10TH STANDARD 3 MARKS QUESTIONS & ANSWERS - பத்தாம் வகுப்பு - 3 மதிப்பெண் வினாக்கள் - சிறுவினா | Katrathu Kalvi | samacheer Kalvi Guude

சிறுவினா
  
இயல் -8                  ப.எண் :198


1.  சங்க இலக்கியங்கள் காட்டும்  அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே   என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக .


        சங்க இலக்கிய  அறங்கள்  இயல்பானவை  "  கவிதை வாழ்க்கையில் திறனாய்வு " என்று திறனாய்வாளர் ஆர்னால்டு  கூறுகிறார் .  அவை இன்றைக்கும் சூழலுக்கு ஏற்ப மிகவும் தேவையே .

1.  வணிக நோக்கம் கொள்ளாமை :
அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது .  இப்பிறவியில் அறம் செய்தால் மறுபிறவியில்  அதன் பயனைப் பெறலாம் என்ற எண்ணம்  கூடாது . அறம் செய்வதே மேன்மை தரும்  என சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது .
2. அரசியல் அறம்  :
அரசன் செங்கோல் போன்ற நேரிய ஆட்சியை  மேற்கொள்ள வேண்டும் . நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவு பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வது அரசனின் கடமையாகச்  சொல்லப்பட்டது .
3. அவையம் :
அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்குத்  துணைபுரிந்தன . இதில் மதுரை அவையம்  துலாக்கோல் போல 
  நடுநிலை மிக்கது என்கிறது .
4. போர் அறம் :
தமிழர் ,  போரில் மழை நீரை பின்பற்றினர் . வீரமற்றோர்,  புறமுதுகிட்டோர் ,  சிறார் ,  முதியோர் ஆக் இவரை எதிர்த்துப் போர் செய்யாமை ஆகும் .
5. கொடை :
அரியன என்று கருதாது ,  தயங்காது கொடுத்தலும்  ஈதலால் வரும் இழப்புக்கு  வருந்தாமையும் நாள்தோறும் கொடுத்தலும் கொடைப் பொருள்களாகப் பேசப்படுகின்றன .
6.  உதவி :
* பிறருக்கு உதவி செய்வதை சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன .
* பிறரைப் பற்றிச்  சிந்திக்கும் நிலை .
*" உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் "  என்கிறார் நல்வேட்டனார் .
7.  வாய்மை :
* வாய்மை சிறந்த அறமாக சங்க இலக்கியங்கள் பேசுகின்றன .
* " பிழையா நன்மொழி " என நற்றிணை குறிப்பிடுகிறது .
* நிலம் புடை பெயர்ந்தாலும் பொய் சொல்லக்கூடாது என்பது பல பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன .
*  சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் ஒரு மனிதன் தனியாகவும் சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கு அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும்  உதவும் விதிமுறைகள் எனலாம் .


2.    ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக .

1 . அடிகள் தோறும் நான்கு சீர்களைய் பெற்று வரும்.
2 .  இயற்சீர் ( மாச்சீர்,   விளச்சீர்)  பயின்று வரும் .பிற சீரும் வரும் . ஆனால் வஞ்சியுரிச்சீர் வரா.
3. ஆசிரியர் தலைகள் பயின்று வரும் . பிற தலைகள் கலந்துவரும் .
4. மூன்றடி சிற்றெல்லையும் , பாடும் புலவரின் மனக் கருத்திற்கேற்ப பல அடிகளை பெற்றும் வரும் .
5. அகவலோசை பெற்று வரும் .
6. ஈற்றடி ஈற்றுச் சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு .

3. ' சுற்றுச்சூழலை பேணுவதே இன்றைய அறம் ' என்ற தலைப்பில் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில்பேசுவதற்காக உரைக் குறிப்பு ஒன்றை உருவாக்குக . ( குறிப்பு -  சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும்  ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ) 


  சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்

உரைக்குறிப்பு :
 
   சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாப்பதே மனிதன்  நோயின்றி வாழ்வதற்கு  சிறந்த வழியாகும் .
இன்றைய உலகில்  நிலம் ,  நீர் ,  காற்று ,  ஒலி  என அனைத்தும் மாசுபட்டு காணப்படுகிறது .   இவை அனைத்தும் மனிதர்களுக்கு தீமை உண்டாக்கும் .
நெகிழி எனப்படும்  பிளாஸ்டிக்கினால்  நிலம் மாசடைகிறது . மேலும் பூச்சிக்கொல்லி ,  செயற்கை உரங்கள்  போன்றவை  மண்ணின் தன்மையை மாசடையச் செய்கிறது .
தொழிற்சாலை கழிவுகளால் நீர் மாசடைகிறது .
வாகனங்கள் ,   தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகள் ,  நெகிழிப் பொருட்களை எரிப்பதால் போன்றவற்றால் காற்று மாசடைகிறது .
வாகனங்கள் எழுப்பும் ஒலிகள்  இரைச்சலாக மாறி  மனிதர்களுக்கு தீங்கிழைக்கிறது .

  இவை அனைத்தையும்  தடுப்பதற்காக   மத்திய அரசும் மாநில அரசும்   பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளது .
இவை அனைத்திற்கும் காரணம் மனிதர்களின் அறியாமையே .  அறியாமையை நீக்கி  ஒவ்வொருவரின் உள்ளத்திலும்  விழிப்புடன் செயல்பட்டால்   சுற்றுச்சூழலை பாதுகாக்க இயலும் .



4. வாளித் தண்ணீர் ,  சாயக்குவளை ,  கந்தைத் துணி ,  கட்டைத் தூரிகை -  இச்சொற்களை தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க .

