருக்கும் மற்றவர் மீதான மனப்பாங்கும், கண்ணோட்டமும் முற்றாக மாற வேண்டும்.
  • ஒவ்வொரு முதலாளியும் தனது செழிப்பை தனது பணியாளர்களின் செழிப்பு மூலமே அடைய எய்த முடியும் என்பதை எப்போதும் மனதில் இருந்த வேண்டும்.
 தனி மனிதத்துவமல்ல, ஒத்துழைப்பு:-
  • இக்கோட்பாடு, சச்சரவு இன்றி ஒற்றுமை என்ற கோட்பாட்டின் விரிவாக்கம் ஆகும்.
  • இக்கோட்பாடு தொழிலாளர் மற்றும் நிர்வாகத்தின் பரஸ்பர ஒத்துழைப்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.
  • ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ண உணர்வு ஆகியவை மேலாளர் மற்றும் தொழிலாளர்ஆகிய இருவரிடமும் மேலோங்கி இருக்கவேண்டும். நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் இவ்விருவரும் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.
  • மேலாண்மையில் முடிவெடுக்கும் செயல் முறையில் தொழிலாளர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
  • நிர்வாகம் தொழிலாளர்களின் ஆக்க பூர்வமான ஆலோசனை வரவேற்க வேண்டும். அதேநேரத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடல் அல்லது தேவையற்ற கோரிக்கைகளை வலியுறுத்துவது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது,
  • நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய இருவருமே வணிக நிறுவனத்தின் இரண்டு முக்கியத் தூண்களாகக் கருதப்பட வேண்டும்.
 ஒவ்வொரு நபரும் அவரது மிகச்சிறந்த திறனுடனும் மற்றும் செழிப்புடனும் வளர்ச்சியடைதல் :-
  • எந்தொரு தொழிலமைப்பின் திறனும் அதன் தொழிலாளர்களின் திறமைகளையும் திறன்களையுமே பெருமளவு சார்ந்துள்ளது.
  • விஞ்ஞான அணுகுமுறை மூலம் உருவாக்கப்பட்ட சிறந்த உற்பத்தி முறைகளை அறிந்து கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல் மிக அவசியத் தேவையாகும் சிறந்த உற்பத்தி திறனை எட்டுவதற்கு சிறந்த ஊழியர்களை தேர்வு செய்வதிலிருந்து நடவடிக்கைகளை துவக்க வேண்டும்.
  • திறமையான, செயல் திறமிக்க வகையில் அறிவியல் பூர்வ முறையில் உரிய பணியாளர்களை தேர்வு செய்யவேண்டும்.
  •  தொழிலாளர்களின் உடல்தகுதி, மனமற்றும் அறிவுத்திறன் அடிப்படையில் அவர்களுக்கு உரிய பணியினை ஒதுக்க வேண்டும்.
  • தொழில் நிறுவனம் அதிக இலாபம் ஈட்ட திறமையான தொழிலாளர்கள் திறம்பட உற்பத்திப் பணிகளை மேற்கொள்வார்கள்.
  •  இது தொழில் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் தத்த மது திறனையும் செழிப்பையும் அடைவதற்கு உதவிப் புரிகின்றது.

 4 நவீன மேலாண்மைக் கோட்பாடுகள் விவரி?

1.வேலைப் பகிர்வு

  •  இக்கோட்பாட்டின்படி, தொழிலமைப்பின் மொத்தப்பணிச் சுமையும், சிறிய பணிகளாகப் பகிர்வு செய்ய வேண்டும்.
  • தொழிலாளர் ஒவ்வொரு தொழிலாளியின் திறமைக்கேற்ப பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு,அப்பணியில் அத்தொழிலாளி சிறப்பீடுபாடும், நிபுணத்துவமும் அடையும் வண்ணம் தொழில்முறை வளர்ச்சியையும் பணிச் சூழலையும் உருவாக்க வேண்டும். 
2.அதிகாரமும், பொறுப்பும் 
  • இக்கோட்பாடு, தங்களது கட்டளையின் மூலம் விளைந்த விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதலைக் குறிக்கின்றது.
  • அதிகாரம் என்பது ஒரு அலுவலர் தன் கீழ்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையைக் குறிக்கின்றது பொறுப்பு என்பது, அவ்வாணையினை நிறைவேற்றம் கடமையைக் குறிக்கின்றது.

