பாடநூல் வினாக்கள்
1.கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது
அ) பொருளின் எடை
இ) பொருளின்நிறை
ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்
ஈ) அ மற்றும் ஆ
2.கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமமானது
அ) உந்த மாற்று வீதம்
இ) உந்த மாற்றம்
ஆ) விசை மற்றும் கால மாற்ற வீதம்
ஈ) நிறை வீத மாற்றம்
3.கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது
அ) ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்
இ) அ மற்றும் ஆ
ஈ) சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்
4.உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
அ) கணத்தாக்குவிசை
இ) விசை
ஆ) முடுக்கம்
ஈ) விசை மாற்றவீதம்
5. விசையின் சுழற்சி விளைவு கீழ்க்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது
அ) நீச்சல்போட்டி
இ) சைக்கிள் பந்தயம்
ஆ) டென்னிஸ்
ஈ) ஹாக்கி
6. புவி ஈர்ப்பு முடுக்கம் ஏன் அலகு ms-² ஆகும். இது கீழ்க்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்
அ) Cms-¹
இ)N m² kg-¹
ஆ) 9.8x10²N
ஈ) 980 டைன்
7.ஒரு கிலோகிராம் எடை என்பது_____ற்கு சமமாகும்
அ)9.8 டைன்
ஆ) NKg-¹
இ) 98 x 10⁴N
ஈ) cm‐ ²s
8. புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு
அ) 4M
இ) M/4
ஆ) 2M
ஈ) M
9.நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருள்களின் எடையானது
அ) 50% குறையும்
இ) 25% குறையும்
ஆ) 50% அதிகரிக்கும்
ஈ) 300% அதிகரிக்கும்
10.ராக்கெட் ஏவுதலில்______விதி/கள் பயன்படுத்தப்படுகிறது
அ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
இ) நேர் கோட்டு உந்த மாறாக் கோடுட்பாடு
ஈ) அ மற்றும் இ
விடைகள்:
1.இ )பொருளின் நிறை
2.இ)உந்த மாற்றம்
3.இ)அ மற்றும் ஆ
4.இ)விசை
5.இ) சைக்கிள் பந்தயம்
6.ஆ) NKg-¹
7.இ) 98 X 104 டைன்
8.ஈ) M
9.ஈ) 300% அதிகரிக்கும்
10.ஈ )அ மற்றும் இ
கூடுதல் வினாக்கள்
11.ஒவ்வொரு பொருளும் தன்மீது சமன் செய்யப்படாத புறவிசை ஏதும் செயல்படாத வரையில் தனது ஓய்வு நிலையையோ, நேர்க்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை
அ) உந்தம்
ஆ) நிலைமம்
இ) திருப்புத்திறன்
ஈ) கணத்தாக்கு
12. விசையானது______ கொண்ட ஓர் வெக்டர் அளவாகும்.
அ) எண்மதிப்பு மட்டும்
ஆ) திசை மட்டும் கொண்ட
இ) எண்மதிப்பும் திசையும்
ஈ) இவை எதுவுமில்லை
13.கீழ்க்கண்ட நியூட்டனின் இயக்க விதிகளில் எது விசை மற்றும் நிலைமத்தை விளக்குகிறது
அ) நியூட்டனின் முதல் விதி
ஆ)நியூட்டனின் இரண்டாம் விதி
இ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஈ) வெப்ப இயக்கவியலின் சுழிய விதி
14.கிணற்றில் இருந்து நீர் எடுக்க செயல்படும் விசை
அ) சமன் செய்யப்பட்ட விசை
ஆ) சமன் செய்யப்படாத விசைகள்
இ) இணைவிசைகள்
ஈ) தொகுபயன் விசைகள்
15.கீழ்க்கண்டவற்றில் இரட்டைகளின் திருப்புத் திறனுக்கு எடுத்துக்காட்டு
அ) நீர் குழாய் திறத்தல்
இ) பம்பரத்தின் சுழற்சி
ஆ)திருகின் சுழற்சி
ஈ) இவை அனைத்தும்
16. கீழ்க்கண்டவற்றில் நியூட்டனின் இரண்டாவது இயக்க விதியை விளக்கும் வாக்கியம்
அ) விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்த்தகவில் அமையும்.