   வீட்டின் சுவர்கள் ,  ஜன்னல்கள்  போன்றவை சுத்தம் செய்ய  வாளித் தண்ணீர் கொண்டு  சுத்தம் செய்து  ,  கந்தைத் துணியால்  அவற்றைத்  துடைத்துச் சுத்தம் செய்ய  வேண்டும் .
பிறகு  சாயக்குவளையிலுள்ள சாயத்தைக்  கட்டை தூரிகைக் கொண்டு   சாயம் பூசுவது   வீட்டைப் புதிதாக்கியது போல்  மிகவும்   அழகாக இருக்கும்


````````````````````````````````````````````````````````````````````````````````

சிறுவினா
இயல்  -9            ப.எண் : 224


1 . " சித்தாளின்  மனச் சுமைகள்
      செங்கற்கள் அறியாது "  -  இடஞ்சுட்டிப் பொருள் தருக .

இடம்  : 
       நாகூர் ரூமி  எழுதிய " சித்தாளு "  என்ற கவிதையில்  இடம்பெற்றுள்ளது .

பொருள் :
        சித்தாளின் வாழ்வில்  பல துயரங்கள் நிகழ்ந்தாலும் ,  அவளின் மனச் சுமைகளைத்  தலையில் சுமக்கும் செங்கற்கள் அறியாது .
விளக்கம் :
      அடுத்த வேளை உணவுக்காக  செங்கற்களைச் சுமக்கும்  சித்தாளுக்கு மரணம் கூட சிறிதளவே சலனத்தை ஏற்படுத்தும் .   பல இன்னல்களுக்கு  நடுவே ,  அவளின் மனச் சுமைகளை  தலையில் பாரமாகச் சுமக்கும் செங்கற்கள் அறியாது  எனக்  கவிஞர் குறிப்பிடுகிறார் .

2. ஜெயகாந்தன்  தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக்  குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார் . இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல்  ஒன்றைத் தர்க்கத்திற்கு அப்பால் கதைமாந்தர் வாயிலாக விளக்குக .

*   ஜெயகாந்தனின் " தர்க்கத்திற்கு அப்பால் "  கதையில்   கதையின் நாயகர் தம் வெற்றியை கொண்டாட   ஒரு வெள்ளி ரூபாயை எப்படி செலவு செய்யலாம் என யோசிக்கிறார் .
*  ஒரு ரூபாயின் 16  அனாவில் , 
12 அணாவை பில்லுக்கு வைத்துவிட்டு ,
2 அணாவுக்கு காபி குடித்து ,
மீதி 2  அனாவை  குறிப்பு பிச்சைக்காரனுக்கு தர்மம் செய்கிறார் .

* பில்லுக்கு வைத்து 12 அணாவில்  பணம் செய்ய வழியில்லாமல்   இரயில் கட்டணம்13 அணா என்றதால்  வேறுவழியின்றி  பிச்சைக்காரனுக்கு போட்ட 2 அணாவிலிருந்து 1 அனாவை   எடுத்துக் கொள்ளலாம் என்று   யோசித்தார் .

*  பிச்சைக்காரனிடம் திருடுவதா  !! என்ற குற்ற உணர்வுடன் 1 அணாவைப்  போட்டு 2  அணாவை எடுக்கும்போது  "  பிச்சைக்காரனின் குருட்டு விழிகள்  வெறிக்க , வாயால் சபிப்பது போல்  ,  இதுதான் தர்மமா ?  குருடனை ஏமாற்றாதே ! நரகத்துக்குத்தான் போவே "  என்கிறார் .

*  கையிலிருந்த  1அணாவையும்   போட்டுவிட்டு ,  தர்மம் செய்பவன் "  தனக்குள்ளே எப்போதும் தர்க்கம் செய்யும் "  மனப்பான்மையோடு இருக்கிறான்  என்ற தோல்வியை ஏற்றுக்கொண்டு   நடைப்பயணம் மேற்கொள்கிறார் .

*  சாதாரண மனிதனின் இயல்பான உணர்வுகளை   இக் கதை மாந்தர் மூலம் ஜெயகாந்தன்  விளக்குவதை   அசோகமித்திரன்  குறிப்பிடுகிறார் .


3. எவையெல்லாம் அறியேன் என்று கருணையின் கூறுகிறார் ?

* கருணையின் உயிர் பிழைக்கும் வழி அறியேன் .
* உடலின்  தன்மையை அறியேன் .
* உடலுக்கேற்ற உணவைத்தேடி  கொணரும் வழி  வகைகளை அறியேன் .
* காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்  என்று கருணையன் கூறுகிறார் .


4. கவிஞர் தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு  தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக .

  தற்குறிப்பேற்ற அணி :
  
தன் + குறிப்பு +  ஏற்றம் +அணி
   

     இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன்  குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும் .
 எ.கா :
  ' பெருழந் தெடுத்த ஆரெயில் 
நெடுங்காடு
 ' விரல் என்பதுபோல் மறித்துக்கை  காட்ட '


பாடலின் பொருள் :
    கோட்டை  மதில்மேல் இருந்த கொடியானது  வரவேண்டாம் என தடுப்பது போல , காட்டியது என்பது பொருள்.


அணிப் பொருத்தம் :
 
     கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்ற பொழுது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன . ஆனால் , இளங்கோவடிகள்  கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி  அக்கொடிகள் கையசைத்து  ' இம் மதுரைக்குள்  வரவேண்டா '   என்று தெரிவிப்பது போலக்   காற்றில் அசைவதாகத் தன் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார் .

       இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும் .



--------------------------------------------------------