3) ஒழுங்குமறை

  • இது கீழ்ப்படிதல், மற்றவர்களிடம் முறைப்படி நடத்துதல், அதிகாரத்தை மதித்தல் போன்றவை ஆகும்.
  • இவ்வொழுங்கு நிறுவனம் செம்மையாக நடைபெற இன்றியமையாததாகும்

4 கட்டளையொருமை
  •  ஒவ்வொரு கீழ்ப்பணியாளரும் ஒரே ஒரு மேலதிகாரியிடமிருந்து மட்டுமே கட்டளைகளைப் பெற வேண்டும்.
  • அவருக்கு மட்டுமே கட்டுப்பட்டவராக இருக்கவேண்டும். அவ்வாறன்றி ஒரு கீழ்ப்பணியானர், ஒன்றுக்கு மேற்பட்ட உயர் அதிகாரியிடம் உயர் ஆணைகளைப் பெற்றுச் செயல்பட வேண்டியிருந்தால், அது குழப்பத்தையும் முரண்பாடுகளையும் உருவாக்கி விடும்.
5) ஒரு மனை இயக்கம்

  • அனைத்துத் தொடர்புடைய நடவடிக்கைகளையும் ஒரே குழுவில் வைக்க வேண்டும்.
  •  அக்குழுவிற்கு ஒரே செயல்திட்டம் இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் ஒரே மேலாளரின் கீழ் பணியாற்ற வேண்டும்.
  •  ஒரே நோக்கத்தினைக் கொண்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஒரே செயல்திட்டம் இல்லாமல் இருக்குமாயின் அந்நோக்கம் நிறைவேறாமல் போகலாம்.

6.பொது நலனுக்காக தனி நலம் புறக்கணிக்கப்படல் வேண்டும் .
  • நிர்வாகம் தனிப்பட்ட ஆதாயங்களை ஒதுக்கி வைத்து விட்டு நிறுவனத்தின் நோக்கங்களை மட்டுமே முன் நிறுத்த வேண்டும்.
  • எனவே, தனிப்பட்ட நபர்களின் தனி நலனை விட தொழில் நிறுவனத்தின் நோக்கமே அனைத்தையும் விட மேம்பட்டிருக்க வேண்டும்.

7) நாதியம்

  • ஊதியம் என்பது, பணியாளர்களின் பணிக்கு கொடுக்கப்படும் விலையாகும். 
  •  பணியாளருக்கு கொடுக்கப்படும் ஊதியமே தொழிலாளர்களை ஊக்குவிக்கும் முதன்மையான ஊக்குவிய்பவனாக இருந்து உற்பத்தியை அதிகரிப்பதால், அவர்களுக்கு போமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
  • ஊதியத்தின் அளவு மற்றும் ஊதிய வழிமுறைகள் நியாயமானதாகவும், சரியானதாகவும் அவர்களின் முயற்சிக்கு ஏற்றதாகவும் இருக்கவேண்டும். 
8) மையப்படுத்தலின் தரம்
  • தொழில் நிறுவனத்தின் அளவைப் பொறுத்து மைய நிர்வாகத்தின் அதிகாரம் செலுத்தும் நிலை இருக்கவேண்டும் .
  • முடிவெடுக்கும் அதிகாரம் நிர்வாகத்தின் உயர்மட்டத்தில் குவிந்து கிடப்பதையே மையப்படுத்தல் வெளிப்படுத்துகின்றது.
9) ஆணையுரிமை வரிசை: தாவரிசைத் தொடர்
  • ஆணையுரிமையின் வரிசை உயர்மட்ட அலுவலரிடமிருந்து, கீழ்மட்டத்தில் உள்ள பணியாளர் வரை படிப்படியாக கீழ்நோக்கி வருவதை குறிக்கும்.
  •  உயர்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை அனைத்து மேலாளர்களையும் அனைத்து மட்டங்களிலும் இணைப்பதன் மூலம் அதிகாரப்பூர்வமான தெளிவான ஒரு ஆணையுரிமை வரிசை இருக்கவேண்டும் என்பதை இக்கோட்பாடு விளக்குகின்றது.
10.முறைமை
  • அதிகாரப்பூர்வ செயல்முறைகள் வழியாக ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் பொருள் முறைமை பணியிடத்தில் பாதுகாப்பையும் உற்பத்தித் திறனையும் உறுதிப்படுத்தவேண்டும்.
  • முறைமை என்பது, ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். நிறும விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்கவேண்டும்.
11.நேர்மை நெரி

