Ad Code

10th result today

 எஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்



சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. தேர்வாணைய இணையதளம் மற்றும் பள்ளிகள் மூலமாகவும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். மாணவர்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் மதிப்பெண் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 17 முதல் 21ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரிடம் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்களில் குறைகள் இருந்தால் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடையவே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்ச்சி விகிதமும், மதிப்பெண் பட்டியலும் இன்று வெளியானது. காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர் தங்களின் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge 1.tn.nic.in உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாக பார்த்து தெரிந்து கொண்டனர். மதிப்பெண் விபரங்கள் எஸ்எம்எஸ் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 17 முதல் 21ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரிடம் பெற்று கொள்ளலாம்.

எஸ்எஸ்எல்சி தேர்வு வரலாற்றில் முதன்முறையாக மாணவிகளை முந்திய மாணவர்கள் - எல்லோரும் ஆல் பாஸ்

கொரோனா வைரஸ் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் மற்றும் அவர்களின் வருகைப்பதிவேடு ஆகியவற்றை கணக்கில் கொண்டு தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்களில் குறைகள் இருப்பில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அரசு தேர்வுகள் இயக்கத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  







Post a Comment

0 Comments

Ad Code