9th Tamil Memory Poem ஒன்பதாம் வகுப்பு தமிழ் மனப்பாட செய்யுள்
ஒன்பதாம் வகுப்பு தமிழ்
மனப்பாட செய்யுள்
கவிதைப்பேழை
தமிழ்விடு தூது
பெரியபுராணம்
புறநானூறு
ஓ,.என் சமகாலத் தோழர்களே
உயிர்வகை
சிறுபஞ்சமூலம்
அறிவுடையார் தாமே உணர்வர்
இராவண காவியம்
மருதம்
ஒன்பதாம் வகுப்பு தமிழ்
மனப்பாட செய்யுள்
சீவக சிந்தாமணி
தலைவாங்க விளைந்த நெல் பயிர்
சொல் அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.
முத்தொள்ளாயிரம்
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ புள்ளினம் தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு.
யசோதர காவியம்
ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே.
அக்கறை
சைக்கிளில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே பழங்களை விடவும்
வேலை இருப்பதாய்க்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
நடுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை
-கல்யாண்ஜி*************************