  • இக்கோட்பாட்டின்படி, பணியாளர்கள் அன்புடன் நடத்தப்பட வேண்டும் மற்றும் பணியிடத்தில் நீதிமுறை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  • மேலாளர்கள் எல்லாப் பணியாளர்களையும் எவ்வித வேறுபாடுமின்றி நியாயமாக பாகுபாடின்றி ஒரே நிலையில் சமமாகப் பாவித்து -த்தப்பட வேண்டும் .
  • அனைத்துப் பணியாளர்கள் மீதும் சமமான கவனம் செலுத்தப்பட வேண்டும் 
12.பணியாளர்களின் காலவரையறையின் நிலைத்தன்மை.
  •  இக்கோட்பாட்டின்படி, ஒரு தொழில் நிறுவனம் செம்மையாக இயங்கவேண்டுமெனில், பணியாளர்கள் குறிப்பாக மேலாண்மைப் பணியாளர்கள்) அடிக்கடி நியமனம் பெறுவதும் வேலையை துறந்து விட்டுச் செல்வதும் நிகழக் கூடாது

13) தன் மயற்சித் திறன் 
  • பணியாளர்களின் தன்முயற்சித்திறனை ஊக்குவிப்பதன் தொழில் நிறுவனத்தை பலப்படுத்தவும் புதிய வழிமுறை அறிமுகப்படுத்தவும் முடியும்.
  • தொழிலாளர்களுக்கு திட்டம் தீட்டவும், அத்திட்டத்தை செயல்படுத்தவும் தன்னுரிமை அளிப்பதன் மூலம் நிறுவனத்தின் திறனை உயர்த்த வழி ஏற்படுகின்றது.புதிய மற்றும் சிறந்த கருத்துக்களை தொழிலாளரிடமிருந்து பெற முடிகின்றது.
  •  இதன்மூலம் தொழிலாளர்களை தொழில் நிறுவனத்தின் பணிகளில் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்கச் செய்யமுடியும்

