Ad Code

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்தும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்தும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 


இந்நிலையில், அடுத்த மாதம் இறுதிக்குள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் முடிவுகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 27-ஆம் தேதி 12ஆம் வகுப்பு மறுதேர்வு நடைபெற உள்ளது.இந்த தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறினார். 

மேலும், தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்ட பிறகு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments

Ad Code