Ad Code

+2 மறுகூட்டல் மறுமதிப்பீடு விடைத்தாள் நகல்

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியான நிலையில் மறுகூட்டல் மறு மதிப்பீடு மற்றும் விடைத்தாள்களை பெறுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியாகும் அன்றே இந்த விவரங்கள் அளிக்கப்படுவது வழக்கம்.


இந்த நிலையில் அரசு தேர்வுகள் துறை அது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் வாயிலாகவும் மறுகூட்டல் மறுமதிப்பீடு விடைத்தாள் நகல்களை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆன்லைனில் www.dge.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் நாளை முதல் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code