14) குழு பிணைப்புணர்ச்சி குழு
  •  ஒற்றுமை இக்கோட்பாட்டின்படி, மேலாளர்கள் பணியிடத்தில் தனித்தனியாகவும், சமூகமாகவும் பணியாளர்க்கிடையில், ஒற்றுமையை வளர்ப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
  • ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும், ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை ஏற்படும் சூழலை உருவாக்குவதற்கும் இது உதவும் குழு ஒற்றுமை உணர்வு குறித்த பணியை குறித்த கால நேரத்திற்குள் செய்து முடிக்க உதவுகிறது.
5.மேலாண்மை வீச்செல்லையின் தாக்கங்களை விளக்குக .
  • ஒரு உயர் அலுவலரால் திறமையாக மேலாண்மை செய்யப்படும் கீழ்ப்பணியாளர்களின் எண்ணிக்கையை மேலாண்மையின் வீச்செல்லையை குறிக்கின்றது .
  •  மேலாண்மையின் பரப்பளவு என்பது, மேலாளரின் கீழ் நேரடியாகப் பணியாற்றும் கீழ்பணியாளர்களின் அளவு ஆகும் .
  •  மேலாண்மையின்பரப்பு என்பது இரண்டுடன் தொடர்புடையது.
  • தனிப்பட்ட மேலாளர்களின் பணியில் உள்ள மனோபாவத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது தொழில் நிறுவனத்தின் கட்டமைப்பை தீர்மானிக்கின்றது. மேலாண்மையின் பரப்பு என்பது, நிர்வாகக் கட்டமைப்பின் கிடைமட்ட நிலைகளோடு தொடர்புடையது.
  • மேலாண்மையின் விச்செல்லையானது, பரந்த மற்றும் குறுகிய தன்மை உடையது பரந்த அளவுள்ள மேலாண்மைப் பரப்பில் குறைவான அதிகாரப் படிநிலை மட்டங்கள் இருக்கும் .
  •  தொழிலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு என்பது, பெயரளவில் இருக்கும் அது போலவே குறுகிய மேலாண்மைப் பரப்பில் அதிகாரப் படிநிலை மட்டங்கள் மிகுந்து இருக்கும்.
  • அமைப்பின் கூட்டமைப்பு உயரமாகஇருக்கும். இரண்டு நிறுவனக் கட்டமைப்புகளும் தத்தமது நன்மைகள் மற்றும் குறைபாடுகளைக் கொண்டு இருக்கின்றது எனினும் உயரமான நிறுவனக் கட்டமைப்பு என்பது சவால்களை சுமத்துகின்றது.
  • குறுகிய பரப்பில் கீழ்ப்பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால் அதிகமான மேலாளர்களை நியமனம் செய்யவேண்டி உள்ளது இதனால் அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கவேண்டிய நிலையில் இது அதிகம் செலவு பிடிக்கும் நிலையாகக் கருதப்படுகின்றது.
  •  அதிகாரப் படிநிலை மட்டங்கள் மிகுந்து இருந்தால், தகவல் தொடர்பு பெருமளவு பாதிக்கப்படும் நிலைக்குச் செல்ல மிகுந்த காலதாமதம் ஏற்பட்டு, அதனைச் செயல்படுத்துவதிலும் மிகுந்தகால தாமதம் ஏற்படுகின்றது. உயர்மட்ட நிர்வாகத்திலிருந்து மற்பார்வைகள் நெடுந்தொலைவு விலகி இருப்பதால் ஒருங்கிணைத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் இல்லாமல் போய்விடுகின்றது .
  • இந்த கட்டமைப்பை பயன்படுத்துவதன் மூலம் குறுக்குத் தொடர்பு வசதிகள் எளிதாகின்றது மேற்பார்வை பணியாளர்கள் உயர்மட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்வது எளிதாகின்றது பணி உயர்வு வாய்ப்புகள் அதிகரித்து பல்வேறு வேலை நிலைகள் கிடைக்கும் தன்மை உள்ளது.
  •  சமமட்டமான அமைப்புக் கட்டமைப்பில் பரப்பளவு அதிகமாக உள்ளதால், மேலாளருக்கும் கிழ்ப்பணியாளர்களுக்கும் இடையிலான மேற்பாரிவைத் தொடர்பு சிக்கலாகின்றது.
  • மேலாளர்களுக்கு தன்கீழ் பணியாற்றும் பெரும் எண்ணிக்கையிலான கீழ்ப்பணியாளர்களை நிர்வகிப்பது மிகவும் சிரமமாகின்றது.
  •  ஒரே நேரத்தில் அனைத்து கீழ்ப்பணியாளர்களின் பணித்திறனையும் கவனிக்க இயலாது எப்படி இருப்பினும் பரந்த மேலாண்மைப் வீச்செல்லையில் மேலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு அதிகாரப் படி நிலைமட்டங்கள் குறைவதுடன், உயர் அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் சேமிக்கப்படுகின்றது.
  • இதன்மூலம் கண்டிப்பான மேற்பார்வை தளர்ந்து, கீழ்ப்பணியாளர்கள் தாங்கள் தளர்த்தப்பட்ட பணிச்சூழலில் பணி புரிவதாக உணர்கிறார்கள் *
  • இதன் மூலம், சுதந்திரமான சுற்றுச் சூழலில் உற்சாகத்துடன் பணிபுரியும் மனநிலையை வளர்க்கின்றது.




Post a Comment

0 Comments

Ad Code