10th Tamil "புயலிலே ஒரு தோணி" கட்டுரை,

10th Tamil puyalile oru thoni katurai


"புயலிலே ஒரு தோணி" கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

10th Tamil "புயலிலே ஒரு தோணி" நெடுவினா.

10th Tamil "புயலிலே ஒரு தோணி" கட்டுரை

குறிப்புச் சட்டம்:

முன்னுரை,

புயல் வருணனை ,

அடுக்குத்தொடர் ,

ஒலிக்குறிப்பு ,

முடிவுரை.

முன்னுரை:

          மனித வாழ்க்கை போல இயற்கையும் இன்பம் துன்பம் நிறைந்தது. அந்த வகையில் 'புயலிலே ஒரு தோணி' என்ற புதினத்தில், பா.சிங்காரம் எழுதியுள்ள வருணனை, அடுக்குத்தொடர் மற்றும் ஒலிக்குறிப்பும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

 புயல் வருணனை:

            கொளுத்தும் வெயில் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டது. பாண்டியன் அண்ணாந்து பார்த்தான். மேகங்கள் கும்மிருட்டு ஆனது. காற்றில்லாமல் ஒரே இறுக்கமானது, இடிமுழக்கத்துடன் மின்னல் வானத்தைப் பிளந்தது. வானம் உடைந்து. வெள்ளம் கொட்டியது. சூறாவளி ஆடிக்குகக்கியது.வானுடன் கடல் கலந்துவிட்டது, மழை தெரியவில்லை, கடல் வெறிக் கூத்தாட்டத்தால் தொங்கான் மூழ்கி சிப்பங்கள் கடலில் நீந்துகின்றன. வானம், கடல், காற்று, மழை ஒன்று சேர்ந்து கூக்குரலிட்டது வானம் பிளந்து நெருப்பைக் கக்கியது

அடுக்குத்தொடர்:

தொங்கான் நடுநடுங்கித்தாவிதாவிகுதிகுதித்தது, பிறகு தொங்கான குதித்து விழுந்து நொறுநொறு என்று நொறுங்கியது. சுழன்று கிறுகிறுத்துக் கூத்தாடியது.

ஒலிக்குறிப்பு;

        தொங்கான் தாவி விழுந்தது, சுழல்கின்றது. கடலில் சிலுசிலு மரமரப்பு கொய்ங் புய்வ், ஙொய்ங் புயல் என இடி முழக்கம் செய்ய சீனப் பிசாசுகள் தாவி வீசுகின்றன. பகல் இரவாகி உப்புக் காற்று உடலை வருடியது. . புயலுக்குப் பின்னால் ஐந்தாம் நாள் கரை தென்பட்டது. அடுத்த நாள் முற்பகல் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள். பிலவானிலிருந்து சுமத்ராவரை புயல் இப்படிப் பயமுறுத்தியது.இத்தகைய வருணனையோடு புயலில் தோணி படும்பாட்டை அழகாய் விவரிக்கின்றார் பா.சிங்காரம்.



10th Tamil puyalile oru thoni neduvina