ஆ) இவ்விதி விசையின் எண்மதிப்பை அளவிட உதவுகிறது
இ) விசை முடுக்கத்தினை ஏற்படுத்துகிறது
ஈ) மேற்கண்ட அனைத்தும் நியூட்டனின் இரண்டாவது இயக்க விதியை விளக்குகிறது.
16.நியூட்டனின் இரண்டாவது இயக்க விதியை இவ்வாறு அழைக்கலாம்.
அ) விசையின் விதி
ஆ) நிலைமத்தின் விதி
ஈ) உந்த மாறா விதி
இ) கணத்தாக்கு விதி
18. 1 kg f- ன் மதிப்பு
அ) 980 N
இ) 9.8 N
ஆ) 98 N
ஈ) 9.8 டைன்
19.கணத்தாக்கு (1) ன் மதிப்பு
அ) விசை மற்றும் கால அளவின் பெருக்கற்பலன்
ஆ) நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன்
இ) நிறை மற்றும் முடுக்கத்தின் பெருக்கற்பலன்
ஈ) விசை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன்
20.இரு நிறைகளுக்கு இடைப்பட்ட விசை
அ) எப்போதும் ஈர்ப்பு விசையாகும்
ஆ) எப்போதும் விலக்கு விசையாகும்
இ) ஈர்ப்பு விசையாகவோ அல்லது விலக்கு விசையாகவோ இருக்கும்
ஈ) கணிக்க முடியாது
21.இரு நிறைகளுக்கு இடைப்பட்ட விசை
அ) நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது
ஆ) நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது அல்ல
இ) ஊடகத்தை சார்ந்தோ அல்லது சாராமலோ இருக்கலாம்
ஈ) இவை எதுவுமில்லை
11 முதல் 21 வரை விடைகள்
11.ஆ) நிலைமம்
12.இ) எண்மதிப்பும், திசையும்
13.அ) நியூட்டனின் முதல்விதி
14.ஆ)சமன் செய்யப்படாத விதிகள்.
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
1. இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு ____________ தேவை.
2. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் தீடீர்
தடை ஏற்பட்டால், பயணியர் முன்நோக்கி
சாய்கின்றனர். இந்நிகழ்வு ____________ மூலம்
விளக்கப்படுகிஇருக்கும்.
3. மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் __________
குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் __________
குறியிலும் குறிக்கப்படுகிறது.
4. மகிழுந்தின் சக்கரத்தின் சுழற்சி வேகத்தினை
மாற்ற ____________ பயன்படுகிறது.
5. 100 கிகி நிறையுடைய மனிதனின் எடை
புவிப்பரப்பில் ____________ அளவாக இருக்கும
I.சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை
திருத்துக)
1. துகள் அமைப்பில் ஏற்படும் நேர்க்கோட்டு உந்தம் எப்போதும் மாறிலியாகும்.
2. பொருளொன்றின் தோற்ற எடை எப்போதும் அதன் உண்மையான எடைக்கு சமமாக இருக்கும்.
3. பொருட்களின் எடை நிலநடுக்கோட்டுப்பகுதியில் பெருமமாகவும், துருவப்பகுதியில் குறைவாகவும் இருக்கும்.
4. திருகு மறை (Screw) ஒன்றினை குறைந்த கைப்பிடி உள்ள திருகுக்குறடு (spanner) வைத்து திருகுதல், நீளமான கைப்பிடி கொண்ட திருகுக்குறடினை வைத்து திருகுதலை விட எளிதானதாகும்.
5. புவியினை சுற்றிவரும் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர், புவிஈர்ப்பு விசை இல்லாததால் எடையிழப்பை உணர்கிறார்.
IV. பொருத்துக
பகுதி II
அ) நியூட்டனின் முதல் விதி- ராக்கெட் ஏவுதலில் பயன்படுகிறது.
ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி- பொருட்களின் சமநிலை
இ) நியூட்டனின் மூன்றாம் விதி -விசையின் விதி
ஈ) நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி -பறவை பறத்தலில் பயன்படுகிறது.